குருவால் நன்மை அடைய பரிகாரம்

Guru Baghavan

ஜோதிடம் என்பது வரும்காலத்தில் நமக்கு ஏற்படக்கூடிய நன்மை தீமைகளை நவகோள்களின் நிலையை கொண்டு அறிந்து கொள்ளும் ஒரு கலையாகும் இந்த ஒன்பது கோள்களில் குரு எனப்படும் வியாழன் கிரகம் மட்டுமே முழுமையாக நன்மையை தரும் ஒரு கிரகமாகும். ஆனால் சிலருக்கு வியாழன் தோஷம் அல்லது குரு தோஷம் ஏற்படுகிறது இந்த குரு தோஷத்தை நீக்கும் குரு பரிகாரம் முறைகளை தெரிந்து கொள்வோம்.

Guru astrology

குரு பகவான் பரிகாரம்

வியாழனாகிய குரு பகவான் ஒன்பது கிரகங்களில் முழுமையான ஒரு சுபகிரகம் ஆவார். இவரின் அருளை முழுமையாக பெறுவதற்கு வியாழக்கிழமை தோறும் காலையில் குளித்து முடித்தவுடன், அருகிலுள்ள சிவன் கோவிலுக்கு சென்று நவகிரகங்களில் குரு பகவான் விக்கிரகத்திற்கு முன்பு நெய்தீபம் ஏற்றி, 27 வெள்ளை கொண்டைக்கடலைகளை மஞ்சள் நிற நூலில் மாலையாக கோர்த்து, அவ்விக்கிரகத்திற்கு சூட்டி, குருவிற்குரிய மந்திரங்களை கூறி வணங்கி வர உங்கள் வாழ்வில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படுவதை காணலாம்.

வியாழக்கிழமைகளில் கோவிலுக்கு சென்று வழிபட முடியாதவர்கள் வீட்டிலேயே தட்சிணாமூர்த்தியின் படத்திற்கு மஞ்சள் நிற பூக்களை சமர்ப்பித்து, மஞ்சள் நிற உணவையோ அல்லது இனிப்பையோ நிவேதனமாக வைத்து வணங்கி வர வேண்டும். ஆறுமாதத்திற்கு அல்லது வருடத்திற்கொரு முறை திருச்செந்தூர் சென்று அங்கு குருபகவானின் அம்சமாக கோவில் கொண்டிருக்கும் செந்திலாண்டவராகிய முருகப்பெருமானை வணங்க குரு பகவானால் ஏற்படவேண்டிய நற்பலன்கள் அனைத்தும் நிச்சயம் ஏற்படும்.

guru sishyan

நீதி நெறி தவறாமல் நேர்மையாக வாழ்பவர்கள் மற்றும் கல்வி கலைகளை போதித்த ஆசிரியர்கள், குருக்களை மதித்து பணிவிடை செய்பவர்கள் அனைவருமே குரு பகவானின் அன்பிற்கு பாத்திரமாவார்கள். இப்படிப்பட்ட மனிதர்களுக்கு அவர்களுக்குரிய காலத்தில் அனைத்து நற்பலன்களையும் அளிப்பார் குருபகவான். குருவின் அருளை தொடர்ந்து பெறுவதற்கு வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து வருவது நன்மையை அளிக்கும். எப்போதும் மஞ்சள் நிற கைக்குட்டை அல்லது துண்டு போன்ற ஏதேனும் ஒன்றை எப்போதும் நம்முடன் வைத்துக்கொண்டிருப்பது சிறந்தது.

இதையும் படிக்கலாமே:
சந்திரன் வழிபாடு மற்றும் பரிகாரம் பலன்கள்

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள் பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Guru bhagavan pariharam in Tamil. It is also called as Guru pariharam in Tamil. By doing this Guru bhagavan pariharam one can get away from Guru dosha or Guru dosham