புதன் கிரக பரிகாரம்

Budhan
- Advertisement -

நவகிரகங்களில் ஒரு முக்கியமான கிரகம் புதன். இந்த கிரகம் ஒருவரின் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கிற போது அவருக்கு சிறந்த அறிவுத்திறனும், நல்ல செல்வ சேர்க்கை, மற்றும் இன்பமான வாழ்வு ஏற்படும். ஜாதகத்தில் புதன் அதன் நீச்ச வீடுகளில் இருந்தாலும், புதன் கிரக நீச்ச திசையில் வருவதாலும், புதன் தோஷம் ஏற்படுகிறது. பெரும்பாலும் இவர்களின் சிந்தனை திறன் குறைவாக இருக்கும். இந்த தோஷத்தை போக்கும் சில பரிகாரங்களை இங்கு காண்போம்.

Budhan Manthiram

புதன் கிரக பரிகாரம்

புதன் தோஷம் இருப்பதாக கருதப்படும் நபர்கள் ஒரு புது வெள்ளை துணியின் சிறிய பகுதியை வெட்டியெடுத்துக்கொண்டு, அதில் சில பச்சைபயிறுகளை போட்டு முடித்து கட்டி, உங்கள் பூஜையறையில் பெருமாளின் படத்திற்கு முன்பு வைக்க வேண்டும். தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்த பின்பு, பூஜையறைக்கு சென்று அந்த பச்சைப்பயிறு முடிப்பை உங்கள் வலது உள்ளங்கைக்குள் வைத்து, கண்களை மூடிக்கொண்டு புதன் பகவானுக்குரிய மந்திரங்களை ஜெபித்து, புதன் பகவானை பிராத்திக்க வேண்டும். இது போல் ஒரு மண்டலம் அல்லது 48 நாட்கள் செய்வதால் புதன் தோஷத்தின் கடுமை குறைந்து நன்மைகள் ஏற்படும்.

- Advertisement -

மகாவிஷ்ணு, நவகிரகங்களில் புதன் கிரகத்தின் அம்சம் கொண்டவர். ஒவ்வொரு புதன்கிழமை அன்றும் காலை 7 மணியிலிருந்து 9.30 மணிக்குள்ளாக பெருமாள் கோவிலுக்கு சென்று, அவரை வழிபடுவது புதனின் தோஷத்தை குறைக்கும். அந்த புதன்கிழமைகளில் சிவன் கோவிலிலுள்ள நவகிரக சந்நிதியில், புதன் பகவானுக்கு பச்சை பயிறுகளை சமர்ப்பித்து, நெய்தீபம் ஏற்றி வழிபடுவதால் புதன் பகவான் நற்பலன்களை அளிப்பார்.

navagragham

புதனின் முழுமையான அருளை பெறவும், புத தோஷத்தை போக்கவும் வசதியற்ற ஏழைக் குழந்தைகளுக்கு எழுதுகோல், பாட புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் போன்றவற்றை வாங்கி தருவது புத பகவானின் நன்மையான பார்வை உங்கள் மீது விழச்செய்யும். புதன் கிழமைகளில் பச்சைநிற ஆடைகள் அணிவது அல்லது அன்றைய தினங்களில் பச்சை நிற கைக்குட்டையாவது உங்களுடன் வைத்திருப்பது சிறந்தது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
குருவால் நன்மை அடைய பரிகாரம்

புதன் கிரக பரிகாரம் (அ) புதன் திசை பரிகாரம் (அ புதன் நீசம் பரிகாரம் என்று கூறப்படும் புதன் பரிகாரம் மேலும் உள்ளது. இது போன்ற மேலும் பல பரிகாரங்கள், ஆன்மீக தகவல்கள் என பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Budhan pariharam in Tamil. It is also called as Budhan neecham pariharam in Tamil or Budhan dasa pariharam Tamil.

- Advertisement -