- Advertisement -
Homeஜோதிடம்ராசி பலன் | Indraya rasi palanஇன்றைய ராசிபலன் – 03 நவம்பர் 2026

இன்றைய ராசிபலன் – 03 நவம்பர் 2026

- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்கள் இன்று திறமையாக செயல்படுவீர்கள். சுறுசுறுப்பாக இருப்பீர்கள். வெற்றி வாகை சூட கூடிய நாளாக இருக்கும். காரிய தடை விலகும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். வீட்டில் இருப்பவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய, தேவையான அளவு பணம் கையை வந்து சேரும். இறை நம்பிக்கை அதிகரிக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் அதிகரிக்கும். வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும். வாரா கடன் வசூல் ஆகும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வேலையிலும் வியாபாரத்திலும் டென்ஷன் குறையும். நிம்மதி கிடைக்கும். நீண்ட தூர பயணங்களால் கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்கள் இன்று நிம்மதியாக உங்களுடைய வேலைகளை பார்ப்பீர்கள். தேவையான அளவு ஓய்வு இருக்கும். நிறைய நேரம் மிச்சமானது போல தோனும். தேவையற்ற அலைச்சல் குறையும். காரிய தடை விலகும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். நல்லதே நடக்கும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று கவன குறைவு இருக்கக் கூடாது. சின்ன சின்ன மறதியால் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. முக்கியமான வேலைகளை ஒரு பேப்பரில் எழுதி வைத்துக் கொள்வது நல்லது. எந்த இடத்திலும் அதிகம் பேசாதீர்கள். வேலையில் உங்களுடைய திறமையை காண்பியுங்கள். நிச்சயம் உங்களுக்கான மதிப்பு மரியாதையும் உயரும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கோபம் கொஞ்சம் அதிகரிக்கும். தேவை இல்லாத டென்ஷன் வரும். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன பின்னடைவு வரலாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வயதானவர்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்களுக்கு கல்வியில் அலட்சியம் வேண்டாம்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். திறமை வெளிப்படும். தேவையான அளவு பணம் கையில் இருக்கும். பண்டிகையை கொண்டாட வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுப செலவுகள் ஏற்படும். கடன் சுமை குறையும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். இறைவழிபாடு செய்வது மனதிற்கு அமைதியை தரும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். முருகர் வழிபாடு செய்வது சந்தோஷத்தை கொடுக்கும். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் சரியாகும். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வீண் விரைய செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. விலை மலிவாக கிடைக்கிறது என்பதற்காக பொருட்களை வாங்காதீங்க. முன்பின் தெரியாத நபரிடம் ஏமாற வாய்ப்பு உள்ளது ஜாக்கிரதை.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும். அதே சமயம் ஏமாற்றம் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. இன்று உங்களுடைய கடமைகளை செய்யுங்கள். பலனை எதிர்பார்க்காதீர்கள். கூடுமானவரை நீண்ட தூர பயணங்களை குறைத்துக் கொள்ளுங்கள். அதிக நேரம் கைப்பேசி பார்த்து நேரத்தை வீணடிக்க கூடாது.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். வியாபாரத்தை விரிவு படுத்தலாம்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் இன்று பொறுமையாக இருக்க வேண்டும். சிந்தித்து செயல்பட வேண்டும். மூன்றாவது நபரை பற்றி குறை கூறிக் கொண்டே இருக்கக் கூடாது. பேசுவதை குறைத்துக் கொண்டாலே இன்று பிரச்சனையும் பாதி சரியாகும். சேமிப்பை உயர்த்துவது நல்லது. வீண் விரைய செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று லாபமான நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். ஆனால் உயர் அதிகாரிகளின் ஆதரவை முழுமையாக பெற முடியாது. உங்களுடைய கடமையிலிருந்து தவறாமல் நடந்து கொள்கிறீர்கள். பிரச்சனைகள் வந்தாலும் சமாளிக்கும் தெம்பும் தைரியமும் வெளிப்படும். இறை நம்பிக்கை மனதிற்கு ஆறுதலாக இருக்கும்.

சற்று முன்