தாலி கழற்றுவது போன்ற கனவு வந்தால் என்ன பலன்? திருமணமாகாத பெண்ணுக்கு இந்த கனவு வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?

thali-mangalyam
- Advertisement -

ஒரு சில சமயங்களில் நம்மை மீறிய ஒரு சக்தி ஆபத்திலிருந்து காக்கும் என்பார்கள். அது எல்லா விஷயத்திற்கும் பொருந்துமா என்பது தெரியாது. அது போல் எல்லா கனவுக்கும் பொருந்துமா? என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் ஒரு சில கனவுகள் நம்மை நிச்சயம் ஆபத்திலிருந்து காப்பாற்றி இருக்கும். அது போல் ஒரு கனவு தான் தாலி கழற்றுவது போன்ற கனவு வருவதும் என்கிறது ஜோதிடம். கேட்பதற்கு வியப்பாக இருக்கிறது தானே? ஆமாங்க எல்லாத்தையும் அபசகுணமா பாத்துட்டே இருக்க முடியாது. நமக்கு ஒரு கெட்டது நடக்கும் போது அது நல்லதுக்கு தான் அப்படின்னு நினைக்கிறது தான் புத்திசாலித்தனம்.

mangalyam1

தாலி, திருமண மோதிரம், மெட்டி, குங்குமம், மாலை போன்றவை தவறுவது போல் கனவு கண்டால் உடனே அது மனதுக்கு அபசகுனமாக தான் தோன்றும். அது இயல்பாகவே நமக்குள் வந்துவிடும் ஒரு தடுக்க முடியாத உணர்வு. ஐயோ! ஏதாவது ஆகிவிடுமோ? என்கிற பதற்றம் அந்த சமயத்தில் அதிகமாக இருக்கும். தெரியாத கடவுள் பெயரை எல்லாம் சொல்லி ஊரில் இருக்கும் எல்லா கடவுளையும் அப்போது தான் அழைப்போம். அந்த அளவிற்கு பயப்பட வேண்டிய அல்லது பதட்டப்பட வேண்டிய அவசியம் கிடையாது என்கிறது சாஸ்திரம்.

- Advertisement -

அப்படியெனில் தாலி கழற்றுவது போன்ற கனவு என்ன மாதிரியான பலன்களை தரும்? திருமணமான பெண்ணுக்கு இந்த கனவு வந்தால் என்ன அர்த்தம்? அதுவே திருமணமாகாத பெண்ணுக்கு இந்த மாதிரியான கனவு வந்தால் அதற்கு என்ன அர்த்தம்? இது போன்ற கனவு, நல்லது நடப்பதற்குரிய அறிகுறியா? அல்லது அபசகுணமா? என்பதை இந்தப் பதிவின் மூலம் விரிவாக காண்போம் வாருங்கள்.

mangalyam

திருமணமான பெண்ணிற்கு இது போன்ற ஒரு கனவு வருவது என்பது சாதாரண விஷயம் தான். அவள் மனதில் இருக்கும் கணவன் மீதான அதிருப்தி காரணமாக இருக்கும். ஏதாவது சண்டை போட்டிருக்கலாம், அல்லது அது போன்ற ஏதோ ஒரு மன கசப்பான நிகழ்வு நிகழ்ந்திருக்கலாம். அப்படி எதுவும் நிகழவில்லை எனில் தன் கணவரிடம் ஏதானும் ஒரு விஷயம் அவர்களுக்கு பிடிக்காமல் உறுத்தலாக இருந்திருக்கலாம். இதே போல் தாலி அறுவது போல் கனவு வந்தாலும் பயப்பட ஒன்றும் இல்லை. அதனால் திருமணமான பெண்ணுக்கு இது போன்ற ஒரு கனவு வருவது இயல்பான ஒரு விஷயம் தான். அதுவே திருமணமாகாத பெண்ணுக்கு இது போன்ற கனவு வருவது சாதாரண விஷயம் அல்ல.

- Advertisement -

திருமணம் ஆகாத ஒரு பெண்ணிற்கு தாலியை கழற்றுவது போன்ற கனவு வருவது இயற்கைக்கு முரணாக இருக்கிறது. அதைப் பற்றிய எந்த ஒரு சிந்தனையும் அவர்களுக்கு நிச்சயம் இருப்பதில்லை. பின் ஏன் அப்படி ஒரு கனவு வர வேண்டும்? திருமணம் பற்றிய ஏதோ ஒரு பயமும், பதற்றமும் அவளையும் அறியாமல் ஆழ்மனதிற்குள் இருக்கும். உதாரணத்திற்கு அவளுக்கு வரன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம். அந்த சமயத்தில் இது போன்ற கனவுகள் வந்தால் உள்மனம் உங்களுக்கு எதையோ உணர்த்துகிறது என்பது தான் அர்த்தம். திருமணம் பற்றிய ஆபத்தை இந்த கனவு குறிக்கிறது. இந்த சமயத்தில் வரன் பார்ப்பதை தள்ளிப்போடுவது தான் மிகவும் நல்லது.

mangalyam-pariharam

இப்போது திருமணம் நடந்தால் ஏதோ ஒரு பிரச்சனை வர இருப்பதை அந்தப் பெண்ணிற்கு இது போன்ற கனவு மூலம் இறைவன் உணர்த்துகிறார். திருமணமாகாத ஒரு பெண்ணுக்கு தாலி கழற்றுவது போன்ற கனவு வந்தால் அவள் திருமணத்திற்கு அவசரம் காட்டக் கூடாது என்பது தான் அதன் தாத்பரியம். இந்த சமயத்தில் வரன் பார்ப்பது அல்லது புதிதாக ஒரு நபர் மேல் காதல் கொள்வது தவிர்ப்பது மிகவும் நல்லது என்பதைக் கூறி இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

இதையும் படிக்கலாமே
இந்த 1 தீபத்தை 48 நாட்கள் வீட்டில் ஏற்றி வழிபட்டால் உங்கள் மனதிற்குப் பிடித்த வாழ்க்கை துணை அப்படியே அமையும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -