- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilவெறும் 4 வெண்டைக்காய்கள் இருந்தால் போதும். 2 மணி நேரத்தில் உங்களுடைய முடியை ஹீரோயின் முடி...

வெறும் 4 வெண்டைக்காய்கள் இருந்தால் போதும். 2 மணி நேரத்தில் உங்களுடைய முடியை ஹீரோயின் முடி போல டக்கரா மாத்திடலாம்.

- Advertisement -

முடியை ஸ்ட்ரைட்னிங் செய்தது போல ஒரே நாளில் அழகாக மாற்ற வேண்டும் என்றால், கட்டாயமாக பியூட்டி பார்லருக்கு தான் போக வேண்டும். பியூட்டி பார்லருக்கு சென்று அதிக காசு கொடுத்து கேரட்டின், ஸ்ட்ரெய்டனிங் போன்ற ட்ரீட்மென்டை செய்து கொண்டால் தான், நம்முடைய முடி ஹீரோயின் முடி போல ரொம்ப ரொம்ப அழகா இருக்கும். ஆனா எல்லோராலும் பியூட்டி பார்லருக்கு சென்று இதற்காக செலவை செய்ய முடியாது. ஏனென்றால் முடி பாதுகாப்பாக இருக்க வேண்டும் அதேசமயம் அழகாகவும் இருக்க வேண்டும் என்றால் அதற்கு நாம் செய்யப்போகும் செலவு என்பது கட்டாயம் கொஞ்சம் கூடுதலாக தான் இருக்கும். இயற்கையான பொருட்களை வைத்தே நம்முடைய வீட்டில் நம்முடைய முடியை ஸ்ட்ரைட்னிங் செய்து கொள்வது எப்படி தெரிந்து கொள்வோமா.

முதலில் நான்கிலிருந்து ஐந்து வெண்டைக் காய்களை எடுத்துக் கொள்ளுங்கள். வெண்டைக்காய்களை கழுவிக்கொள்ள வேண்டும். அதன் காம்பு பகுதியை முனைப்பகுதியையும் வெட்டி விடுங்கள். இந்த வெண்டைக்காயை பொரியலுக்கு வெட்டுவது போல சிறு துண்டுகளாக வெட்டி. ஒரு பாத்திரத்தில் போட்டு 1 கப் அளவு தண்ணீரை ஊற்றி இதை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பத்து நிமிடங்கள் இது கொதித்து வந்ததும் கொழ கொழப்பாக தண்ணீர் மாறிவிடும். தண்ணீர் போதவில்லை என்றால் தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் தண்ணீரை கூட ஊற்றி கொதிக்க வைக்கலாம். ஒன்றும் பிரச்சனை கிடையாது.

- Advertisement -

கொழ கொழன்னு வெந்து வந்திருக்கும் இந்த வெண்டைக்காயை நன்றாக ஆற வைத்து மிக்ஸி ஜாரில் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீரோடு ஊற்றி அரைக்க வேண்டும். நைசாக அரைத்த இந்த விழுதை ஒரு மெல்லிசான காட்டன் துணியில் ஊற்றி உங்கள் கையை கொண்டு பிழிந்து வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும்.

ஒரு சிறிய பவுலில் 1 ஸ்பூன் அளவு கான்பிளவர் மாவு போட்டு, 1/4 கப் அளவு தண்ணீரை ஊற்றி அந்த கான்பிளவர் மாவை நன்றாக கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வையுங்கள். அடுப்பை பற்ற வைக்க வேண்டாம். இந்த பாத்திரத்தில் முதலில் அரைத்து வைத்திருக்கும் வெண்டைக்காய் விழுதை ஊற்றி, பின்பு கலந்து வைத்திருக்கும் கான்பிளவர் மாவை ஊற்றி இரண்டையும் நன்றாக கலந்து விட்டு, அடுப்பை பற்ற வைத்து, அடுப்பை சிம்மில் வைத்து இதை சூடு செய்ய வேண்டும்.

- Advertisement -

இது லேசாக திக்காக பேஸ்ட் போல நமக்கு கிடைக்கும். ரொம்பவும் திக்காகி விடக்கூடாது. கொஞ்சம் கொழகொழப்பாக தல தலவென பசை போல பக்குவத்திற்கு இது வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு, இதை ஒரு பவுலில் மாற்றிக் கொள்ள வேண்டும். இந்த பேக்கில் பாதாம் எண்ணெய் 1 ஸ்பூன், தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன், ஊற்றி கலந்து, நன்றாக ஆற வைத்து உங்களுடைய முடியில் தடவ வேண்டும்.

உங்களுடைய முடியை சிறு சிறு பாகங்களாக எடுத்து பிரித்துக் கொண்டு முடியின் எல்லா இடங்களிலும் இந்த பேக் படும் படி தடவ வேண்டும். ஹேர் கெரட்டின் செய்யும்போது ஒவ்வொரு பாகமாக எடுத்து அதில் கிரீமை தடவுவார்கள் அல்லவா அதேபோல உங்களுடைய முடியிலும் இந்த பேக்கை முழுவதையும் போட்டுக் கொண்டு, அப்படியே ஒரு ஹேர் கேப் போட்டு விட்டு விடுங்கள்.

இரண்டு மணி நேரம் கழித்து வெறும் தண்ணீரில் உங்களுடைய தலையை நன்றாக அலசி விட வேண்டும். ஷாம்பு போடக்கூடாது. வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த பேக்கை பயன்படுத்தி வாங்க. சூப்பரான ரிசல்ட் தெரியும். உங்களுடைய முடி சில்க்கியாகவும் ஷைனிங் ஆகவும் சிக்கு இல்லாமலும் மாறி இருக்கும். இந்த பேக்கை பயன்படுத்திய முதல் தடவையிலேயே நல்ல வித்தியாசத்தை உணர்வீர்கள். உங்களுக்கு இந்த டிப்ஸ் பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்