- Advertisement -
Homeவீட்டு குறிப்புகள்பூண்டு உரிக்க இந்த ஐடியா சூப்பரா இருக்கே! 1 கிலோ பூண்டை கைப்படாமல், 1 நிமிடத்தில்...

பூண்டு உரிக்க இந்த ஐடியா சூப்பரா இருக்கே! 1 கிலோ பூண்டை கைப்படாமல், 1 நிமிடத்தில் உரிக்க கத்தி கூட வேணாம்னா பாருங்க.

- Advertisement -

வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு ரொம்பவும் கஷ்டமான வேலை என்றால் அது பூண்டில் தோல் உரிப்பது தான். அதுவே வீட்டில் ஏதாவது ஒரு பெரிய விசேஷம் வைத்து விட்டால் 1 கிலோ பூண்டு, 2 கிலோ பூண்டு கூட தோல் உரிக்கும் வேலை இருக்கும். அதுக்காக நான்கு பாட்டிகளை அமர வைத்து தோலை உரிக்க செய்வோம். ஆனால் அந்த கஷ்டம் இனி தேவை கிடையாது. இந்த சின்ன ஐடியாவை ட்ரை பண்ணி பாருங்க. கைப்படாமல் கத்தியில்லாமல் பூண்டில் இருக்கும் தோலை மிக மிக சுலபமாக பிரித்து எடுத்து விடலாம். வாங்க நேரத்தை கடத்தாமல் அந்த குறிப்பை நாமும் தெரிந்து வைத்துக் கொள்வோம்.

முதலில் முழு பூண்டாக இருக்கிறது அல்லவா. அதை தனித்தனி பல் பூண்டாக பிரித்து வைத்துக் கொள்ளுங்கள். அதை நாம் கையில் தான் செய்ய வேண்டும். மொத்தமாக இருக்கும் ஒரு கிலோ முழு பூண்டையும், ஒரு துணியில் வைத்து சுருட்டி, ஒரு கட்டையை வைத்து அடித்தால் கூட சுலபமாக அது நமக்கு பிரிந்து கிடைத்து விடும். எல்லா பூண்டையும் ஒரு முறத்தில் கொட்டி புடைத்தால், மேலே இருக்கும் லேசான தோலை நீக்கிவிட்டு பூண்டு பற்களை மட்டும் தனியாக வைத்துக் கொள்ளுங்களாம்.

- Advertisement -

அடுப்பில் ஒரு அகலமான கடாயை வைத்து சூடு செய்து அதில் தனித்தனியாக இருக்கும் பூண்டை கொட்டி சூடு செய்யுங்கள். அந்த கடாய் சூட்டிலேயே 30 செகண்ட்ஸ் லிருந்து 50 செகண்ட்ஸ் வரை பூண்டு இருக்க வேண்டும். ஒரு கரண்டியை வைத்து இரண்டு முறை கலந்துவிடலாம். அப்படி இல்லை என்றால் கைப்பிடி உள்ள பேன் பயன்படுத்தினால், பேனை வைத்து இரண்டிலிருந்து நான்கு முறை அந்த பூண்டை டாஸ் செய்து விடுங்கள். அப்படியே பாத்திரத்தோடு எடுத்து ஃபாஸ்ட் ஃபுட் கடைகளில் ப்ரைட் ரைஸ் செய்வார்கள் அல்லவா அதேபோலத்தான். பூண்டுகளை டாஸ் செய்யணும். (பூண்டுக்கு உள்ளே சூடு ஏறி இருக்கக் கூடாது. பூண்டின் தோல் மட்டும் தான் சூடாகி இருக்க வேண்டும். அந்த அளவிற்கு டாஸ் செய்தால் போதும்.)

பூண்டு, கடாயில் லேசாக சூடு ஏறி இருக்கும். பூண்டில் இருக்கும் ஈரப்பதம் அனைத்தும் அப்படியே நீங்கி இருக்கும். அடுப்பை அணைத்து விடுங்கள். ஒரு மெல்லிசான காட்டன் துப்பட்டா அல்லது காட்டன் டவல் உங்கள் சௌகரியத்திற்கு ஏதாவது ஒரு பெரிய துணி எடுத்துக்கோங்க. அதில் வறுத்த இந்த பூண்டை கொட்டி நன்றாக முடிச்சை போட்டுக் கொள்ள வேண்டும். இப்போது இந்த முடிச்சை துணி துவைப்பது போல தரையில் நன்றாக அடிக்க வேண்டும். 10 முறை அடித்தால் கூட தவறு கிடையாது.

- Advertisement -

இந்த முடிச்சை தூக்கி டமால் டமால் என்று தரையில் அடிங்க அவ்வளவுதான். அடிக்கும்போது நல்ல சத்தம் கேட்கும். பிறகு முடிச்சை அவிழ்த்து உள்ளே பூண்டை பாருங்கள். பூண்டில் இருக்கும் தோல்கள் எல்லாம் தனித்தனியாக பிரிந்து வந்திருக்கும்.

சில பூண்டில் தோல் ஒட்டி இருக்கும். உங்கள் கையாலேயே அப்படியே வேர்க்கடலை உரிப்பது போல உரித்தாலே பூண்டு தோல் சுலபமாக வந்துவிடும். இந்த பூண்டை முறத்தில் கொட்டி நன்றாக புடைத்து பூண்டை தனியாக எடுத்துவிட்டால் ஐந்தே நிமிடத்தில் வேலை முடிந்தது. தேவைப்பட்டால் 1/2 கிலோ பூண்டை இந்த முறையில் உரித்து ஒரு பாட்டில் ஸ்டோர் செய்து பிரிட்ஜிலும் வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும்போது எடுத்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.  இதை படிப்பதற்கு வேண்டுமென்றால் பெரிய பதிவு போல இருக்கும். செய்ய மொத்தமாக 10 நிமிடங்கள் கூட ஆகாது. முயற்சி செய்து பாருங்கள்.

சற்று முன்