- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபொன், பொருளை நமக்கு அள்ளித்தரும் மூன்றாம் பிறை தரிசனத்தை, இன்று மாலை இப்படி செய்தால், பலன்...

பொன், பொருளை நமக்கு அள்ளித்தரும் மூன்றாம் பிறை தரிசனத்தை, இன்று மாலை இப்படி செய்தால், பலன் இரட்டிப்பாகும்!

- Advertisement -

பொதுவாகவே மூன்றாம் பிறை தரிசனம் என்பது நமக்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடியது. அவ்வளவு எளிதாக யார் கண்ணிற்கும், இந்த மூன்றாம் பிறை தரிசனம் புலப்படாது என்றே சொல்லலாம். இருப்பினும் எப்படியாவது இந்த, பிறை தரிசனத்தை பார்த்து விடவேண்டும் என்று முயற்சிசெய்து, பார்ப்பவர்கள் ஏராளமானோர் இருக்கத்தான் செய்கிறார்கள். அதிலும் குறிப்பிட்டு, இந்த ஆடி மாதம் மூன்றாம் பிறை தரிசனத்தை யாரும் தவற விட்டு விடாதீர்கள்! காரணம், அம்மனுக்கு உகந்த இந்த மாதத்தில், சிவபெருமான் தலையில் சூடிக் கொண்டிருக்கும் பிறை நிலவை நாம் காண்பது, நமக்கு இரட்டிப்பு பலனை தேடித்தரும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதிர்ஷ்டத்தை அள்ளி தரக்கூடிய, இந்த ஆடி மாத சந்திர தரிசனத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

Lord Shiva

ஒருவருக்கு ஜாதக கட்டத்தில் சந்திரனின் பலம், குறைவாக இருக்கும் பட்சத்தில், அவர்கள் மூன்றாம்பிறை அன்று, ஒருவேளை உணவு சாப்பிட்டு விரதமிருந்தால், தோஷநிவர்த்தி ஏற்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆடிமாத மூன்றாம் பிறை அன்று மட்டுமல்ல, மாதம்தோறும் வரும் மூன்றாம் பிறை அன்று விரதமிருந்து சந்திர தரிசனம் செய்து வாருங்கள்! சந்திரனால் இருக்கும் தோஷம் நிவர்த்தியாக, மூன்றாம் பிறை விரத தரிசனம் ஒரு நல்ல பரிகாரம்.

- Advertisement -

அடுத்ததாக, பொதுவானவர்கள் சந்திர பகவானை எப்படி வழிபட வேண்டும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். தோஷம் உள்ளவர் களாக இருந்தாலும், சந்திரதோஷம் இல்லாதவர்களாக இருந்தாலும், சந்திர பகவானை எப்படி வழிபடலாம்? சந்திர பகவானை தரிசனம் செய்வதற்கு முன்பாக, மாலை வேலையில் ஒருமுறை, ஸ்னானம் செய்ய வேண்டியது அவசியம். சந்திர பகவானின் உதயத்திற்கு முன்பு, அதாவது 6 மணிக்கு முன்பாகவே வீட்டு பூஜை அறையை, பூஜை செய்வதற்கு தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.

Moondram pirai

மாலை 6 மணிக்கு, உங்கள் வீட்டு பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள். அதன் பின்பாக, சந்திர தரிசனத்திற்கு தயாராகுங்கள். பொதுவாகவே மூன்றாம் பிறை தரிசனம் வெளிச்சம் இருக்கும்போது நம் கண்களுக்கு புலப்படாது. சந்திர பகவானை தரிசனம் செய்வதற்கு முன்பாகவே, உங்களிடம் இருக்கும் ஏதாவது ஒரு தங்க நகை, ஒரு ரூபாய் நாணயம் இவை இரண்டையும் தயாராக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். சந்திரனை பார்க்கும்போது, தங்க ஆபரணத்தையும், ஒரு ரூபாய் நாணத்தையும், உள்ளங்கைகளில் வைத்து, அதன் பின்பு சந்திர பகவானை தரிசனம் செய்ய வேண்டும்.

- Advertisement -

pray

அதாவது மொட்டைமாடிக்கு அல்லது பால்கனிக்கு சென்று சந்திர பகவானை தரிசனம் செய்வீர்கள் அல்லவா? அப்போது அவரை இரண்டு உள்ளங்கைகளையும் திறந்துவைத்தார் படி, அதாவது யாசகம் கேட்பது போல, வேண்டி வழிபாடு செய்ய வேண்டியது அவசியம். யாசகம் கேட்பது போல் உங்களது, கைகளை வைக்கும்போது, உள்ளங்கையில் தங்கமும், ஒரு ரூபாய் நாணயம் ஒன்று இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி சந்திரபகவானிடம் வேண்டுதல் வைக்கும் போது, நம் வீட்டில் இருக்கும் பொன், பொருள், தன தானியத்திற்கு எந்த ஒரு குறைபாடும் இருக்காது.

kollu

மூன்றாம் பிறைச் சந்திர தரிசனத்தை முடித்துவிட்டு, வீட்டிற்குள் வந்து சந்திர பகவானை முழுமையாக வேண்டிக்கொண்டு, பச்சைப் பையிரினால் செய்யப்பட்ட நைவேத்தியத்தை சந்திரனுக்கு படித்து, உங்களது பூஜையை நிறைவு செய்துகொள்ள வேண்டும். இப்படி செய்யும்பட்சத்தில் சந்திரனின் அருளாசியை முழுமையாகப் பெற்று, எந்த ஒரு குறைபாடும் இல்லாமல் வளமான வாழ்க்கையை பெறலாம் என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
வாடகை வீடோ! சொந்த வீடோ! நீங்கள் முதல் முறையாக வசிக்க செல்லும் போது இதை மட்டும் கவனிக்க மறக்காதீர்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

சற்று முன்