- Advertisement -
Homeவீட்டு குறிப்புகள்24 மணி நேரமும் ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியாக வர அருமையான டிப்ஸ்

24 மணி நேரமும் ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியாக வர அருமையான டிப்ஸ்

- Advertisement -

வெயில் காலத்தில் பொதுவாக பலரின் வீடுகளிலும் ஏசி பயன்படுத்துவது வழக்கம். ஆனால் இதில் உள்ள ஒரே சிக்கல் என்னவென்றால் ஏசி பயன்படுத்துகையில் கரண்ட் பில் அதிக அளவில் வரும் என்பது தான். இந்த நிலையில் ஏசியும் பயன்படுத்த வேண்டும் அதே சமயம் கரண்ட் பில்லும் அதிகம் வரக்கூடாது என்று நினைப்பவர்கள் சில எளிய வழிகள் மூலம் கரண்ட் பில்லை கம்மி செய்ய முடியும். அது எப்படி என்பதை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

ac

டிப்ஸ் 1:
பொதுவாக அணைத்து ஏசிக்கும் ஸ்டெப்லைசர் இருக்கும் அந்த ஸ்டெப்லைரை ஆன் ஆப் செய்ய ஒரு ட்ரிப்பர் இருக்கும். ஏசியை பயன்படுத்தி முடித்த உடன் முதல் வேலையாக அந்த ட்ரிப்பரை ஆப் செய்வது அவசியம். ஏன் என்றால் ட்ரிப்பர் ஆனில் இருக்கும் போது ஏசிக்கு எப்போதும் சிறிதளவு கரண்ட் சென்று கொண்டு தான் இருக்கும். அதே சமயம் ஏசி ஆப்பில் இருக்கிறது ஆனால் ட்ரிப்பர் ஆனில் இருக்கும் சமயத்தில் வீட்டில் ஏதாவது ஷார்ட் சர்க்யூட் நிகழ்ந்தால் அதனால் ஏசி நிச்சயம் பாதிக்கப்படும். அதனால் ஏசியை பயன்படுத்தாத சமயத்தில் ட்ரிப்பர் ஆப்பில் இருப்பது அவசியமான ஒன்று.

- Advertisement -

டிப்ஸ் 2:
சிலர் ஏசியை மிகவும் குளிச்சியாக வைத்துவிட்டு போர்த்திக்கொண்டு தூங்குவதுண்டு. இது உடலுக்கும் கேடு கரண்ட் பில்லும் இதனால் அதிகம் ஆகும். ஏசியில் ஒவ்வொரு டிகிரி டெம்ப்பரேச்சர் குறைக்கும்போதும் 6% கரண்ட் அதிகம் ஆகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. உதாரணமாக ஏசியை 18ல் வைத்து தூங்குவோர் 24ல் வைத்து தூங்கினால் 6*4 = 24% மின்சாரம் மிச்சமாகும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ac

டிப்ஸ் 3:
சிலரது வீட்டு ஏசியில் 18ல் வைத்தால் தான் சில்லென்று இருப்பது போல இருக்கும். இதற்க்கு காரணம் ஏசியில் அதிகப்படியான தூசி படிந்திருப்பது தான். குறைந்தது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையாவது ஏசியில் உள்ள பில்டரை சுத்தம் செய்வது அவசியம். அதை சுத்தம் செய்ய 5 நிமிடங்கள் கூட ஆகாது. ஆனால் அதை சுத்தம் செய்வதன் மூலம் அதிக அளவில் மின்சாரத்தை சேமிக்க முடியும். அதே போல வருடம் ஒரு முறையாவது ஏசியை சர்வீஸ் செய்வதும் அவசியம்.

- Advertisement -

டிப்ஸ் 4:
குளிர் காலங்களில் ஏசியை பயன்படுத்தும் போது சிலர் நடு இரவில் பயங்கரமாக குளிர்வதை உணர்வார்கள். ஆகையால் குளிர் கால சமயங்களில் இரவு 2 மணிக்கு மேல் ஏசி தானாகவே ஆப் ஆவது போல டைமர் செட் செய்துவிட்டு தூங்குவதன் மூலம் மின்சாரத்தை சேமிக்க முடியும்.

ac

டிப்ஸ் 5:
பலரும் ஏசியை போட்டுகொண்டு அதோடு பேனும் போட்டுகொண்டு தூங்குவது வழக்கம். இதன் மூலம் கரண்ட் பில் நிச்சயம் அதிகரிக்கும். 9 பேன் ஓடுவது ஒரு ஏசி ஓடுவதற்கு சமம் என்று ஆய்வுகள் கூறுகிறது. இது போன்றவர்கள் ஏசியை ஸ்விங் மோடில் இருந்து மாற்றி தங்களுக்கு தேவையான திசையில் வைத்துக்கொண்டு ஒரு அரைமணி நேரம் இருந்து பாருங்கள். பேன் தேவையே படாது. அதோடு இதன் மூலம் 9ல் ஒரு பங்கு கரண்ட் பில்லையும் மிச்சம் செய்ய முடியும்.

ac

டிப்ஸ் 6:
ஏசி பயன்படுத்தும் அறையில் பொதுவாக காற்று அதிக அளவில் வெளியில் செல்லும் அளவிற்கு இடைவெளி இருக்க கூடாது. ஜன்னல்கள் சார்த்தப்பட்டு, கதவின் அடியில் இருக்கும் சந்துகள் அடைக்கப்படுவதன் மூலமும் மின்சாரத்தை சேமிக்க முடியும்.

சற்று முன்