குளிர்சாதன பெட்டி என்பதே, இல்லாமல் இருந்த காலங்களும் உண்டு. அதன் பிறகு இது பெரிய, பெரிய கடைகளிலும், சில வசதி படைத்த வீடுகளிலும் மட்டுமே இருந்து வந்தது, இன்று அதெல்லாம் மாறி நம் அத்தியாவசிய பொருள்களில் ஒன்றாக இந்த குளிர்சாதன பெட்டி வந்துவிட்டது. இப்போது குளிர்சாதன பெட்டி இல்லாத வீடுகளே இல்லை என்று கூறும் அளவிற்கு மாறிவிட்டது. குளிர்சாதன பெட்டி வந்த பிறகு அதில் எதை வைக்க வேண்டும் எதை வைக்கக்கூடாது என்ற ஒரு வரைமுறை இல்லாமல், அனைத்தையும் கொண்டு அதில் அடைத்து வைத்து விடுகிறோம். இதனால் அது சீக்கிரம் பழுதடைந்து விடுவதோடு மட்டுமல்லாமல், எந்த பொருளுடன் எதை வைக்க வேண்டும் என்று தெரியாமல் நாம் அனைத்தையும் கொண்டு அடைப்பதனால் நாமே விலை கொடுத்து வாங்கிய குளிர்சாதன பெட்டியில், நாமே நோயையும் வாங்கிக் கொள்கிறோம் என்பது தான் உண்மை. இது இரண்டையுமே தடுக்க ஒரு சில வழிமுறைகளை பின்பற்றினால் நல்லது. குளிர்சாதன பெட்டியை எதற்கு வாங்குகிறோம், அதை எப்படி பயன்படுத்த வேண்டும், அதே போல் இதில் எதை வைக்க வேண்டும், எதை வைக்கக்கூடாது என்பதையும் சில குறிப்புகளை தெரிந்து கொள்ளுங்கள்.
பொதுவாகவே இன்று குளிர்சாதன பெட்டியை சமையலறையில் தான் வைக்கிறார்கள். ஆனால் முடிந்த அளவிற்கு சமையலறையில் வைக்காமல் இருந்தால் நல்லது. சமையலறை எப்போதும் வெப்பத்துடனே இருப்பதால், இதன் நிறம் மங்கி விடும். அது மட்டும் இல்லை குளிர்சாதன பெட்டியும் இதனால் சீக்கிரமே பழுதடைய வாய்ப்புகள் அதிகம். அதோடு மட்டுமல்லாமல் குளிர்சாதன பெட்டியிலும் கேஸ் இருக்கும். அந்த கேஸ் லீக் ஆவதால் ஏதாவது ஆபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.
குளிர்சாதன பெட்டியை வீட்டின் சுவற்றுக்கு அருகே வைக்க கூடாது, ஏனென்றால் இதற்கு பின்புறம் கம்பி வலை போன்று இருக்கும். இதில் ஈரம் படக்கூடாது. சுவற்றின் அருகில் இருப்பதால் மழைக்காலங்களில் சுவரில் ஏற்படும் ஈரத் தன்மையால் குளிர்சாதன பெட்டியின் கம்பி வலை பாதிக்கப்பட்டு சீக்கிரம் பழுதடைந்து விடும்
குளிர்சாதன பெட்டியை அடிக்கடி திறந்து மூட கூடாது. இப்படி திறந்து முடிவதால் கூலிங் அதிகமா வெளியேறி சீக்கிரம் பழுதடைந்து விடும் மின்சார கட்டணமும் அதிகம் ஆகும். ஐஸ் கட்டிகள் அதிகம் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு வேளை அப்படி சேர்த்து விட்டால் குளிர்சாதன பெட்டியை அணைத்து விட்டு தான் சுத்தம் செய்ய வேண்டும். ஐஸ் கட்டிகள் சேர்த்து விட்டாலும் விரைவில் குளிர்சாதன பெட்டி பழுதடைய வாய்ப்பு உள்ளது.
இது மட்டுமின்றி சில வீடுகளில் அரிசி, புளி, பூண்டு, பருப்புகளை டப்பாக்களில் அடைத்து குளிர்சாதன பெட்டியில் வைத்து விடுகிறார்கள். இவையெல்லாம் வெளியே மாதகணக்கில் வைத்தாலும் கூட ஒன்றும் ஆகாது. சில சமயம் வண்டு வரும், அது வராமல் தடுக்கவும் எளிய வழிமுறைகள் உள்ளது. அதை செய்து பாதுகாத்தாலே போதும். இதை குளிர்சாதன பெட்டியில் வைத்து தான் பாதுகாக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அதிக அளவு பொருட்களை பிரிட்ஜில் அடைப்பதாலும் பழுதடைய வாய்ப்பு உள்ளது.
இதையும் படிக்கலாமே: காரைக்குடி ஸ்டைலில் காரசாரமான காரச் சட்னி. காரம்னா உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா? அப்ப இந்த சட்னி ரெசிபியை மிஸ் பண்ணாதீங்க.
அனைத்திலும் விட முக்கியமான ஒன்று தண்ணீர் கேன்களை வாங்கி நாம் அப்படியே பிரிட்ஜில் வைப்பது, இதை கட்டாயமாக செய்யவே கூடாது. ஏனெனில் இது போன்ற தண்ணீர் பாட்டிகளை குளிர்விக்கவே கூடாது. ஏனென்றால் இது குளிர்விக்கும் போது இதில் வேதிப்பொருள் வெளி வரும். இது அதிக அளவு குளிர்வித்தாலும் வரும், அதிக சூடு பட்டாலும் வரும். இந்த சாதாரண பிளாஸ்டிக்களில் கிடைக்கும் தண்ணீர் பாட்டில்ளை எக்காரணத்திற்கு கொண்டும் பிரிட்ஜ்ஜில் வைத்து விடாதீர்கள். இதனால் எண்ணற்ற நோய்களுடன் கொடுமையான கேன்சர் வரவும் வாய்ப்பு உண்டு. உங்க வீட்டு பிரிட்ஜ் எப்படி இருக்கு பாருங்க. மேல் சொன்ன தவறுகளை நீங்கள் செய்திருந்தால் அதை இனிமேல் திருத்திக் கொள்ளுங்கள். ஆரோக்கியமாக வாழலாம். உங்களுடைய பிரிட்ஜும் ரொம்ப நாட்களுக்கு நீடித்து வரும்.