- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஎந்த பரிகாரமும் தேவையில்லை, உங்கள் தீராத எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து விட அம்மனுக்கு வெள்ளிக்கிழமையில் இந்த...

எந்த பரிகாரமும் தேவையில்லை, உங்கள் தீராத எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து விட அம்மனுக்கு வெள்ளிக்கிழமையில் இந்த மாலையை மட்டும் கட்டி போட்டால் போதுமே!

- Advertisement -

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் இருக்கும். ஒருவருக்கு இருக்கும் பிரச்சனைகள் அடுத்தவருக்கு இருப்பதில்லை. ஒருவருக்கு பணப்பிரச்சனை என்றால், இன்னொருவருக்கு மன பிரச்சினை இருக்கும். கடன் பிரச்சனை, கணவன் மனைவிக்குள் பிரச்சனை, ஆரோக்கியப் பிரச்சினை என்று பிரச்சனைகளும் விதவிதமாக தான் இருக்க செய்கிறது. இப்படி ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒவ்வொரு பரிகாரத்தை செய்வதற்கு பதிலாக இந்த ஒரே ஒரு பரிகாரத்தை அம்பாளுக்கு செய்தால் போதும்! உங்களுடைய எந்த வகையான பிரச்சினையும் நிச்சயமாக விரைவில் தீர்ந்துவிடும். அத்தகைய சக்தி வாய்ந்த இந்த பரிகாரத்தை எப்படி செய்வது? என்பதை அறிய மேலும் இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

தன் பிள்ளையை தாய் பாதுகாப்பது போல இவ்வுலகை காக்க தன் இரு கரங்களையும் எப்பொழுதும் தயாராக வைத்திருக்கும் அன்னையை வழிபட்டு வந்தால் எத்தகைய துன்பங்களும் நம்மை நெருங்க கூட செய்யாது. அம்பாள் வழிபாடு செய்பவர்கள் பொதுவாக அன்னை பார்வதி தேவியை வழிபடுவார்கள். அம்பாள் எத்தகைய ரூபத்தில் இருந்தாலும் அவர் அன்னைக்கு இணையானவர் தான்.

- Advertisement -

அம்மன் வடிவங்களில் ஏராளமான அம்மன்கள் உள்ளன. துர்க்கை அம்மன், வராஹி அம்மன், காமாட்சி அம்மன், மீனாட்சி அம்மன் என்று வரிசைகட்டி அம்மன்கள் இருந்தாலும் அவர்கள் எல்லாவற்றிற்கும் தலைமையாக இருப்பது உமையவள் தான். அன்னை பார்வதி தேவியை வழிபடும் பொழுது நம்மை அறியாமலேயே நம் மனதிற்குள் ஒரு தைரியம் பிறக்கும். இத்தகைய மகத்துவம் வாய்ந்த உமையவளை வழிபட இந்த குறிப்பிட்ட மூன்று பொருட்கள் தேவை.

kungumam

மஞ்சள், குங்குமம், எலுமிச்சை ஆகிய இந்த 3 பொருட்களுக்கு அதிக சக்தி உண்டு. இந்த 3 பொருட்கள் இல்லாமல் எந்த ஒரு வழிபாடும் அம்பாளுக்கு செய்யப்படுவதில்லை. இதில் எலுமிச்சை என்னும் தேவ கனியை அம்மன் பாதத்தில் வைத்து அல்லது அம்மன் மடியில் வைத்து வாங்கி வந்து வீட்டில் அதனை சாறெடுத்து பருகினால் சகல ரோகமும் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை. எனவே அம்மன் கோவிலுக்கு செல்லும் பொழுது இனி எலுமிச்சை பழத்தை வாங்கி வர மறந்து விடாதீர்கள்.

- Advertisement -

அதே போல குங்கும பிரசாதத்தை அம்மன் கோவிலில் இருந்து வாங்கி வந்து வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் அதனை காலையில் எழுந்து குளித்து முடித்ததும் நெற்றியில் இட்டுக் கொண்டு வந்தால் நம்மைப் பீடித்திருக்கும் எத்தகைய தீய சக்திகளும் நம்மை விட்டு நீங்கிவிடும். நம்மிடம் இருக்கும் துர் சக்திகள் நீங்கினால் நேர்மறை எண்ணங்கள் தானாகவே உதிக்க ஆரம்பிக்கும்.

virali-manjal

எல்லா வகையான சாபங்களும், பாவங்களும் நீங்கி எல்லா வகையான நன்மைகளையும் நாம் பெற வேண்டுமென்றால் விரலி மஞ்சளை எடுத்துக் கொள்ள வேண்டும். 11, 21 என்பது போல ஒற்றைப்படை எண்ணிக்கையில் அவற்றை எடுத்துக் கொண்டு கையில் இருக்கும் மஞ்சள் நூலை கொண்டு பூ கட்டுவது போல ஒவ்வொரு விரலி மஞ்சளையும் வைத்து கட்டி வர வேண்டும். மஞ்சள் நூல் இல்லாதவர்கள் வெள்ளை நூலை மஞ்சளில் தோய்த்து காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

kamatchi-amman-TEMPLE

இப்படி ஒவ்வொரு வெள்ளிக் கிழமையிலும் செய்து, 9 வாரங்கள் நிறைவடைந்த பின் உங்களுடைய எத்தகைய பிரச்சனைகளும் தானாகவே நீங்கிவிடும் என்பது நம்பிக்கை. உங்கள் கைகளால் நீங்களே இந்த மாலையை செய்து கொண்டு போய் அம்மன் கோவிலில் இருக்கும் அர்ச்சகரிடம் கொடுத்து அம்மன் கழுத்தில் போட சொல்ல வேண்டும். அதனை கண் குளிர தரிசனம் செய்து விட்டு அம்பாளை வணங்கி வர வேண்டும். இப்படி செய்தால் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து சுகபோக வாழ்க்கை அமையும்.

சற்று முன்