- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்சுவையான கத்தரிக்காய் தொக்கு மிகவும் சுலபமாக 10 நிமிடத்தில் செய்துவிடலாம்

சுவையான கத்தரிக்காய் தொக்கு மிகவும் சுலபமாக 10 நிமிடத்தில் செய்துவிடலாம்

- Advertisement -

பலரின் வீடுகளிலும்கத்தரிக்காயை சாம்பார் வைப்பதற்கும், காரக்குழம்பு வைப்பதற்கும் பயன்படுத்துவார்கள். ஏனென்றால் கத்தரிக்காயை தனியாக சமைத்து கொடுத்தால் அதனை பலரும் விருப்பமாக சாப்பிட மாட்டார்கள். ஆனால் ஒரு முறை கத்தரிக்காயயில் இவ்வாறு சுவையான வறுவல் செய்து கொடுத்துப் பாருங்கள். அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள். புளியோதரை, லெமன் சாதம், தக்காளி சாதம், சாம்பார் சாதம் அனைத்திற்கும் தொட்டுக்கொண்டு சாப்பிட மிகவும் அற்புதமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் மிகவும் சுலபமாக குறைந்த நேரத்தில் இதனை சமைத்து விடலாம். வாருங்கள் இந்த கத்தரிக்காய் வறுவலை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

sambar3

தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் – கால் கிலோ, பெரிய வெங்காயம் – 1, கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து, மிளகாய்தூள் – ஒரு ஸ்பூன், தனியா தூள் – ஒன்றரை ஸ்பூன், சீரகத்தூள் – அரை ஸ்பூன், கறிமசாலா தூள் – அரை ஸ்பூன், மஞ்சள்தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், எண்ணெய் – 5 ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் கத்தரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொண்டு அவை கருத்து விடாமலிருக்க தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும் பின்னர் வெங்காயத்தை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

brinjal

பிறகு அடுப்பை பற்ற வைத்து அதன் மீது ஒரு கடாயை வைத்து ஐந்து ஸ்பூன்எண்ணணெய் ஊற்றவேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளித்து, கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள கத்தரிக்காயையும் இவற்றுடன் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு கத்தரிக்காய் சற்று வதங்கியதும் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் சீரகத்தூள், மிளகாய்த் தூள், தனியா தூள் மற்றும் கறிமசாலா தூள் இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கிளறி விட்டு ஒரு தட்டு போட்டு மூடி அடுப்பை சிம்மில் வைக்க வேண்டும்.

masala-powder1

ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை தட்டைத் திறந்து கத்தரிக்காயை நன்றாக கலந்துவிட வேண்டும். கத்தரிக்காயுடன் சேர்த்துள்ள மசாலாக்களின் பச்சை வாசனை போகும்வரை இவற்றை நன்றாக எண்ணெயிலேயே வதக்க வேண்டும்.

சிறிது நேரம் கழித்து ஒரு முறை கலந்து விட்டுப் பார்த்தால் கத்தரிக்காய் எண்ணெயிலேயே நன்றாக வதங்கி மசாலாக்களுடன் சேர்ந்து சிவந்து வந்திருக்கும். இந்த நேரத்தில் நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி தழையை சேர்த்து நன்றாக கலந்து விட்டு அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

vazhakai-fry4

அவ்வளவுதான் சுவையான கத்தரிக்காய் வறுவல் தயாராகிவிட்டது. இதனை ஒருமுறை நீங்களும் செய்து தயிர் சாதம், ரசம் சாதம் இவ்வாறு எந்த வகையான சாதத்துடன் வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட்டு பாருங்கள். பிறகு இதனை நீங்களும் அடிக்கடி உங்கள் வீட்டில் செய்து கொடுப்பீர்கள்.

சற்று முன்