- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்வெறும் 10 நிமிடத்தில் நச்சுன்னு சுவையில் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் காலிஃபிளவர் கிரேவி எப்படி செய்வது?

வெறும் 10 நிமிடத்தில் நச்சுன்னு சுவையில் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் காலிஃபிளவர் கிரேவி எப்படி செய்வது?

- Advertisement -

காலிஃப்ளவரை வைத்து காலிபிளவர் தொக்கு, குருமா, சில்லி என்று நம்முடைய வீட்டில் செய்வதை வழக்கமாக வைத்திருப்போம். காலிபிளவர் கிரேவி ரெஸ்டாரன்ட் சைலில் அசத்தலாக எப்படி செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதில் கொஞ்சம் வித்தியாசமான பொருட்களை சேர்த்து வித்தியாசமாக செய்வதால் இதனுடைய சுவையில் நிச்சயம் நல்லதொரு மாற்றம் தெரியும். இந்த கிரேவியை இட்லி தோசை சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள வைத்துக்கொள்ளலாம். சுட சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டாலும் அருமையாக தான் இருக்கும். வாங்க நேரத்தை கடத்தாமல் இந்த சூப்பர் கிரேவியை பார்த்து விடுவோம்.

முதலில் 200 கிராம் அளவு காலிஃப்ளவரை எடுத்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீரை ஊற்றி சுட வைத்து மஞ்சள் தூள் 1 ஸ்பூன், உப்பு – 1 ஸ்பூன், போட்டு கொதிக்க வைக்க வேண்டும். கொதிக்கின்ற இந்த தண்ணீரில் காலிஃபிளவரை ஒரு நிமிடம் போட்டு அலசி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்தபடியாக ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தோல் சீவிய இஞ்சி – 2 இன்ச், பூண்டு பல் – 5, பச்சை மிளகாய் – 1, தக்காளி பழம் – 1, புதினா இலை – 10, கொத்தமல்லி தழை – சிறிதளவு, கடலை மாவு – 1 டேபிள் ஸ்பூன், கெட்டி தயிர் புளிக்காதது – 2 டேபிள் ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு இதை விழுது போல அரைத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அரைத்து வைத்துக் கொள்ளலாம்.

அடுத்தபடியாக அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 2 ஸ்பூன் எண்ணெய், 1 ஸ்பூன் நெய், விட்டு பட்டை – 1, ஏலக்காய் – 1, சீரகம் – 1/2 ஸ்பூன், பிரியாணி இலை – 1, போட்டு தாளித்து மிக மிகப் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – 2 கைப்பிடி அளவு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் முழுமையாக வதங்கி வந்த உடன் மிளகாய் தூள் – 1 ஸ்பூன், உப்பு கிரேவிக்கு தேவையான அளவு, மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், மல்லி தூள் – 1/2 ஸ்பூன், கரம் மசாலா – 1/2 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு மீண்டும் ஒரு நிமிடம் போல வதக்கி விடுங்கள்.

- Advertisement -

வெங்காயம் கண்ணுக்குத் தெரியாமல் வதங்கி விட வேண்டும். அதன் பின்பு மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் விழுதை கடாயில் ஊற்றி பச்சை வாடை போக இரண்டு நிமிடம் கைவிடாமல் வதக்கி விட்டு, தண்ணீரில் கழுவி வைத்திருக்கும் காலிஃப்ளவரை இந்த தொக்கோடு போட்டு நன்றாக கலந்து விட்டு, கிரேவிக்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி கலந்து ஒரு மூடி போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க வைத்தால் ஐந்து நிமிடத்தில் காலிபிளவர் வெந்து நாம் ஊற்றி இருக்கும் எண்ணெய் நன்றாக மேலே பிரிந்து வரும்.

அவ்வளவு தான். அடுப்பை அணைத்துவிட்டு மேலே கொத்தமல்லி தலையை தூவி சுட சுட பரிமாறுங்கள். இதனுடைய வாசமும் சுவையும் அத்தனை சூப்பராக இருக்கும். (உங்களுக்கு கிரேவி ரொம்பவும் திக்காக வேண்டுமென்றால் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றுங்கள். கிரேவி கொஞ்சம் தளதளவென வேண்டும் என்றால், கொஞ்சம் தண்ணீர் அதிகமாக ஊற்றிக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான்.) உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க. வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

சற்று முன்