- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்இன்னுமா வடைக்கு பருப்பு ஊற வைத்து அரைச்சுட்டு இருக்கீங்க. வடை செய்யனும்னு முடிவு பண்ணீங்கன்னா பத்து...

இன்னுமா வடைக்கு பருப்பு ஊற வைத்து அரைச்சுட்டு இருக்கீங்க. வடை செய்யனும்னு முடிவு பண்ணீங்கன்னா பத்து நிமிஷத்துல வடையை சுட்டு எடுத்துரலாம். பருப்பே ஊற வைக்காமல் இப்படி ஒரு முறை வடை சுட்டுப் பாருங்க.

- Advertisement -

நம் சிற்றுண்டி வகைகளில் எதை செய்தாலும் அதற்கு சைடிஷ் ஆக ஒரு வடை இருக்கும் அது கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு இன்னும் பல வகை வடைகள் இருக்கிறது. டிபன்,சாப்பாடு என்று எதை சமைத்தாலும் வடை என்பது ஒரு முக்கியமான சைடு டிஷ் ஆக இருக்கும். இந்த முக்கியமாக வைக்கப்படும் இந்த சைட் டிஷ் தான் மற்ற உணவுகளை தயாரிப்பதற்கு முன்பாகவே நாம் செய்ய வேண்டியதாக இருக்கும். சாதம், குழம்பு, பொரியல் எல்லாம் கூட நினைத்தவுடன் அப்படியே செய்து விடுவோம். ஆனால் இந்த வடைக்கு மட்டும் நாம் முதலில் பருப்பு ஊற வைத்து பருப்பு சரியான பதத்தில் ஊறிய பிறகு அதை அரைக்கும் பதமும் சரியாக அரைத்து இப்படி ஒரு வடை சாப்பிட வேண்டும் என்றால் அதற்கு முன் இத்தனை வேலை செய்ய வேண்டியது இருக்கும். ஆனால் அதே வடையை பருப்பு ஊற வைக்காமல் அதிக நேரம் எடுக்காமல் நினைத்த மாத்திரத்திலே சுட்டு எடுக்க முடியும் அதை நாம் செய்து பார்த்து விடலாம் தானே, வாங்க அதை எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்: பொட்டுக்கடலை -1 கப், துருவிய கேரட் – 1 கப், மிளகு -1 ஸ்பூன், சோம்பு -1 ஸ்பூன், பூண்டு தோல் உரிக்காதது – 4 பல், வெங்காயம் -1 (பொடியாக நறுக்கியது), பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது), இஞ்சி – 1துண்டு (துருவியது) காய்ந்த மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது) கருவேப்பிலை கொத்தமல்லி – 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது) உப்பு – 1/2 டீஸ்பூன், எண்ணெய் – 200 கிராம்.

- Advertisement -

முதலில் கேரட்டை நன்றாக சுத்தம் செய்து தோள் நீக்கி துருவி எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலை, மிளகு, சோம்பு சேர்த்து லேசான கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அதில் துருவிய கேரட் பூண்டு சேர்த்து ஒரு ரெண்டு சுற்று மட்டும் விட்டால் போதும். இது கொஞ்சம் கொரகொரப்பாக தான் இருக்க வேண்டும்.

இதை அரைத்து எடுத்த பிறகு தனியாக ஒரு பவுலில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். இத்துடன் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், துருவிய இஞ்சி, உப்பு அனைத்தும் சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளுங்கள். தண்ணீர் அதிகமாக சேர்க்கக் கூடாது தண்ணீர் அதிகமானால் வடை எண்ணெய் அதிகம் குடித்து விடும். எனவே தண்ணீர் லேசாக தெளித்து மட்டும் பிசைந்தால் போதும்.

- Advertisement -

இப்போது அடுப்பை பற்ற வைத்து கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் எண்ணெயில் வடையை போட்டு எடுக்கவும். எண்ணெய் அதிகமாக காய்ந்து விடாமல் மீடியம் பிலிம் வைத்து பொரித்து எடுங்கள் . தீ மிகவும் குறைவாக இருந்தால் ஒன்று வடை எண்ணெய் குடித்து விடும் இல்லை என்றால் உதிர்ந்து வந்து விடும். அதிக தீ இருந்தாலும் போட்டவுடன் பொட்டுக்கடலை மாவு என்பதால் கருகி விடும். தீ மட்டும் மிதமாக இருக்கும் படி பார்த்து வடையை பொரித்து த்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: பாவக்காய் இப்படி மட்டும் நீங்க சமைச்சா யாரும் வேண்டாம்னு சொல்லவே மாட்டாங்க! ரத்தத்தை சுத்தமாக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பாவக்காய் தொக்கு ரொம்ப ஈஸியாக எப்படி செய்வது?

சுவையான பொட்டுக்கடலை வடை ரெடி. இனி வடை சாப்பிட வேண்டும் என்று நினைத்த உடனே இந்த வடையை செய்து விடலாம். அதுமட்டும் இல்லாமல் இதில் கேரட், பொட்டுக்கடலை, மிளகு என உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பொருள்களும் சேர்ந்து இருப்பதால் குழந்தைகளுக்கு இதை தாராளமாக செய்து தரலாம்

சற்று முன்