- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilமுகத்தில் வடியும் எண்ணெய் பசையை நீக்க, இனி உங்களுக்கு எந்த கிரீமோ, ஃபேஸ் வாஸ்ஷோ தேவைப்படாது....

முகத்தில் வடியும் எண்ணெய் பசையை நீக்க, இனி உங்களுக்கு எந்த கிரீமோ, ஃபேஸ் வாஸ்ஷோ தேவைப்படாது. இதோ இப்படி செய்தாலே போதும்.

- Advertisement -

முகத்தில் வடியும் எண்ணெய் பசை நீக்க இப்போது எல்லாம் அதிக கிரீம்கள் பேக்குகள் போன்றவற்றை வந்து விட்டது. இதனால் பெருமளவு அவர்களுக்கு மாற்றம் தெரிந்ததா என்றால் இருந்திருக்காது. அனைத்துமே தற்காலிகமாக மட்டுமே சரி செய்திருக்க முடியும். ஏனென்றால் இந்த முகத்தில் வடியும் எண்ணெய் பசையை வராமல் இருக்க மேலே போடும் இந்த பேக் ஆனது மேல் தோல்களை மட்டுமே வறட்சி அடைய செய்யும். இதன் மூலம் எண்ணெய் பசை இல்லாமல் முகம் ஆகிவிட்டது என்று நினைத்து எண்ணெய் சுரப்பிகள் இன்னும் அதிகமாக சுரக்க ஆரம்பிக்குமே தவிர அதை கட்டுப்படுத்தாது. அதை கட்டுப்படுத்துவதற்காக சில குறிப்புகள் இதோ உங்களுக்காக இந்த பதிவில்.

முல்தானி மெட்டி பவுடர் இரண்டு ஸ்பூன், ரோஸ் வாட்டர் ஒரு ஸ்பூன் இரண்டையும் நன்றாக கலந்து முகத்தில் தடவி பத்து நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடலாம்.

- Advertisement -

லெமன் ஜூஸ் முகத்தில் இதையும் முகத்தில் தேய்த்த பிறகு பத்து நிமிடம் கழித்து கழுவி விடுங்கள். இதை தேய்க்கும் போது கொஞ்சம் எரிச்சல் இருக்கும். எரிச்சல் இருந்தால் தான் முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் வெளியே வருகிறது என்று அர்த்தம். எனவே பயப்பட வேண்டாம் இதையும் தினமும் பத்து நிமிடம் முகத்தில் போட்டுக் கொள்ளலாம்.

வெள்ளரிக்காயை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு நல்ல டேஸ்ட்டாக அரைத்து அதையும் தினம் ஒரு பத்து நிமிடம் உங்கள் முகத்தில் அப்ளை செய்து கொள்ளலாம்.

- Advertisement -

அதே போல் வேப்பிலை கொழுந்து அதையும் எடுத்து நன்றாக மிக்ஸியில் அரைத்து பேஸ்ட் போல செய்து உங்கள் முகத்தில் ஐந்து நிமிடம் போட்டால் போதும். இதை போடும் போது முகத்தில் எரிச்சல் இருக்கும் பயப்பட வேண்டாம் போட்ட பிறகு ஐந்து நிமிடம் கழித்து முகத்தை அலம்பி விடலாம்.

முட்டையின் வெள்ளைக்கரு இது ஒரு நல்ல ஃபேஸ் மாஸ்க் இதை போட்ட பிறகு பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி விடுங்கள்.

- Advertisement -

புதினா இலைகளை எடுத்து நன்றாக அரைத்த பிறகு சாறு எடுத்து அதை முகத்தில் தேய்த்து பத்து நிமிடம் நன்றாக மசாஜ் செய்து கொடுங்கள். அதன் பிறகு பத்து நிமிடம் கழித்து முகத்தை சுத்தம் செய்யும் போது முகம் அவ்வளவு பளபளப்பாக மாறிவிடும்.

இது மட்டும் இல்லாமல் இயற்கையாக கிடைக்கும் ஆலுவேரா ஜெல், அதையும் தினமும் உங்கள் முகத்தில் தடவி பிறகு சுத்தம் செய்யலாம். தக்காளி இதையும் தினமும் முகத்தில் தேய்த்து வரலாம். ரோஸ் வாட்டர் ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது இந்த ரோஸ் வாட்டரை முகத்தில் தேய்த்து கொள்ளலாம் அது மட்டுமில்லாமல் ஐஸ் கியூப் இருந்தால் அதையும் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஒரு ஐந்து நிமிடம் வரை உங்கள் முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: வெறும் ஐந்தே நிமிடத்தில் அழகான அடர்த்தியான புருவத்தை இயற்கையாக பெற, வைரலாகும் ஐப்ரோ ட்ரிக்.

இவை எல்லாம் உங்கள் முகத்தில் வடியும் எண்ணையை தடுக்கும் இயற்கையான முறை. அதுமட்டுமின்றி எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சம் மூன்று முறை மட்டும் முகத்தை கிளம்பின ாலே அதற்கு மேல் அளம்ப வேண்டிய அவசியம் போது முகத்தில் இருக்கும் எண்ணெய் பசை சுத்தமாக வடிய வடிய அதிகமாக சுரக்க ஆரம்பிக்கும். சில விஷயங்களை நாம் எதற்கு செய்கிறோம் என்று தெரியாமலே செய்து பிரச்சனைகளை பெரிதாக்கிக் கொள்கிறோம் இதில் இருக்கும் குறிப்புகளில் ஏதாவது ஒன்றை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தாலே போதும் உங்கள் எண்னெய் வடியும் சருமம் நன்றாகவே மாறி இருக்கும் மாற்றத்தை உணருவீர்கள்.

சற்று முன்