- Advertisement -
Homeஜோதிடம்ராசி பலன் | Indraya rasi palanஇன்றைய ராசிபலன் – 11 அக்டோபர் 2026

இன்றைய ராசிபலன் – 11 அக்டோபர் 2026

- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். உங்களுடைய பேச்சுக்கு நாலு பேர் ஆதரவு தெரிவிப்பார்கள். உங்களுக்கான மதிப்பும் மரியாதையும் உயரும். குடும்பத்திலிருந்து வந்த மன கசப்பு சரியாகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும். இன்ற விடுமுறை நாள் என்பதால் தேவையான அளவு ஓய்வும் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் பெருசாக பிரச்சனைகள் இல்லை.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று முழு நேர ஓய்வு தேவை. உடல் அசதி இருக்கும். சோர்வு இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் கவனம் செலுத்த முடியாது. இன்று விடுமுறை நாள் என்பதால் பெருசாக பாதிப்புகள் இல்லை. தேவையான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். கூடுமானவரை பயணங்களை தவிர்த்து விடுங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்கள் இன்று சின்ன சின்ன சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை வரும். அலைச்சல் இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்தையும் முழு கவனம் தேவை. பொறுப்புகளை தட்டிக் கழிக்க கூடாது.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று லாபமான நாளாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். உங்களுடைய வேலையில் சுறுசுறுப்பு வெளிப்படும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். நீண்ட தூர பயணங்களால் மன அமைதி ஏற்படும். சந்தோஷம் இரட்டிப்பாகும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் கொஞ்சம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வருமானத்தை சேமித்து வைத்து பழகுவது நல்லது. வீண் விரைய செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். வேலையிலும் வியாபாரத்திலும் முழு கவனம் செலுத்துங்கள். நேரத்தை வீணடிக்க கூடாது. அதிக நேரம் கைபேசி பார்க்கக் கூடாது.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சுகமான நாளாக இருக்கும். நேரத்திற்கு சாப்பாடு, நேரத்திற்கு தூக்கம், நல்ல ஓய்வு என்று இந்த நாள் இனிமையான நாளாக அமைய போகின்றது. வேலை தேடி கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வாழ்க்கைத் துணை தேடி கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்தி கிடைக்கும். சுபகாரிய தடைகள் விலகும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். விடுமுறை நாள் என்று கூட பார்க்க மாட்டீர்கள். உங்களுடைய கடமைகளை சரியாக செய்வீர்கள். வருமானம் பெருகும். நிதிநிலைமை சீராகும். வீட்டில் இருக்கும் பெண்கள் வீட்டை சுத்தம் செய்வது, பழுது போன பொருட்களை சரி செய்வது போன்ற வேலையில் கவனம் செலுத்துவீர்கள். மனநிறைவான நாளாக இந்த நாள் அமையும்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். தெளிவாக சிந்திப்பீர்கள். திறமையாக பேசுவீர்கள். வசீகரத் தோற்றத்தோடு வலம் வரப்போகிறீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும். மனதிற்கு பிடித்த வாழ்க்கை துணை அமையும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பாராத முன்னேற்றம் இருக்கும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் விலகும். நீண்ட தூர பயணங்களால் மனமகிழ்ச்சி உண்டாகும். சுபசெலவர்கள் ஏற்படும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்த நல்லது நடக்கும். ப்ரமோஷனுக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று மன பயம் கொஞ்சம் இருக்கும். பதட்டம் இருக்கும். புது முடிவுகள் எடுக்கும் போது தடுமாற்றம் வரும். அனுபவசாலிகளின் பேச்சை கேட்டு நடக்க வேண்டும். குறிப்பாக மாணவர்கள் இளைஞர்கள் இன்று நிதானத்தோடு இருக்க வேண்டும். இறை வழிபாடு செய்யுங்கள் மனதை அலைபாய விடாதீர்கள்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மனம் வருத்தம் இருக்கும். பழைய பிரச்சனைகள் எல்லாம் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழு கவனம் செலுத்த முடியாது. கொஞ்சம் பண பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு உள்ளது. வீண் விரைய செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். அதிக வட்டிக்கு கடன் வாங்காதீர்கள்.

மீனம்


மீன ராசிக்காரர்கள் இன்று நிதானத்தோடு இருக்க வேண்டும். மனதிற்குள் பெரிய பிளான் வச்சிருப்பீங்க. ஆனா அது எல்லாம் சரியாகவே நடக்காது. சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நாள். இறைவழிபாடு செய்யுங்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். பொறுப்புகளை தட்டிக் கழிக்காதீர்கள். நல்லது நடக்கும்.

சற்று முன்