மேஷம்:
மேஷ ராசிக்காரர்கள் இந்த வாரம் பொறுமையாக இருக்க வேண்டும். எந்த விஷயத்திலும் அவசரப்பட்டு முடிவுகளை எடுக்கக் கூடாது. வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் வேலை பளு இருக்கும். உங்களுடைய வேலைகளை முன் கூட்டியே முடிக்கப் பாருங்கள். கடைசி நேரம் வரை வேலையை முடிக்க வில்லை என்றால், பிரச்சனைகளும் வரும். வியாபாரத்தில் சற்று மந்தமான சூழ்நிலையே இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கும், சந்தோஷத்திற்கும் குறைவிருக்காது. தினம் தோறும் அம்மன் வழிபாடு நன்மை தரும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷம் நிறைந்த வாரமாக இருக்கப்போகின்றது. உங்கள் குடும்பத்தில் சந்தோஷமான நிகழ்ச்சி, உங்களுடைய மனதை மகிழ்விக்கும் வகையில் நடக்கும். அது திருமண விஷயமாக இருக்கலாம், அல்லது புதுவரவு உங்களுடைய வீட்டுக்கு வரப் போகும் செய்தியாக இருக்கலாம். அதாவது குழந்தை பாக்கியம். எதுவாக இருக்கட்டும் உங்களுடைய மனதை குளிர்விக்க நல்ல செய்தி வந்து சேரும். வியாபாரம் முன்னேற்றதோடு செல்லும். வேலை செய்யும் இடத்தில் இருந்த சின்ன சின்ன பிரச்சனைகள் கூட சரியாகிவிடும். தினம்தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டம் நிறைந்த வாரமாக இருக்கப்போகின்றது. நீங்கள் வராது என்று நினைத்துக் கொண்டிருந்த கடன் தொகை வந்துசேரும். அடைக்கவே முடியாது என்று நினைத்திருந்த கடனை, அடைத்து விடுவீர்கள். வருமானம் தேவைக்கு ஏற்ப வரும். உடல்நல பிரச்சனைகள் சரியாகி, உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக உணர்வீர்கள். சொந்தத் தொழிலில் முதலீட்டை அதிகரித்து வியாபாரத்தை விரிவு செய்யப்போகிறீர்கள். ஆக மொத்தத்தில் இந்த வாரம் பிரச்சனைகளுக்கு பெரியதாக வாய்ப்பு கிடையாது. தினம் தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நல்ல முன்னேற்றம் தரும் வாரமாக தான் இருக்கப்போகின்றது. புதிய முயற்சிகள் வெற்றி தரும். வேலை செய்யும் இடத்திலும் எந்த பிரச்சனையும் இருக்காது. சொந்த தொழிலிலும், நீங்கள் எதிர்பார்க்காத அளவு லாபம் கிடைக்கும். இருப்பினும் வீட்டில் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அனாவசியமாக வார்த்தைகளை உறவினர்களிடம் விட்டுவிடாதீர்கள். விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். குறிப்பாக கணவன் மனைவி இருவரும் அனுசரித்து சென்றால் இல்லம் இனிமையாக இருக்கும். தினம்தோறும் துர்க்கை அம்மன் வழிபாடு நன்மை தரும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டம் தரும் வாரமாக தான் இருக்கப் போகின்றது. பணவரவு அதிகரிக்கும். உங்களுடைய வருமானத்தில், உங்கள் வாழ்க்கைத் துணைக்கு பரிசு பொருட்களை வாங்கி கொடுத்து மன மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். தொலைபேசியின் மூலம் நல்ல செய்திகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் இருந்த பிக்கல் பிடுங்கல் நீங்கும். வியாபாரத்தில் கூடுதலாக கொஞ்சம் கவனம் செலுத்தினால் நல்ல லாபத்தை அடையலாம். தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்கள் முடிந்தவரை இந்த வாரம் அமைதியாக இருக்க வேண்டும். உங்களுடைய முன்கோபத்தால் வீண் விவாதத்தால், தேவையற்ற பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக வீட்டில் இருப்பவர்கள் உங்களுடைய தாய் தந்தை, உடன் பிறந்தவர்களை அனுசரித்துச் செல்லுங்கள். முன் கோபத்தை காட்டாதீர்கள். சின்ன சண்டை வந்தாலும் அது பெரிய விளைவுகளை உண்டாக்கி விடும். மற்றபடி வேலை செய்யும் இடத்திலும் வியாபாரத்திலும் சுமூகமான சூழ்நிலையை நிலவும். