மாதத்தின் முதல் நாள் தொடங்கி இறுதி நாள் வரை வேலைக்கு சென்று விட்டு, அடுத்த மாதம் துவக்கத்தில் வரப்போகும் சம்பளத்தை எதிர்பார்த்து பலரும் காத்துக் கொண்டிருப்பார்கள். அந்த பணம் வந்ததும் முதலில் என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறதோ, அவற்றை முடித்து விட்டு, அதன் பிறகு இருக்கின்ற பணத்தை சேமித்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கும். ஆனால் அந்த பணத்திற்கு ஏதாவது ஒரு செலவு வந்துவிடும். திடீரென மருத்துவ செலவோ அல்லது விசேஷங்களுக்கு செல்லவேண்டிய செலவோ என அந்த பணத்திற்கான செலவுகள் தோன்றிவிடும். இவ்வாறு மாதங்கள் செல்லுமே தவிர நம்மால் கொஞ்சம் பணத்தைக் கூட சேமித்து வைக்க முடியாது. இதற்கு என்ன காரணம் என்று பலரும் குழம்பி கொண்டிருப்பார்கள். ஒரு சிலருக்கு ஜாதகத்தில் பிரச்சனை இருந்தாலும் அல்லது வீட்டில் கோளாறு இருந்தாலும் பிரச்சனைகள் வருவது இயல்புதான். எனவே முதலில் இவற்றில் என்ன குறைபாடு உள்ளது என்பதை கண்டறிந்து அவற்றை முடிந்தவரை விரைவாக சரி செய்ய வேண்டும். வாருங்கள் இவை அனைத்தையும் சரி செய்யக் கூடிய சில ஆன்மீக குறிப்புகளை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு தாகம் தீர தண்ணீர் கொடுக்க வேண்டும். பின்னர் அவர்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்யும் பொழுது ஜென்ம ஜென்ம தரித்திரம் விலகும். வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்த்து வந்தால் பணத்தட்டுப்பாடு குறைந்து பணப்புழக்கம் அதிகரிக்கும்.
வீட்டில் பணம் குறையாமல் இருக்க எப்போதும் பலவித ஊறுகாய்களை வைத்திருக்க வேண்டும். அதிலும் முக்கியமாக நெல்லிக்காய் ஊறுகாய் வைத்திருந்தால் மகாலட்சுமியின் அருளைப் பெற்றுத்தரும். அதேபோல் வீட்டின் பூஜை அறையில் விளக்கு ஏற்றும் பொழுது அதில் சிறிதளவு டைமன்ட் கற்கண்டை போட்டு வைக்க வேண்டும்.
வெள்ளிக்கிழமை பூஜை செய்யும் பழுது மகா லட்சுமி தேவிக்கு வெள்ளை கொண்டைக்கடலையை நைவேத்தியமாக படைத்து, அதை வீட்டில் உள்ளவர்கள் மட்டும் சாப்பிட வேண்டும். இவ்வாறு வாரம் தோறும் செய்து வர பண வரவில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
அதேபோல் அம்மாவாசையில் எப்பொழுதும் வீட்டில் உள்ளவர்கள் எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிக்க கூடாது. வீட்டின் வாசலில் கோலம் இடக்கூடாது. அவ்வாறு அமாவாசை அன்று பூஜையை காலை வேளையில் செய்யக்கூடாது. எப்பொழுதும் வீட்டில் விளக்கேற்றி விட்ட பிறகு குடி நீர், பால், தயிர்9 உப்பு, ஊசி, நூல் போன்ற பொருட்களை வீட்டிலிருந்து வெளியேற்றக் கூடாது.
முழு பாசி பருப்பை வெல்லம் கலந்த தண்ணீரில் ஊறவைத்து, அதனை பறவைகள், பூச்சிகள் இவற்றிற்கு உணவாக அளிக்க வேண்டும். இதன் மூலம் பணத்தின் வரவை அதிகரிக்க முடியும். வீட்டின் வடகிழக்கு பகுதியில் வன்னிமரம், நெல்லிக்காய் மரம், வில்வ மரம் இருந்தால் வீடு மகாலட்சுமி வாசத்துடன், அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கும். அவ்வாறு லட்சுமி தேவிக்கு இளஞ்சிவப்பு நிறத்தில் வஸ்திரம் அணிவித்து பூஜை செய்து வந்தால் பணத்தின் வரவை அதிகரிக்க முடியும்.