உங்கள் உதடுகளை எப்போதுமே பிங்க் நிறமாக, ரோஜா இதழ் போல வைத்துக்கொள்ள வீட்டிலேயே ‘பீட்ரூட் லிப் பாம்’ தயாரிப்பது எப்படி?

lip
- Advertisement -

ஒருவருடைய முகத்தில் முதலில் பேசுவது கண்கள். அதன் பின்பாக உதடுகள். இந்த உதடுகள் எப்போதுமே பிங்க் நிறத்தில் இருக்கும் பட்சத்தில் நமக்கு அது ஒரு தனி அழகை கொடுக்கும். உதடுகள் கருப்பாக இருக்கும் போது சிலர் சிரிக்கக் கூட தயங்குவார்கள். அவர்களை அறியாமலேயே அவர்களுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை வந்துவிடும். உங்களுடைய உதடுகளை எப்போதுமே பிங்க் நிறத்தில் வைத்துக்கொள்ள, செயற்கை முறையில் கிடைக்கும் லிப் பாம்களை தவிர்த்துவிட்டு, உங்களுடைய வீட்டில் மிக மிக சுலபமான முறையில் இந்த இயற்கையான லிப் பாமை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

lip

இரண்டு அல்லது மூன்று பீட்ரூட்டை தோல் சீவி விட்டு நன்றாக துருவிக் கொள்ள வேண்டும். அதை அப்படியே மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ளுங்கள். தண்ணீர் ஊற்றாமல் நன்றாக அரைத்து ஒரு வடிகட்டியில் வடிகட்டும் போது, அதில் இருந்து பீட்ரூட் சாறு மட்டும் நமக்கு கிடைக்கும். இந்தச் சாறை அப்படியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு அகலமான கடாயை அடுப்பில் வைத்து தயாராக இருக்கும் பீட்ரூட் சாறை அந்த கடாயில் ஊற்றி, கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். இது ஒரு கெட்டி பதத்திற்கு வரும். இந்த கலவை பேஸ்ட் பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள். 4 ஸ்பூன் அளவு தான் இந்த பீட்ரூட் கலவையானது நமக்கு கிடைக்கும்.

lip1

அந்த அடுப்பில் இருக்கும் சூட்டோடு ஒரு ஸ்பூன் நெய் விட்டு, பீட்ரூட் கலவையை நன்றாகக் கலந்து விடுங்கள். இந்த கலவை நன்றாக ஆறிய பின்பு ஒரு சிறிய பாட்டிலில் மாற்றி ஒரு மூடி போட்டு 1/2 மணி நேரம் பிரிட்ஜில் வைத்தால் நமக்கு லிப் பாம் கிடைத்து விடும்.

- Advertisement -

இந்த லிப் பாமை ஒரு நாளைக்கு 6 முறை உங்களுடைய உதட்டில் அப்ளை செய்து கொள்ளலாம். ஃபிரிட்ஜில் இருக்கும் இந்த லிப் பாம் 30 நாட்களுக்கு கெட்டுப் போகாமல் இருக்கும். உதடு வறட்சி தன்மை வராமல் இருக்கும். உதடு பிங்க் நிறத்தில் மாறும். இதை தொடர்ந்து பயன்படுத்தி வரும் பட்சத்தில் உதட்டில் இருக்கும் கருமை நிறம் படிப்படியாக குறைவதை உணர்வீர்கள்.

lip3

இரண்டாவதாக ஒரு சின்ன டிப்ஸ். ஒரு சிறிய கிண்ணத்தில் 1/2 ஸ்பூன் சர்க்கரை, 1/2 ஸ்பூன் பீட்ரூட் ஜூஸ், 1/2 ஸ்பூன் தேன் இந்த மூன்று பொருட்களையும் நன்றாக சேர்த்து கலக்கி இந்த கலவையை கையில் தொட்டு உங்களது உதட்டை லேசாக மசாஜ் செய்து, ஸ்கரப் செய்து சுத்தம் செய்துகொள்ள வேண்டும். உதட்டில் இருக்கும் இறந்த செல்கள் வெளியே வர வர, உதட்டில் இருக்கும் கருமை நிறம் மாறும். இந்த ஸ்கரப்பை மாதத்தில் இரண்டு நாட்கள் செய்யலாம். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்து இருந்தால் உங்களுடைய வீட்டிலும் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -