திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு

amirthakadeshwarar3
- Advertisement -

அமிர்தகடேஸ்வரர்
இந்தக் கோவிலில் பக்தர்களுக்கு அருள் பாவிக்கும் லிங்கமானது சுயம்புவாக தோன்றியது. இங்கு வீற்றிருக்கும் மூலவர் ஒரு லிங்கமாக இருந்தாலும் உற்றுப் பார்க்கும் சமயத்தில், மற்றொரு லிங்கம் பிம்பமாக நம் கண்களுக்குப் புலப்படும் என்பது இந்தக் கோவிலின் தனி சிறப்பு. சிவபெருமான் எமனை காலால் எட்டி உதைத்து சம்ஹாரம் செய்த திருத்தலமும் இது தான்.

amirthakadeshwarar

மிருகண்டு முனிவருக்கும், மருத்துவதி அம்மைக்கும் நீண்ட நாட்களாக குழந்தை வரம் இல்லாத சமயத்தில், முனிவர் சிவனை நினைத்து செய்த கடும் தவத்தின் மூலம் ஒரு வரத்தை பெற்றார். அந்த சிவனின் வரத்தினால் முனிவருக்கும், மருத்துவதி அம்மைக்கும் பிறந்த குழந்தைதான் மார்க்கண்டேயன். மார்க்கண்டேயனுக்கு 16 வயது ஆனவுடன் ஆயுள் முடிந்துவிடும் என்ற வரலாறு நாம் எல்லோரும் அறிந்த ஒன்று.

- Advertisement -

தன் பிறப்பை பற்றிய ரகசியத்தை அறிந்து கொண்ட மார்க்கண்டேயன் 107 சிவத்தலங்களை தொடர்ச்சியாக வழிபட்டு வந்தான். 108 வதாக திருக்கடையூரில் உள்ள சிவ தளத்திற்கு வந்து தரிசனம் செய்தான். அன்றுதான் மார்க்கண்டேயனுக்கு கடைசி நாளாக இருந்தது. எமதர்மன் மார்க்கண்டேயரின் உயிரை பறிப்பதற்காக பாசக்கயிற்றை வீச நேராகவே வந்து விட்டார். எமனை பார்த்து பயந்த மார்க்கண்டேயர் ஓடிச்சென்று அமிர்தகடேஸ்வரரை இறுக்க கட்டிக் கொண்டார். எமன் பாசக்கயிற்றை வீச, அந்த கயிறு மார்க்கண்டேயர் மீது மட்டும் விழாமல் லிங்க உருவில் இருந்த அமிர்தகடேஸ்வரரையும் சேர்த்து சுருக்கு போட்டு இழுத்து விட்டது. சிவபெருமானையே பாசக் கயிற்றால் கட்டி இழுத்த எமதர்மரை, எம்பெருமான் சும்மா விட்டு விடுவாரா? கோபமடைந்த சிவபெருமான் எமதர்மனை கீழே தள்ளி சூலாயுதத்தால் சம்ஹாரம் செய்து விட்டார். அதன்பின்பு மார்க்கண்டேயனுக்கு என்றும் பதினாறாக இருக்கவும், சிரஞ்சீவியாக இருக்கும் வரத்தையும் சிவபெருமான் அளித்துவிட்டார்.

amirthakadeshwarar

எமதர்ம ராஜா இல்லையென்றால் இந்த பூமி தாங்குமா? இறப்பு இல்லாத பூலோகத்தை பூமாதேவி எப்படி தாங்குவாள்? பாரம் தாங்காத பூமாதேவி ஈசனிடம் வேண்டி முறையிட, கோபம் தணிந்த சிவபெருமான் எமதர்மனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார். சிவபெருமான் எமதர்மராஜாவின் உயிரை பறித்ததும் இத்தலத்தில் தான், உயிர் கொடுத்ததும் இத்தலத்தில் தான். காலனை சம்ஹாரம் செய்ததால் இத்தலத்தில் சிவபெருமான் காலசம்ஹாரமூர்த்தி என்ற பெயரையும் கொண்டு அழைக்கப்படுகிறார்.

- Advertisement -

தல வரலாறு
ஒருமுறை சிவபெருமானை தரிசனம் செய்து ஞான உபதேசம் பெறுவதற்காக பிரம்மா கைலாயத்திற்கு சென்றார். ஆனால் அந்த சமயம் பிரம்மாவிற்கு சிவபெருமான் ஞான உபதேசத்தை தரவில்லை. அதற்கு பதிலாக அவர் கையில் வில்வ விதைகளைக் கொடுத்து, ‘பூலோகத்தில் இந்த விதைகள் விதைக்கப்பட்ட ஒரு நாழிகைக்குள் வில்வ மரம் எங்கு வளர்கிறதோ அந்த இடத்தில் ஞான உபதேசம் தருவதாக கூறி விட்டார்’. இதனை நிறைவேற்ற பிரம்மா பூலோகத்தில் வந்து சிவனை நினைத்து வில்வ விதைகளை விதைத்த இடம் தான் இத்தளம். அந்த இடத்தில் சிவபெருமான் பிரம்மாவிற்கு காட்சி தந்து ஞான உபதேசத்தை கொடுத்துவிட்டார். பிரம்மனுக்கு காட்சியளித்த எம்பெருமான் இந்த திருத்தலத்தில் ஆதி வில்வவனநாதராக, தனி சன்னதியில் பக்தர்களுக்கு இன்றளவும் காட்சி தந்து வருகின்றார்.

amirthakadeshwarar

அடுத்ததாக பாற்கடலில் தேவர்கள் அமிர்தத்தை எடுத்தவுடன் விநாயகரை வணங்காமல் அதை பருகச்சென்றனர். இதனை கண்ட விநாயகர் அமிர்த குடத்தை எடுத்து மறைத்து வைத்து விட்டார். இதை அறிந்த தேவர்கள் விநாயகரை வணங்கி அமிர்தத்தை பெற்று சிவபூஜை செய்வதற்காக இத்தளத்தில் வைத்தனர். அந்த சமயம் அந்த அமிர்த குடம் இருந்த இடத்திலிருந்து சுயம்புலிங்கம் உருவானது. அமிர்தத்தில் இருந்து தோன்றியதால் இங்குள்ள சிவபெருமான் அமிர்தகடேஸ்வரர் என்ற பெயரினைப் பெற்றார் என்று கூறுகிறது வரலாறு.

- Advertisement -

செல்லும் வழி
மயிலாடுதுறையில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் 26 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருக்கடையூர்.

தரிசன நேரம்:
காலை 06.30AM – 01.00PM
மாலை 04.30PM – 08.30PM

முகவரி:
அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்,
திருக்கடையூர்-609 311,
நாகப்பட்டினம் மாவட்டம்.

தொலைபேசி:
+91-4364-287 429.

இதையும் படிக்கலாமே
தங்கம் உங்கள் வீட்டை விட்டு அடகு கடைக்கு செல்லாமல் இருக்க நெல்லிக்காய், துளசி ரகசியம்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Thirukadaiyur amritaghateswarar temple history. Thirukadaiyur amritaghateswarar kovil varalaru in Tamil. Thirukadaiyur koil temple timings. Thirukadaiyur amirthakadeswarar details.

- Advertisement -