- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஅரச இலையுடன் இந்தப் பொருளை சேர்த்து பணப்பெட்டியில் வைத்தால், அரச வாழ்வை பெறலாம். உங்கள் வீட்டு...

அரச இலையுடன் இந்தப் பொருளை சேர்த்து பணப்பெட்டியில் வைத்தால், அரச வாழ்வை பெறலாம். உங்கள் வீட்டு பணப் பெட்டி, ராஜாக்களின் கஜான பெட்டியாக மாறும்.

- Advertisement -

நம்முடைய வீட்டில் பணத்துக்கு பற்றாக்குறை இல்லாமல் நம்முடைய தேவைக்கு ஏற்ப வருமானம் இருந்தாலே போதும். சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து விடலாம். குறிப்பாக இந்த கடன் தொல்லையில் இருந்து தப்பித்துவிடலாம். வரக்கூடிய வருமானத்தில் தடைகள் இருந்தாலும் சரி, கடன் பிரச்சனையால் நீங்கள் அவதிப்பட்டு வந்தாலும் சரி, உங்களுடைய பணப்பெட்டியில் அரச இலையோடு இந்த பொருளை மட்டும் சேர்த்து வைத்துப் பாருங்கள். நிச்சயமாக ஒரு சில நாட்களிலேயே உங்களை அரச வாழ்வு தேடி வரும்.

உங்களுக்கு நிறைய கடன் இருந்தால் அந்தக் கடனை அடைப்பதற்கான வழியும் உங்களுக்கு 7 நாட்களில் கிடைப்பதற்கு நிறையவே வாய்ப்பு உள்ளது. ஏழு நாட்களில் இந்த பரிகாரத்தின் பலனை நிச்சயமாக ஏதாவது ஒரு வகையில் நீங்கள் உணர்வீர்கள். நம்பிக்கையோடு பரிகாரத்தை செய்தால்.

- Advertisement -

இந்தப் பரிகாரம் செய்வதற்கு ஒரு அரசை இலை நமக்கு தேவை. எங்கிருக்கும் அரச மரத்திலிருந்து அரச இலையை எடுத்து வரக்கூடாது. அதாவது நிறைய பாழடைந்த இடங்களில் கூட அரச மரம் வளர்ந்து இருக்கும். அந்த அரச இலைகள் நமக்கு வேண்டாம். கோவில்களில் இருக்கக்கூடிய, விநாயகர் இருக்கக்கூடிய அரச இலை நமக்கு கிடைத்தால் தான், பரிகாரத்தின் மூலம் நம்மால் முழு பலனை அடைய முடியும். இப்படி ஒரு தெய்வ கடாட்சம் நிறைந்த இடத்தில் இருந்து அரச இலையைப் பறித்து எடுத்து வாருங்கள்.

mayilaragu1

அடுத்து மயிலிறகு. மயிலிறகு எங்கு கிடைத்தாலும் பரவாயில்லை. காசு கொடுத்து கடையிலிருந்து கூட ஒரு மயில் இறகை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எடுத்து வைத்திருக்கும் அரச இலைக்கு நடுவே இந்த மயில் இறகை வைத்து, மயிலிறகு மேலே ஒரு ரூபாய் நாணயத்தை வைக்க வேண்டும். இந்த ஒரு ரூபாய் நாணயம் என்பது ஹோமத்தில் போட்ட நாணயமாக இருந்தால் மிகவும் சிறப்பு. ஹோமத்தில் போட்ட நாணயம் உங்களிடம் இல்லை என்றால் சாதாரண ஒரு ரூபாயை வைத்து இந்த மூன்று பொருளையும் அப்படியே பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

அரசியலை, அரச இலையின் மேல் மயிலிறகு, மயிலிறகின் மேல் ஒரு ரூபாய் நாணயம். அரச இலை சில நாட்களிலேயே காய்ந்துவிடும். காய்ந்த அரச இலையை மட்டும் எடுத்துவிட்டு புதிய அரசை இலையை அந்த இடத்தில் வைத்து விடுங்கள். இப்படி 11 முறை அரச இலையை மாற்றிக் கொண்டே வாருங்கள். வாடிய அரச இலைகளை தூக்கிப் போடக் கூடாது. ஒரு அகலமான கிண்ணத்தில் போட்டு அரச இலையை சேமித்து வாருங்கள். (7 முறை இந்த அரசு இலைகளை மாற்றும் போது உங்களுடைய கடன் பிரச்சினைக்கு ஏதாவது ஒருவகையில் தீர்வு கிடைத்திருக்கும்.)

one rupee

அரச இலைகள் வாடும் வரை மாற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது. எத்தனை நாட்களுக்கு ஒருமுறை உங்களுடைய வீட்டில் அரசியலை வாடுகின்றதோ, அத்தனை நாட்கள் கழித்து அந்த இலைகளை மாற்றிக்கொள்ளலாம். இலைகளை மாற்றுவதற்கு இத்தனை நாட்கள்தான் என்ற எந்தக் கணக்கும் கிடையாது.

- Advertisement -

tharpai-1

வாடிய 11 அரச இலைகளை சேகரித்து வைத்து உள்ளீர்கள் அல்லவா. அதை தர்ப்பைப்புல்லோடு சேர்த்து ஒரு பச்சை கற்பூரம் போட்டு எரித்து, அந்த கருவியை சாம்பலில் தேவையான அளவு நெய் ஊற்றி இதை மை போல தயாரித்து ஒரு சிறிய டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். இந்த அரச இலையில் தயார் செய்த மையை தினம்தோறும் நெற்றியில் இட்டு வந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலிகளாக மாறுவீர்கள். உங்கள் வீட்டில் இருக்கும் வறுமை நீங்கும். உங்களை பிடித்த துரதிர்ஷ்டம் கூட அதிர்ஷ்டமாக மாறும். (மயிலிறகையும், 1 ரூபாய் நாணயத்தையும் அரச இலை இல்லாமல் எப்போதும் உங்கள் வீட்டு பீரோவிலையை வைத்துக் கொள்ளலாம்.)

cash-box

தொடர்ந்து அரச இலைகளை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது. 11 முறை அரச இலையை மாற்றியவுடன் பரிகாரத்தை நிறைவு செய்து கொள்ளுங்கள். அரச வாழ்வை தரும் அரசியலையும், இறை சக்தி நிரம்பிய மயிலிறகும், 1 ரூபாய் நாணயமும், இந்த 3 ஒன்றாக சேரும் போது உங்கள் பணப் பெட்டியில் இருக்கும் தரித்திரம் அனைத்தும் வெளியேறிவிடும். தரித்திரம் இல்லாத பணப் பெட்டி, ராஜாக்களின் கஜானா பெட்டி தானே.

cash

இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு அனைவரும் செய்து நல்ல பலனை பெற வேண்டும். கடன் இல்லாத வாழ்க்கையை வாழ வேண்டும் என்று அந்த ஆண்டவனை வேண்டிக் கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்