- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்1 மாதம் ஆனாலும் கெட்டுப்போகாத சட்னி செய்வது எப்படி? தினமும் சட்னி அரைக்க வேண்டும் என்ற...

1 மாதம் ஆனாலும் கெட்டுப்போகாத சட்னி செய்வது எப்படி? தினமும் சட்னி அரைக்க வேண்டும் என்ற கஷ்டம் இனி தேவை இல்லை.

- Advertisement -

இன்ஸ்டன்டாக ஒரு சட்னி பொடி எப்படி அரைப்பது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அவசர அவசரமாக வேலைக்கு செல்பவர்களுக்கு இந்த இன்ஸ்டன்ட் சட்னி பொடி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த சட்னி பொடியை அரைத்து பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்தால் ஒரு மாதம் வரைக்கும் கெட்டுப் போகாது. தேவைப்படும்போது தண்ணீரில் இந்தப் பொடியைப் போட்டு கரைத்தால் இன்ஸ்டன்ட் சட்னி ரெடி. இந்தச் சட்னியை இட்லி தோசை சப்பாத்திக்கு பொங்கலுக்கு கூட தொட்டு சாப்பிட்டுக் கொள்ளலாம்.

இந்த சட்னி அரைக்க நமக்கு தேவையான பொருட்கள். வேர்க்கடலை – 1/2 கப், பொட்டுக்கடலை – 1 கப், உளுந்து – 1/2 கப், உப்பு – தேவையான அளவு, தேங்காய் துருவல் – 1/2 கப், கருவேப்பிலை – 1 கொத்து, பூண்டு பல் –  4. (எந்த கப்பில் வேர்க்கடலையை அளக்கிறீர்களோ அதே கப்பில் மற்ற பொருட்களையும் அளந்து கொள்ளுங்கள்.)

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்து கொள்ள வேண்டும். அதில் முதலில் வேர்க்கடலையை போட்டு சிவக்க வறுத்து தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து பொட்டுக்கடலையை போட்டு லேசாக சூடு செய்து இதையும் தட்டில் மாற்றிக்கொள்ளுங்கள். அடுத்ததாக உளுந்தம் பருப்பு சேர்த்து உளுந்தம் பருப்பை சிவக்க சிவக்க வறுத்து எடுத்து தட்டில் மாற்றிக் கொள்ளுங்கள். எந்த பொருளும் வறுக்கும் போது கருதிவிடக்கூடாது.

அடுத்தபடியாக அதே கடாயில் உப்பையும் வரமிளகாய் சேர்த்து வறுத்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதே கடாயில் தேங்காய் துருவல், பூண்டு, கருவேப்பிலை இந்த மூன்று பொருட்களையும் போட்டு சிவக்க வறுக்க வேண்டும். வறுத்து எடுக்கும்போது தேங்காயில் ஒரு துளி கூட ஈரம் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் இன்ஸ்டன்ட் சட்னி பவுடர் சீக்கிரத்தில் கெட்டுப் போய்விடும். தேங்காய் லேசாக பிரவுன் நிறம் வரும் வரை வறுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது நாம் வறுத்த எல்லா பொருட்களையும் ஒரு தட்டில் கொட்டி மொத்தமாக நன்றாக ஆற வைத்து விடவேண்டும். சூடாக இருக்கும்போது அரைத்தாலும் சட்னி பொடி கெட்டுப்போக வாய்ப்பு உள்ளது. இந்த பொருட்களை எல்லாம் மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளலாம். நைசாக அரைத்துக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம் தான்.

அரைத்த இந்த பொடியை ஒரு பேப்பரில் கொட்டி நன்றாக ஆற வைத்து பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ளுங்கள். வெளியில் வைத்தாலே ஒரு மாதம் கெட்டுப்போகாது. ஃப்ரிட்ஜில் வைத்தால் இரண்டு மாதத்திற்கு கூட இந்த சட்னி பொடி கெட்டுப்போகாது.

தேவையான அளவு பொடியை ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி கரைத்தால் சட்னி தயார். தேவைப்பட்டால் இதற்கு எப்போதும் போல கடுகு உளுந்து கறிவேப்பிலையை எண்ணெயில் போட்டு தாளித்து ஊற்றியும் பரிமாறலாம். அது நம்முடைய விருப்பம் தான். ஒரு சிறிய டப்பாவில் இந்த சட்னி பொடியை போட்டு  அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று தண்ணீர் ஊற்றி கரைத்து, இதை சட்னியாகவும் மாற்றிக் கொள்ளலாம். சுவை நிச்சயம் நன்றாக இருக்கும். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்