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். இந்த வாரம் முழுவதும் ஓம் நமசிவாய மந்திரத்தை மனதார உச்சரித்துக் கொள்ள பிரச்சனைகள் குறையும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுமாரான வாரமாக தான் இருக்கப் போகின்றது. முடிந்தவரை புதிய முயற்சிகளை எடுக்க வேண்டாம். செய்யும் வேலையில் கொஞ்சம் ஆர்வம் எடுத்து செய்தாலே போதும். நல்ல முன்னேற்றம் ஏற்படும். முடிந்தவரை சோம்பேறித்தனத்தை விட்டுவிடுங்கள். நாளை செய்யலாம் என்று எந்த வேலையையும் தள்ளிப் போட வேண்டாம். புதியதாக தொழில் தொடங்குவது என்றால் இந்த வாரம் தொடங்க வேண்டாம். அடுத்த வாரத்திற்கு புதிய முயற்சிகளை தள்ளிப் போடுங்கள். வருமானத்திற்கு எந்த பிரச்சனையும் இருக்காது. செலவுக்கேற்ற வருமானம் வந்துகொண்டே தான் இருக்கும். தினமும் சிவன் வழிபாடு நன்மை தரும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷம் நிறைந்த வாரமாக தான் இருக்க போகின்றது. கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த நீண்ட நாள் பிரச்சனை முடிவுக்கு வரும். நீண்ட நாட்களாக பிரிந்திருந்த உறவுகள் ஒன்று சேர்வதற்கு வாய்ப்பு உள்ளது. வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் தொடங்கும். வேலை செய்யும் இடத்தில் மட்டும் மேலதிகாரிகளை கொஞ்சம் அனுசரித்து சென்று விட்டால் பிரச்சனை இல்லை. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. தினம்தோறும் சூரிய நமஸ்காரம் செய்வது வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தித் தரும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அற்புதம் வாய்ந்த நாளாகத்தான் இருக்க போகின்றது. நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றிதான். புதிய முயற்சிகளில் தாராளமாக ஈடுபடலாம். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். புதிய தொழில் தொடங்கலாம். புதிய முதலீடுகளை செய்யலாம். தொழிலை விரிவுபடுத்த புதியதாக கடன் வாங்கலாம். ஆனால் அதிக வட்டிக்கு வாங்காதீர்கள். வங்கியில் முயற்சி செய்யுங்கள். நிச்சயமாக உங்களுடைய முயற்சிகள் வெற்றி தான். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீங்கள் என்ன வேலை செய்தாலும் அதற்கு பெரிய பாராட்டு கிடைக்கும். தினம் தோறும் குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அனுகூலம் நிறைந்த வாரமாக தான் இருக்கப்போகின்றது. நீண்ட நாட்களாக இழுபறியாக இருக்கும் கோர்ட் கேஸ் வழக்குகள் உங்கள் பக்கம் தீர்ப்பாகும். சொத்து பிரச்சனைக்கு தீர்வு, உங்களுக்கு சாதகமாக கிடைக்கும். உடன்பிறந்த சகோதர சகோதரிகள் வீட்டிற்கு வருகை தந்து உங்களை மன மகிழ்ச்சி அடைய வைக்க போகிறார்கள். கடன் சுமை படிப்படியாக குறையத் தொடங்கும். நல்ல வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. தினம்தோறும் அனுமன் வழிபாடு நன்மை தரும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்கள் இந்த வாரம் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். அனாவசிய செலவு செய்தால் எதிர்காலத்தில் நீங்கள் பிரச்சனையில் மாட்டிக் கொள்வீர்கள். ஏற்கனவே கடன்சுமையில் இருப்பவர்கள், கையில் இருக்கும் பணத்தை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். அது தான் உங்களுடைய எதிர்காலத்திற்கு நல்லது. திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண யோகம் கூடிவரும். குழந்தை பேறுக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். முடிந்தவரை பெரியதாக முதலீடு செய்து வியாபாரம் செய்பவர்கள் கொஞ்சம் உஷாராக இருந்து கொள்ளுங்கள். தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இதுநாள் வரை இருந்த மனக்குழப்பமும் தடுமாற்றமும், இந்த வாரம் தெளிவுபெறும். வாழ்க்கையில் எந்தப் பக்கம் செல்வது என்று தெரியாமல் பிரச்சனையில் சிக்கி தவித்து வருபவர்கள், சில நல்ல முடிவுகளை இந்த வாரம் எடுத்து வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான அடியை எடுத்து வைப்பீர்கள். மன உறுதியோடு நீங்கள் எடுக்கும் முடிவு உங்களுக்கு சாதகமாக தான் அமையும். மன பயம் வேண்டாம் இனி தடுமாற்றம் வேண்டாம். சிக்கல்களில் சிக்கிக் கொள்ள மாட்டீர்கள். தெளிவாக சிந்திக்க தினந்தோறும் 10 நிமிடம் கண்களை மூடி தியானம் செய்வது உங்கள் வாழ்க்கைக்கு நன்மை தரும்.