- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்புதுசா அரைத்த இட்லி மாவை 1/2 மணி நேரத்தில் புளிக்க வைத்து இட்லி வார்க்கலாமே! எப்படின்னு...

புதுசா அரைத்த இட்லி மாவை 1/2 மணி நேரத்தில் புளிக்க வைத்து இட்லி வார்க்கலாமே! எப்படின்னு தெரிஞ்சுக்க உங்களுக்கும் ஆசையா இருக்கா?

- Advertisement -

புதுசா அரைத்த இட்லி மாவை அரை மணி நேரத்தில் புளிக்க வைத்து இட்லி சுடலாம். தோசையும் வார்க்கலாம். அதற்கு ஒரு சில குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். படிச்சு பாருங்க. குறிப்புகள் உங்களுக்கு பயன்படும் படி இருந்தால் தேவைப்படும் போது ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயமா உங்களுடைய புத்திசாலித்தனத்தை பார்த்து வீட்டில் இருப்பவர்கள் அசந்து போவார்கள். அந்த அளவிற்கு இது ஒரு நல்ல குறிப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் பதிவிற்குள் செல்வோம்.

வழக்கம்போல இட்லி மாவை அரைத்து விட்டு உப்பு போட்டு உங்களுடைய கையை வைத்து நன்றாக கரைக்க வேண்டும். கை சூட்டில்தான் இட்லி மாவு புளிக்கும். ஆக கையைக் கொண்டு அரிசி மாவையும் உளுந்த மாவையும் கரைத்து தற்போது தேவையான மாவை மட்டும் ஒரு கிண்ணத்தில் தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். மீதமுள்ள மாவை புளிப்பதற்கு முன்பு ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து விட்டால் நீண்ட நாட்களுக்கு புளிக்காமல் அப்படியே இருக்கும்.

- Advertisement -

இப்போது அரைத்த புதிய இட்லி மாவை ஒரு கிண்ணத்தில் வைத்திருக்கிறீர்கள் அல்லவா. இதை அரைமணி நேரத்தில் புளிக்க வைக்க மூன்று வழிகள் உள்ளது. முதலாவது வழி. அரைத்த இந்த மாவின் மேல் ஒரு தட்டு போட்டு மூடி அடிக்கின்ற வெயிலில் அரை மணி நேரம் வைத்தால் சிறிய சிறிய முட்டைகள் எழும்பி மாவு புளிக்க தொடங்கி விடும். ஆனால் இதற்கு உங்களுடைய வீட்டில் நிறைய வெயில் இருக்க வேண்டும். அதேசமயம் இரவு நேரத்தில் மாவு ஆட்டினால் இந்த டிப்ஸ் வொர்க் அவுட் ஆகாது. வெயில் இருக்கிறவங்க இந்த குறிப்பு ட்ரை பண்ணி பாருங்க.

இரண்டாவது குறிப்பு. ஒரு குக்கரை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த குக்கரை அடுப்பில் வைத்து நன்றாக சூடு செய்ய வேண்டும். அதாவது குக்கரில் இருந்து புகை வரும் அளவிற்கு சூடு செய்துவிட்டு, அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த குக்கருக்கு உள்ளே மாவு பாத்திரத்தை வைத்து, குக்கருக்கு மேலே மூடி போட்டு விசிலும் போட வேண்டும். உள்ளே இருக்கும் காற்று வெளியில் போகாமல் இருக்கத்தான் விசில். (ஞாபகமாக அடுப்பை அணைத்துவிட்டு இந்த குறிப்பை பின்பற்றி பாருங்கள்.)

- Advertisement -

அரை மணி நேரம் குக்கரின் சூட்டிலேயே உள்ளே மாவு இருக்க வேண்டும். அரை மணி நேரம் கழித்து குக்கருக்கு உள்ளே இருக்கும் மாவை எடுத்துப் பார்த்தால் மாவு லேசாக பொங்கி புளித்து வந்திருக்கும். குக்கரை ரொம்பவும் சூடு செய்துவிட்டு உள்ளே மாவை வைத்தால் அடியில் மாவு வெந்து லேயராக வெந்துவிடும். ஜாக்கிரதையாக இந்த குறிப்பை ட்ரை பண்ணி பாருங்க.

மூன்றாவது குறிப்பு. அரைத்த மாவுக்கு மேலே வரமிளகாயை காம்புகளோடு போட வேண்டும். காம்புகள் மாவில் படும்படி இரண்டு அல்லது மூன்று மிளகாய்களை மாவுக்கு மேலே வைத்து மூடி போட்டு விட்டால் மாவு 1 மணி நேரத்தில் நன்றாக புளித்து பொங்கி வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு அகலமான பாத்திரத்தில் சுடு தண்ணீரை ஊற்றி அந்த சுடுதண்ணீரின் மேல் மாவு கிண்ணத்தை வைத்தால் 1 மணி நேரத்தில் மாவு ஓரளவுக்கு புளித்து பொங்கி வரும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

பின்குறிப்பு: பொதுவாகவே சில வீடுகளில் 8 மணி நேரம் இட்லி மாவை வைத்தால் கூட சரியாக புளித்து பொங்கி வராது. இதற்கு காரணம் உளுந்தும் அரிசியும் சரியான விகிதத்தில் கலக்கப்படாமல் இருப்பது தான். உளுந்து அதிகமாக இருந்து, அரிசி மாவு குறைவாக இருந்தாலும் சரியாக புளிக்காது. அரிசி மாவு அதிகமாக இருந்து உளுந்து குறைவாக இருந்தாலும் சரியாக மாவு புளித்து வராது. சரியான பக்குவத்தில் மாவை கரைக்க வேண்டும். அரிசியையும் உளுந்தையும் கை போட்டு கரைத்து விட்டு கொஞ்சமாக மாவை எடுத்து சொம்பு தண்ணீரில் போட்டால் மாவு மேலே மிதக்க வேண்டும். மாவு தண்ணீரில் மூழ்கி விட்டாலும் பக்குவம் சரியில்லை என்று அர்த்தம். மாவு தண்ணீரில் பிரிந்து ஓடினாலும் பக்குவம் சரியாக இல்லை என்று அர்த்தம். ஒரு நல்ல இட்லி சாப்பிட எவ்வளவு கஷ்டமா அப்படின்னு யோசிக்கிறீங்களா. இட்லி சுடுவது ஒன்னும் அவ்வளவு ஈசி இல்லைங்க. அம்மா சுட்டு தர இட்லியை இனிமே குறை சொல்லாதீங்க. உங்களுக்கு மேலே சொன்ன குறிப்புகள் பிடிச்சிருக்கா உங்க வீட்ல தாராளமா ட்ரை பண்ணி பார்க்கலாம்.

சற்று முன்