மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று தன்னம்பிக்கை தைரியம் அதிகரிக்கும். மன உறுதியோடு செயல்படுவீர்கள். மனதில் பட்ட விஷயங்களை வெளிப்படையாக பேசுவீர்கள். நீண்ட நாள் மனக்கசப்பு சரியாகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். மன நிம்மதி கிடைக்கும். இரவு நல்ல தூக்கத்தை பெறுவீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று கூடுதல் கவனம் தேவை. வேலையிலும் வியாபாரத்திலும் அக்கறையோடு செயல்பட வேண்டும். சின்ன சின்ன மறதி வருவதற்கு வாய்ப்பு உள்ளது. முக்கியமான வேலைகளை ஒரு பேப்பரில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று போராட்டம் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நிறைய எதிர்ப்புகள் வரலாம். காரிய தடை வரலாம். விநாயகர் வழிபாடு செய்து விட்டு உங்களுடைய வேலையை துவங்குங்கள். நிச்சயம் நல்லது நடக்கும். முன் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். அனுசரித்து சென்றால் பிரச்சனைகள் கொஞ்சம் குறையும்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். வேலையில் சுறுசுறுப்பு வெளிப்படும். ஆரோக்கியமாக இருப்பீர்கள். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். மனதில் இருந்த பயம் விலகும். நிதி நிலைமை சீராக இருக்கும். உறவுகளோடு இருந்து வந்த மனக்கசப்பு சரியாகும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். வியாபாரத்திலும் வேலையிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். புதிய முதலீட்டுக்கு முயற்சி செய்யலாம். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும். தீபாவளி பண்டிகையை கொண்டாட கொஞ்சம் கொஞ்சமாக தயாராகுவீர்கள். மனதில் சந்தோஷம் அதிகரிக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று தடைகள் தடங்கல்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். முக்கியமான வேலையில் கூடுதல் கவனம் செலுத்தவும். முக்கியமான வேலைக்கு செல்வதற்கு முன்பு விநாயகரை ஒரு முறை வழிபாடு செய்யுங்கள். வரக்கூடிய தடைகள் கொஞ்சம் விலகும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். ஆசைகள் நிறைவேறும் நாள். குறிப்பாக மாணவர்கள் இளைஞர்களுக்கு இன்று நிறைய நல்லது நடக்கும். புது வாய்ப்புகள் தேடி வரும். முன்னேற்றம் நிறைந்த இந்த நாளை கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வாரா கடன் வசூலாகும். நிதி இளமை சீராகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அடமானத்தில் வைத்த பொருட்களை மீட்பதற்கு நல்ல வழி பிறக்கும். சொத்து சுகம் வாங்குவதற்கும் சில பேருக்கு யோகம் வரும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பு அதிகமாக இருக்கும். ஆர்வத்தோடு இருப்பீர்கள். புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். பேச்சுத்திறமை அதிகரிக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும் நல்லதே நடக்கும். மனது இறை வழிபாட்டில் ஈடுபடும்.
மகரம்
மகர ராசி காரர்களுக்கு இன்று சந்தோஷமான நாள். வேலையும் வியாபாரமும் அந்தந்த நேரத்தில் சரியாக நடந்து முடியும். சுப செலவுகள் ஏற்படும். வீட்டிற்கு தேவையான பொன் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தடைபட்ட சுப காரிய நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும். வேலையில் இருந்து வந்த தடை விலகும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் மேற்கொள்ளலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் அதிகரிக்கும். வாரா கடன் வசூலாகும். பண பிரச்சனையில் இருந்து விடுபட்டு மன நிம்மதி பெறுவீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வேலை சுமை கொஞ்சம் அதிகமாக இருக்கும். அதனால் பெருசாக பாதிப்புகள் வராது. ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத வரவு இருக்கும். உங்களுக்கான தீபாவளி பரிசு உங்கள் கையை வந்து சேரும். சந்தோஷம் இரட்டிப்பாகும். வேலையிலும் வியாபாரத்திலும் அக்கறை காட்டுவீர்கள். நீண்ட நாள் மனதில் இருந்து வந்த பயம் விலகும். குழப்பங்கள் சரியாகும். இறை நம்பிக்கை அதிகரிக்கும்.