- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்இதுவரையிலும் நீங்கள் செய்யாத இந்த புதுவிதமான தோசையை ஒரு முறை செய்து சுவைத்துப் பாருங்கள். இதனை...

இதுவரையிலும் நீங்கள் செய்யாத இந்த புதுவிதமான தோசையை ஒரு முறை செய்து சுவைத்துப் பாருங்கள். இதனை குழந்தைகளுக்கு கொடுப்பதும் அவர்களின் உடல் நலத்திற்கு மிகவும் ஆரோக்கியமானதாகும்

- Advertisement -

ஒவ்வொரு வீட்டிலும் காலை அல்லது மாலை ஆகிய இருவேளையில் ஏதாவது ஒரு வேலை நிச்சயம் சாப்பிடும் உணவு தோசையாகத் தான் இருக்கும். அந்த அளவிற்கு இட்லியை விட தோசையை தான் அதிகமாக விரும்பி சாப்பிடுகின்றனர். அவ்வாறு தக்காளி தோசை, கோதுமை தோசை, ரவா தோசை, முட்டை தோசை, மசாலா தோசை,பொடி தோசை என்று வித விதமான சுவைகளில் செய்ய முடியுமோ அந்த அளவிற்கு செய்து கொடுக்கின்றனர். அவ்வாறு இந்த தோசையை சாப்பிடும் பொழுது அதில் ஆரோக்கியமான சில உணவு பொருட்களையும் சேர்த்து கொடுத்து விட்டால் அடம்பிடிக்கும் குழந்தைகள் கூட விருப்பமாக சாப்பிட்டு முடிப்பார்கள். அதில் நீங்கள் சேர்த்து இருக்கும் பொருள் என்னவென்றும் அவர்களுக்கு தெரிய போவதில்லை. அப்படித்தான் முருங்கைக்கீரையை சேர்த்து சுவையான முருங்கைக் கீரை தோசை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்:
முருங்கைக் கீரை – இரண்டு கைப்பிடி, மிளகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், இஞ்சி சிறிய துண்டு – 2, இட்லி மாவு – ஒரு கப், உப்பு – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 5 ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் இரண்டு கைப்பிடி கீரையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் இவற்றை இரண்டு, மூன்று முறை தண்ணீரில் நன்றாக அலசி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் அரை ஸ்பூன் மிளகு, அரை ஸ்பூன் சீரகம், சிறிய துண்டு இஞ்சி மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அரைத்த முருங்கைக்கீரை விழுதை ஒரு கப் இட்லி மாவுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இவற்றுடன் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கரைத்து விட வேண்டும். பிறகு 10 சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் 2 பச்சை மிளகாயை பொடியாக நறுக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு ஒரு கொத்து கொத்தமல்லித் தழையையும் பொடியாக நறுக்கிக் கொண்டு, அதனுடன் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து, நறுக்கி வைத்த அனைத்து பொருட்களையும் கலந்து வைத்துள்ள தோசை மாவில் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

பிறகு ஒரு தோசைக்கல்லை அடுப்பின் மீது வைத்து, தோசை கல் நன்றாக காய்ந்ததும் லேசாக எண்ணெய் தடவி, ஒரு கரண்டி மாவை ஊற்றி, தோசை சுட வேண்டும். பின்னர் இதனைத் திருப்பிப் போட்டு இருபுறமும் நன்றாக வெந்ததும் தட்டில் வைத்து இதனுடன் தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி, வெங்காய சட்னி, மிளகாய் சட்னி, அல்லது பூண்டு சட்னி இவற்றில் எதை வேண்டுமானாலும் சேர்த்து சாப்பிட மிகவும் அற்புதமான சுவையில் இருக்கும்.

சற்று முன்