- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்சூப்பரான பீர்க்கங்காய் கடையல் ஒரு முறை இப்படி செய்து பாருங்களேன். இட்லி தோசை சப்பாத்தி, சாப்பாட்டிற்கும்...

சூப்பரான பீர்க்கங்காய் கடையல் ஒரு முறை இப்படி செய்து பாருங்களேன். இட்லி தோசை சப்பாத்தி, சாப்பாட்டிற்கும் இது சூப்பர் சைட் டிஷ்.

- Advertisement -

பெரும்பாலும் நிறைய பேருக்கு பீர்க்கங்காயை எப்படி சமைப்பது என்றே தெரியாது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய இந்த பீர்க்கங்காயை வாரம் ஒரு முறையாவது நம்முடைய உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். அருமையான சுலபமான பீர்க்கங்காய் கடையல் எப்படி செய்வது, தெரிந்துக் கொள்வோம் வாருங்கள். இதை சாதத்திற்கு மட்டுமல்ல இட்லி தோசைக்கு கூட தொட்டுக்கொள்ள வைத்துக் கொள்ளலாம்.

perthangai-kuzhambu3

முதலில் 200 கிராம் பீர்க்கங்காயை தோல் சீவி கொஞ்சம் பொடியாக வெட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்தபடியாக பெரிய நெல்லிக்காய் அளவு புளியைக் கால் கப் அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைத்து புளிக் கரைசலையும் எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

perthangai-kuzhambu1

அடுத்தபடியாக ஒரு கடாயை அடுப்பில் வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு – 1/4 ஸ்பூன், உளுந்து – 1/2 ஸ்பூன், வரமிளகாய் – 1 இரண்டாக கிள்ளியது, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1 கைப்பிடி அளவு, 1 கொத்து கறிவேப்பிலை, இந்த பொருட்களை சேர்த்து முதலில் நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதம் வரும்வரை வதக்குங்கள்.

- Advertisement -

அடுத்தபடியாக மிகப் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 7, 1/2 ஸ்பூன் உப்பு, பெரிய சைஸில் இருக்கும் தக்காளி பழம் பொடியாக நறுக்கியது – 1, மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இந்த கடையிலில் மிளகாய் தூள் சேர்க்க போவது கிடையாது. பச்சை மிளகாய் காரம் தான்.

perthangai-kuzhambu2

தக்காளி வதங்கி வந்ததும் வெட்டி வைத்திருக்கும் பீர்கங்காய்களை கடாயில் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைசலை ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒரு மூடி போட்டு இந்த எல்லாப் பொருட்களையும் நன்றாக வேக வையுங்கள். இறுதியாக தேவைப்பட்டால் கொஞ்சம் உப்பை சேர்த்துக் கொள்ளுங்கள்.

perthangai

பிஞ்சு பீர்க்கங்காய்களாக ஆக இருந்தால் ஐந்து நிமிடத்தில் வெந்துவிடும். வெங்காயம் தக்காளி பீர்க்கங்காய் பளி அனைத்தும் ஒன்றாக சேர்ந்து வெந்து வந்தவுடன் ஒரு மத்தை வைத்து இதை நன்றாக கடைந்து வைத்துக் கொள்ள வேண்டும். இது ரொம்பவும் கட்டியாக இருக்கும். இறுதியாக 1/2 கப் அளவு சுட சுட தண்ணீரை இந்த கடையளில் ஊற்றி 2 நிமிடம் போல மீண்டும் கொதிக்க வைத்து இறுதியாக கொத்தமல்லி தழைகளைத் தூவி பரிமாற வேண்டியது தான். அவ்வளவு தான் சுலபமான பீர்கங்காய் கூட்டு தயார்.

சற்று முன்