- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்குடைமிளகாய் முட்டை பொரியலை வைத்து சப்பாத்தி ரோல் அல்லது சாண்ட்விச் செய்து கொடுத்துப் பாருங்கள். உங்கள்...

குடைமிளகாய் முட்டை பொரியலை வைத்து சப்பாத்தி ரோல் அல்லது சாண்ட்விச் செய்து கொடுத்துப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள்

- Advertisement -

ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஒவ்வொரு விதமான விருப்பம் இருக்கும். அப்படி குழந்தைகள் அனைவரும் தனிப்பட்ட திறமையுடன் இருப்பார்கள். ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் அனைத்து குழந்தைகளும் ஒரே மாதிரியாகத் தான் அடம் பிடிப்பார்கள். அவர்களுக்கு பிடித்த உணவு என்றால் விருப்பமாக சாப்பிட்டு விடுவார்கள். பிடிக்காத உணவு என்றால் அது ஆரோக்கியமானது என்று நாம் சொன்னாலும் கூட அதனை காதில் வாங்காமல் வேண்டாம் என்று அடம் பிடிப்பார்கள். குழந்தைகளை விருப்பமாக சாப்பிட வைப்பது அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் உணவுகளை கொஞ்சம் வித்தியாசமாக செய்து கொடுக்க வேண்டும். அப்போது தான் அவர்களே முன்வந்து உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள். அப்படி குழந்தைகள் விருப்பமாக சாப்பிடக்கூடிய ஒரு உணவுப் பொருளை எவ்வாறு செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்:
குடைமிளகாய் – 2, முட்டை – 3, பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 1, இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், மிளகாய் தூள் – அரை ஸ்பூன், மிளகுத் தூள் – ஒரு ஸ்பூன், உப்பு – அரை ஸ்பூன், எண்ணெய் – 3 ஸ்பூன், கொத்தமல்லி தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
வெங்காயம் குடை மிளகாய் மற்றும் தக்காளி இவை அனைத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு சிறிய கிண்ணத்தில் மூன்று முட்டைகளை உடைத்து ஊற்றி, அதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து வைக்க வேண்டும்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும். பிறகு கடாயில் 3 ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு இதனுடன் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் இதனுடன் நறுக்கி வைத்துள்ள ஒரு தக்காளிப் பழத்தையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு நறுக்கி வைத்துள்ள குடைமிளகாயை சேர்த்து வதக்க வேண்டும். இவை அனைத்தும் சிறிது நேரத்தில் வதங்கியவுடன் இவற்றிற்கு தேவையான மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து விட வேண்டும்.

பிறகு இதனுடன் கலந்து வைத்துள்ள முட்டையை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். முட்டை சேர்த்தவுடன் நன்றாக கலந்து விடும் பொழுது, அனைத்தும் ஒன்றாக சேர்ந்து கலந்து விடும். பிறகு இறுதியாக ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து கலந்து விட்டு, அடுத்ததாக கொத்தமல்லித்தழை சேர்த்து ஒரு முறை கிளறி விட்டு அடுப்பை அனைத்து விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான குடைமிளகாய் முட்டை பொரியல் தயாராகி விட்டது. இதனை சப்பாத்தி ரோல் அல்லது சாண்டவிச் செய்யும் பொழுது அதனுடன் சேர்த்துக் கொண்டு சாப்பிட்டுப்பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும்.

சற்று முன்