- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்முருங்கைக்கீரை குழம்பு ஒருவாட்டி இப்படி வச்சு பாருங்க. ரொம்ப ரொம்ப ஈஸியா இருக்கும். அதேசமயம் ரொம்ப...

முருங்கைக்கீரை குழம்பு ஒருவாட்டி இப்படி வச்சு பாருங்க. ரொம்ப ரொம்ப ஈஸியா இருக்கும். அதேசமயம் ரொம்ப ரொம்ப டேஸ்டாவும் இருக்கும்.

- Advertisement -

நமக்கு மிகவும் சுலபமாக மலிவாகக் கிடைக்கக்கூடிய கீரை வகைகளில் சத்துக்கள் ஏராளம். சத்தான பொருட்களை சாப்பிட வேண்டுமென்றால் விலை அதிகமான பொருட்களை தான் சாப்பிடவேண்டும் என்ற அர்த்தம் கிடையாது‌. நம் வீட்டின் அருகிலேயே கிடைக்கக்கூடிய பொருட்களின் மதிப்பை நாம் முழுமையாக தெரிந்து கொள்வது கிடையாது. நமக்கு சுலபமாக மலிவாக கிடைக்கக்கூடிய சத்தான பொருட்களின் பட்டியல் ஏராளம். அந்த வரிசையில் இந்த முருங்கைக்கீரையும் ஒன்று. எல்லோர் வீட்டுக் கொல்லைப் புறத்திலும் அந்த காலத்தில் முருங்கைக்கீரை மரம் கட்டாயம் இருக்கும். வாரத்தில் இரண்டு முறையாவது முருங்கைக் கீரையை சமைத்து சாப்பிடுவார்கள். ஆரோக்கியமாக இருந்தார்கள்.

Murungai keerai

சரி, நாமும் இனி வரக்கூடிய காலகட்டத்தில் முருங்கைக்கீரையை நம்முடைய உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம். முருங்கைக்கீரை வைத்து சுலபமாக ஒரு சாம்பார் எப்படி வைப்பது தெரிந்துகொள்வோமா.

- Advertisement -

முதலில் ஒரு குக்கரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 50 கிராம் அளவு துவரம்பருப்பு போட்டு அதை ஒரு முறை கழுவிக் கொள்ளவேண்டும். கழுவிய துவரம்பருப்புடன் மீடியம் சைஸில் இருக்கும் 2 தக்காளி, மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், போட்டு பருப்பு மூழ்கும் வரை தண்ணீரை ஊற்றி 3 விசில் வைத்து வேக வைத்துக் கொள்ள வேண்டும். வேக வைத்த பருப்பை தக்காளி பழத்தோடு சேர்த்து மைய கடைந்து கொள்ளுங்கள்.

thuvaram-paruppu

ஒரு மீடியம் சைஸ் கட்டு முருங்கைக் கீரையை உருவி கழுவி சுத்தம் செய்து, இந்த முருங்கைக் கீரைகளை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதுவும் அப்படியே இருக்கட்டும்

- Advertisement -

அடுத்தபடியாக கீரையைத் தாளிக்கலாம். அடுப்பில் ஒரு கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் கடுகு – 1 ஸ்பூன், உளுந்து – 1 ஸ்பூன், தோல் உரித்த பூண்டு பல் – 5 பொடியாக நறுக்கியது, வர மிளகாய் – 4, சின்ன வெங்காயம் – 15 பல், இந்த பொருட்களை எல்லாம் போட்டு வெங்காயம் வதங்கும் வரை வதக்கி விட வேண்டும். அதன் பின்பு சாம்பார் பொடி இரண்டு ஸ்பூன் சேர்த்து ஒரு நிமிடம் போல வதக்கி விட்டு, வேக வைத்த பருப்பு தக்காளியை கடாயில் ஊற்றி குழம்புக்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, பருப்பை ஒரு இரண்டு நிமிடம் போல கொதிக்கவிட்டு கொள்ளவேண்டும்.

murungai-keerai

அதன்பின்பு கழுவி தயாராக எடுத்து வைத்திருக்கும் முருங்கைக் கீரைகளை கடாயில் இருக்கும் பருப்போடு சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி, நன்றாக கலந்து விட்டு குழம்பை 7 லிருந்து 8 நிமிடம் வரை கொதிக்க வைத்தால் போதும். முருங்கைக்கீரை நன்றாக வெந்துவிடும். முருங்கைக் கீரையை அதிகமாக வேக வைக்கக்கூடாது என்று சொல்லுவார்கள். அடுப்பை அணைத்துவிட்டு சூடு சாதத்தில் இந்த முருங்கைக்கீரை சாம்பார் போட்டு கொஞ்சமாக நெய் விட்டு சாப்பிட்டு பாருங்கள். அத்தனை ருசி. உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்து இருக்கா. உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்