- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்பாவக்காய் இப்படி மட்டும் நீங்க சமைச்சா யாரும் வேண்டாம்னு சொல்லவே மாட்டாங்க! ரத்தத்தை சுத்தமாக்கி, நோய்...

பாவக்காய் இப்படி மட்டும் நீங்க சமைச்சா யாரும் வேண்டாம்னு சொல்லவே மாட்டாங்க! ரத்தத்தை சுத்தமாக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பாவக்காய் தொக்கு ரொம்ப ஈஸியாக எப்படி செய்வது?

- Advertisement -

பாகற்காய் என்றாலே பலருக்கும் அலர்ஜி தான். இதன் கசப்பு தன்மை காரணமாகவே எல்லோரும் இதை ஒதுக்கி வைத்து விடுவது உண்டு. கசப்பு தான் எல்லாவற்றுக்கும் மருந்தாக இருக்கிறது. நம் உடலில் இருக்கும் ரத்தத்தை சுத்தமாக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய ஆற்றல் இதற்கு உண்டு. எனவே ரெண்டு பாகற்காய் இருந்தால் போதும், இது போல நீங்கள் சட்டுனு 10 நிமிடத்திலேயே தொக்கு வச்சு பாருங்க, நீங்க இனி பாகற்காயை தேடி தேடி வாங்குவீங்க! அந்த அளவிற்கு ருசியாக இருக்கக்கூடிய இந்த பாகற்காய் தொக்கு எப்படி எளிதாக நம் வீட்டில் செய்யலாம்? என்பதை இனி தொடர்ந்து இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்

பாவக்காய் தொக்கு செய்ய தேவையான பொருட்கள்:
சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன், கடுகு – ஒரு ஸ்பூன், உளுத்தம் பருப்பு – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, பெரிய வெங்காயம் – ஒன்று, வட்ட வட்டமாக நறுக்கிய பாகற்காய் துண்டுகள் – ஒரு கப், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன், மல்லித்தூள் – ஒரு ஸ்பூன், சீரகத்தூள் – ஒரு ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

பாவக்காய் தொக்கு செய்முறை விளக்கம்:
கசக்கும் பாவற்காயையும் இப்படி செய்தால் ரசித்து ருசித்து சாப்பிடலாம். முதலில் ரெண்டு பெரிய பாகற்காய்களை எடுத்துக் கொள்ளுங்கள். அதை நன்கு சுத்தம் செய்து பின்னர் வட்ட வட்டமாக வெட்டிக் கொள்ளுங்கள். உள்ளே இருக்கும் விதைகளை எல்லாம் எடுத்து விடுங்கள். இதை ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். பின் தேவையான மற்ற எல்லா பொருட்களையும் தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன் நிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கொத்து கருவேப்பிலையை கழுவி உருவி சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் இதனுடன் தோலுரித்து சுத்தம் செய்து பொடி பொடியாக நறுக்கிய வெங்காயத்தை உதிர்த்து சேர்க்க வேண்டும். வெங்காயம் வதங்க கொஞ்சம் போல் உப்பு போட்டுக் கொள்ளுங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும் நீங்கள் வெட்டி வைத்துள்ள பாகற்காய் துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கி விடுங்கள். ஒரு ஐந்து நிமிடத்திற்கு நன்கு வதங்கி வரும் பொழுது மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள் மற்றும் தேவையான அளவிற்கு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கிண்டி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
பஞ்சு போன்ற கார கொழுக்கட்டை ரேஷன் புழுங்கல் அரிசியிலும் வருமா? 10 நிமிஷத்தில் ரேஷன் அரிசியில் கார கொழுக்கட்டை செய்வது எப்படி?

இவற்றின் மசாலா வாசம் போக ஒரு முறை நன்கு பிரட்டியதும், கொஞ்சம் போல் தண்ணீர் தெளித்து மூடி வைத்து விடுங்கள். இடையிடையே நீங்கள் எடுத்து கிண்டி பார்க்க வேண்டும். 10 நிமிடம் இது போல் மூடி வைத்து கிண்டி விட்டால் தொக்கு போல நன்கு பாகற்காய் வெந்து மசாலாக்களுடன் ஒன்றுடன் ஒன்று கலந்து சூப்பராக டேஸ்ட்டியாக உங்களுக்கு பாகற்காய் தொக்கு ரெசிபி கிடைக்கும். இதே போல நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பார்த்து அசத்துங்கள்.

சற்று முன்