புடவை பல வகையான துணிகளில் தயாராகிறது. என்ன தான் பட்டு புடவை விலை அதிகமாக கொடுத்து வாங்கி வைத்துக் கொண்டாலும் அனைத்து நாட்களிலும் அதை நாம் உடுத்திக் கொள்ள முடியாது. ஒரு சிலருக்கு பட்டுப்புடவையே இருந்தாலும் கூட இந்த காட்டன் புடவைகள் மீது அப்படி ஒரு ஆசை இருக்கும். ஏனென்றால் அதை பராமரிக்கும் விதத்தில் பராமரித்து நேர்த்தியாக கட்டினால் அத்தனை அழகாகவும் எடுப்பாகவும் காட்டும் தன்மை வேறு எந்த புடவையிலும் இருக்காது. இன்னும் சிலருக்கோ இப்படியெல்லாம் கட்ட ஆசை இருந்தாலும் அந்த காட்டன் புடவையை பராமரிப்பது அதிக வேலை என்று நினைத்து வாங்காமலும் இருப்பார்கள். இனி அப்படியெல்லாம் யோசித்து ஆசைப்பட்ட கூடவே கட்டாமல் இருக்க வேண்டாம் கூடவே பராமரிப்பது பெரிய விஷயமே இல்லை மிக சாதாரணமாக காட்டன் புடவைகளை எப்படி பராமரிப்பது என்பது எந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த காட்டன் புடவை பொறுத்தவரையில் கஞ்சி போடுவது மட்டும்தான் இதில் நாம் பார்க்க வேண்டிய முக்கியமான வேலை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் அதில் அதற்கு முன் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான வேலை இருக்கிறது துணியை துவைப்பதற்கு முன்பாக ஒரு வழியில் ஒரு கைப்பிடி அளவிற்கு கல் உப்பு சேர்த்து உப்பை நன்றாக கரைத்து விட்டு பிறகு இந்த புடவையை அதில் முக்கிய ஐந்து நிமிடம் வரையிலாவது அப்படியே விட வேண்டும். அதன் பிறகு தான் நீங்கள் துவைக்கவே ஆரம்பிக்க வேண்டும் காரணம் இந்த காட்டன் புடவையில் உள்ள சாயம் சீக்கிரம் இறங்கிவிடும் இதைப் போல நீங்கள் முதன்முதலில் துவைக்கும் போது செய்து விட்டால் புடவையில் உள்ள சாயம் ஒரு போதும் போகாது உறவையும் நீண்ட நாள் உழைக்கும். இதை புடவை வாங்கி முதல் முறை தொவைக்கும் பொது மட்டும் செய்தால் போதும்.
அதற்கு புடவையை கஞ்சி போடும் முறை தான் இப்போது அதற்கென தனியாக பவுடர் எல்லாம் வந்து விட்ட போதிலும் நாம் பாரம்பரியமான முறையில் ஒரு புடவையை எப்படி பராமரிப்பது என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.
அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். தண்ணீர் கொஞ்சம் அதிகமாகவே இருக்கலாம் தவறில்லை கடைகளில் ஜவ்வரிசி பவுடர் என்று தனியாக கிடைக்கும் அப்படி பவுடர் கிடைக்கவில்லை என்றால் 50 கிராம் ஜவ்வரிசி வாங்கிக் கொண்டாலே போதும். அதை நன்றாக மிக்ஸியில் அரைத்து பவுடராக்கி சலித்து எடுத்துக் கொள்ளுங்கள். அந்த பவுடரில் ஒரு இரண்டு ஸ்பூன் மட்டும் எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி கரைத்து இந்த சூடான தண்ணீரில் ஊற்றுங்கள். ஊற்றிய பிறகு தண்ணீர் நன்றாக கொதிக்க வேண்டும் கொதித்த பிறகு அந்த தண்ணீரை பார்த்தால் ஜவ்வரிசி எல்லாம் கரைந்து கண்ணாடி பதம் போல் இருக்கும் அவ்வளவு தான் அடுப்பை அணைத்து விடுங்கள்.
இப்போது இது நன்றாக ஆறியப் பிறகு ஒரு பெரிய பக்கெட்டில் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நீங்கள் காய்ச்சிய இந்த கஞ்சியை உங்கள் புடவையின் அளவிற்கு ஏற்றார் போல் ஒரு புடவை தான் எடுத்து இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் தயாரித்து வைத்ததில் ஒரு கப் அளவிற்கு ஊற்றினாலே போதும். அந்த கஞ்சியை தண்ணீரில் கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.
இதற்கு இடையில் துணியை உப்பு சேர்த்த தண்ணீரில் முக்கி எடுத்து துவைத்த பிறகு நன்றாக ஈரம் இல்லாமல் பிழிந்து உதறி எடுத்துக் கொள்ளுங்கள் அதன் பிறகு புடவையை அப்படியே கஞ்சில் நனைக்க கூடாது. புடவை கட்டும் போது கொசுவம் எப்பொது போல எடுத்த பிறகு கஞ்சியில் நனைக்க வேண்டும். அனைத்துப் பிறகு எடுத்து பிழிந்து நன்றாக உதறி நேரடியான வெயில் படாத இடமாக பார்த்து இந்த புடவையை காய வைத்துக் கொள்ளுங்கள். புடவை காய்ந்த பிறகு நன்றாக உதறி மடித்து அயன் செய்து வைத்து விட்டால் எப்போதுமே புது புடவை போலவே இருக்கும்.
இதையும் படிக்கலாமே: வாஷிங் மெஷினில் துணி துவைப்பவரா? வருட கணக்கில் அதில் துணி துவைப்பவர்கள் இந்த விஷயத்தை மட்டும் கவனிக்காமல் விட்டுடாதீங்க! 3 மாசத்துக்கு ஒரு முறை செக் பண்ணுங்க.
இது நீங்கள் பழைய புடவை தான் கஞ்சி போட்டு கட்டி இருக்கிறீர்கள் என்று யாரும் நம்பவே மாட்டார்கள்.