காரைக்குடி ஸ்டைலில் காரசாரமான காரச் சட்னி. காரம்னா உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா? அப்ப இந்த சட்னி ரெசிபியை மிஸ் பண்ணாதீங்க.

chutney5
- Advertisement -

இட்லி தோசை சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட காரசாரமான கார சட்னி என்றால் உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா. அப்ப உங்களுக்காக இரண்டு சட்னி ரெசிபிகள் இந்த குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு சட்னியுமே காரசாரமாக செய்யக்கூடிய சட்னி தான். அதுவும் ரொம்ப ரொம்ப ஈஸியா செய்யலாம். இந்த சட்னியை முயற்சி செய்து பாருங்கள். 10 இட்லியை கூட சிரமம் இல்லாமல் சாப்பிடும் அளவிற்கு இதில் ருசி இருக்கும். வாங்க நேரத்தை கடத்தாமல் இந்த இன்ட்ரஸ்டிங்கான ரெண்டு ரெசிபியை நாமும் தெரிந்து கொள்ளலாம்.

காரைக்குடி காரச்சட்னி:
ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தோல் உரித்த பூண்டு பல் – 8, வரமிளகாய் – 6, சிறிய கோலிக்குண்டு அளவு – புளி, இந்த 3 பொருட்களையும் போட்டு கொரகொரப்பாக அரைத்து விட்டு, பிறகு இதிலேயே தோலுரித்த சின்ன வெங்காயம் – 8 லிருந்து 10 பல் போட்டு, இதையும் ஒரு ஓட்டு ஓட்டி அரைத்து இந்த விழுதை அப்படியே தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து நல்லெண்ணெய் – 2 ஸ்பூன் ஊற்றி, கடுகு – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, போட்டு மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் விழுது இந்த எண்ணெயில் போட்டு இரண்டு நிமிடங்கள் வதங்க விடுங்கள்.

இதற்குள் அந்த மிக்ஸி ஜாரில் 1 பெரிய பழுத்த தக்காளியை போட்டு விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். (ரொம்பவும் சின்னதாக இருந்தால் 2 தக்காளி பழங்களை கூட எடுத்துக் கொள்ளலாம்.) கடாயில் வதங்கிக் கொண்டிருக்கும் விழுதோடு அரைத்த இந்த தக்காளியையும் சேர்த்து ஒரு நிமிடங்கள் போல மீண்டும் நன்றாக வதக்கி விட்டு, 1 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு, இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைத்தால், சூப்பரான கார சட்னி தயார். சுட சுட இட்லி கல் தோசைக்கு இந்த சைட் டிஷ் வேற லெவல்ல இருக்கும் நீங்களே ட்ரை பண்ணி பாருங்க. (இது ரொம்பவும் திக்காக இருக்க கூடாது. ஓரளவுக்கு தண்ணீராக தயார் செய்து கொள்ளுங்கள்.)

- Advertisement -

வெறும் வெங்காயத்தை வைத்து சூப்பர் கார சட்னி:
அட வீட்டில் வெறும் வெங்காயம் மட்டும்தான் இருக்கா. அப்ப கூட இந்த சட்னியை சூப்பரா செய்யலாம். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கோங்க. தோல் உரித்து வெட்டிய பெரிய வெங்காயம் – 2, தோல் உரித்த சின்ன வெங்காயம் – 15 பல், எலுமிச்சை பழ அளவு – புளி, வெல்லம் – 1 ஸ்பூன், மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன், சேர்த்து தண்ணீர் எதுவும் ஊற்றாமல் விழுதாக இதை அரைத்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: இப்படி ஒரு குருமாவை இதுவரைக்கும் நீங்க சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க. 10 நிமிடத்தில் பாசிப்பருப்பு குருமா ரெசிபி உங்களுக்காக.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு – 1/2 ஸ்பூன் போட்டு தாளித்து மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் இந்த சட்னியை தாளிப்பில் கொட்டி தேவையான அளவு உப்பு போட்டு, நன்றாக கலந்து விட வேண்டும். இந்த வெங்காயத்தில் இருக்கும் பச்சை வாடை நீங்கி, சட்னி நன்றாக சுண்டி தொக்கு பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவு தான். சுட சுட இட்லி, தோசை சப்பாத்திக்கு வேற லெவல் சைடிஷ் இது. உங்களுக்கு மேலே சொன்ன சட்னி ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -