- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்கத்தரிக்காய் வைத்து இப்படி சுவையான சுக்கா செய்து கொடுத்தால் கத்தரிக்காய் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்

கத்தரிக்காய் வைத்து இப்படி சுவையான சுக்கா செய்து கொடுத்தால் கத்தரிக்காய் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்

- Advertisement -

காய்கறிகள் என்றாலே குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் விருப்பமானதாக இருப்பதில்லை. அசை உணவை எந்த அளவிற்கு விருப்பமாக சாப்பிடுகிறார்களோ அந்த அளவிற்க்கு சைவ உணவை பலரும் விருப்பமாக சாப்பிடுவதில்லை. அதில் குறிப்பிட்ட காய்கறிகளை நூற்றுக்குத் தொண்ணூறு சதவீதமான மக்கள் விருப்பமாக சாப்பிடுவது கிடையாது. ஆனால் இது போன்ற காய்கறிகளில் தான் உடம்பிற்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் நிறைந்திருக்கும். அவ்வாறான காய்கறிகளில் ஒன்று தான் கத்தரிக்காய். இந்த கத்தரிக்காயை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் மிகவும் சுவையாக செய்து கொடுத்தால் வேண்டாம் என்று சொல்பவர்களும், வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். இதனை செய்வதும் மிகவும் எளிமையாகத் தான் இருக்கும். வாருங்கள் இந்த கத்தரிக்காய் சுக்காவை என்பதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் – கால் கிலோ, சின்ன வெங்காயம் – 10, சோம்பு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், வெந்தயம் – கால் ஸ்பூன், உப்பு – அரை ஸ்பூன், மிளகாய்த்தூள் – முக்கால் ஸ்பூன், தனியாத்தூள் – அரை ஸ்பூன், மிளகு தூள் – அரை ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், எண்ணெய் – 6 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் கால் கிலோ கத்தரிக்காயை எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் கத்தரிக்காயின் காம்பை மட்டும் தனியாக வெட்டி எடுக்க வேண்டும். பிறகு கத்தரிக்காயை நீளவாக்கில் நான்கு துண்டுகளாக அரிந்து கொள்ள வேண்டும். பின்னர் அறிந்த கத்தரிக்காய்களை தண்ணீர் உள்ள பாத்திரத்தில் போட்டு வைக்க வேண்டும்.

பிறகு சின்ன வெங்காயத்தையும் பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். அதன் பின் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும். கடாய் சூடானதும் அதில் 6 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் சோம்பு, மற்றும் கால் ஸ்பூன் வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். அதன் பின் இதனுடன் அரிந்து வைத்துள்ள கத்தரிக்காயையும் சேர்த்து கொண்டு, இதனுடன் அரை ஸ்பூன் மஞ்சள்தூள் மற்றும் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு இவற்றுடன் முக்கால் ஸ்பூன் மிளகாய்த் தூள், அரை ஸ்பூன் தனியா தூள் மற்றும் அரை ஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு தட்டு போட்டு மூடி 5 லிருந்து 10 நிமிடம் கத்தரிக்காயை எண்ணெயிலேயே வேக விட வேண்டும். பின்னர் தட்டை திறந்து, அடுப்பை வேகமாக வைத்து, 5 நிமிடத்திற்கு கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் கத்தரிக்காய் வறுவல் பதத்திற்கு வரும். பிறகு இறுதியாக கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

சற்று முன்