இன்றைய கால சூழலில் பெண்களுக்கு இருக்கும் பல பிரச்சனைகளில் தங்களின் அழகு பாதித்து விடாமல் பாதுகாப்பது மிகவும் முக்கியமானதாகி விட்டது. அது ஏன் இன்றைய காலக்கட்டம் முன்பெல்லாம் இது போல இல்லையா என்றால், முன்பெல்லாம் இவ்வளவு தூசு, உணவு மாற்றங்கள் போன்றவை கிடையாது. இயற்கையான முறையில் சமைத்து இயற்கையான பொருட்களை பயன்படுத்தி வரும் பொழுது அவர்களின் அழகும், ஆரோக்கியமும் நன்றாகவே இருந்தது. இப்பொழுது யாரையும் குற்றம் சொல்வதற்கும் இல்லை சூழ்நிலை அதைப் போல் மாறிவிட்டது. நல்ல அழகாக இருக்கும் ஒருவர் முகத்தில் இந்த வெண்புள்ளிகள் வந்து விட்டால் அழகை கெடுப்பதுடன் இல்லாமல் பார்க்கவே அருவருப்பாகவே ஆகிவிடுகிறது. முகப்பரு கூட இருந்தால் அது ஒரு சிலருக்கு பார்க்க நன்றாகவே இருக்கும். இந்த மூக்கின் மீதும் தாடைக்குக் கீழும் தோன்றும் வெண்புள்ளிகள் முகத்தின் அழகை மொத்தமாகவே அசிங்கப்படுத்திவிடும் இதை சரி செய்வதும் கடினம். இந்த வெண்புள்ளியை போக்க ஒரு சுலபமான வழி முறையை பற்றிய பதிவு தான் இது.
இந்த வெண்புள்ளிகள் தோன்ற முக்கியமான காரணம் உணவு சூழ்நிலை இரண்டும் தான். உணவில் அதிகப்படியான எண்ணெய் சேர்த்த உணவை உட்கொள்வதும் முகத்தில், அழுக்கு படிவதும் இதற்கான முக்கியமான காரணம். வெளியில் இருக்கும் தூசுகளை சரி செய்ய முடியாது என்பது உண்மை தான். ஆனால் நாம் உண்ணும் நினைவில் உணவு கட்டுப்பாட்டை கொஞ்சம் கடைப்பிடித்தால் ஓரளவிற்கு இந்த பிரச்சனைகளில் இருந்து வெளிவந்து விடலாம் உணவுகளை எடுத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
ஒரு பௌலில் ஒரு ஸ்பூன் அளவிற்கு தயிர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள்,அரை ஸ்பூன் டூத் பேஸ்ட், நீங்கள் பயன்படுத்தும் எந்த பேஸ்ட்டை வேண்டுமானாலும் உபயோகிக்கலாம். அடுத்து கால் ஸ்பூனுக்கும் குறைவாக பேக்கிங் சோடா, இதையெல்லாம் கலக்க எலுமிச்சை சாறு சேர்த்து இதை நல்ல பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
இப்போது இந்த கிரீமை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பார்ப்போம். இந்த கிரீமை கைகளால் எடுத்து தேய்க்க கூடாது. எலுமிச்சை பழத்தை பிழிந்த பிறகு அதன் தோல் இருக்கும் அல்லவா, அந்த தோலில் இந்த கிரீமை தொட்டு வெள்ளை புள்ளிகள் உள்ள மூக்கு, தாடை போன்ற இடங்களில் போட்டு விடுங்கள். ஐந்து நிமிடம் இது உங்கள் முகத்தில் அப்படியே இருக்கட்டும். அதன் பிறகு மீண்டும் கொஞ்சமாக இந்த பேஸ்ட்டை தொட்டு ஏற்கனவே அப்ளை செய்த இடத்தில் இதை வைத்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இதை போட்ட பிறகு குறைந்தது ஒரு ஐந்து நிமிடமாவது மசாஜ் செய்ய வேண்டும். அப்போது தான் உள்ளே இருக்கும் அந்த வெண் புள்ளிகள் வெளியில் வரும்.
நீங்கள் லேசாக தேய்த்து விட்டால் வராது, அதற்காக அழுத்தி சுரண்டி எல்லாம் எடுக்கக் கூடாது. நீங்கள் மைல்டாக மசாஜ் மூலம் தான் எடுக்க வேண்டும் இதை கவனமாக செய்யுங்கள்.
இதையும் படிக்கலாமே: கிடுகிடுன்னு முடி வளர்ந்து கெண்டைக்காலை தொடும். தொடர்ந்து 5 முறை இந்த ஹேர் பேக்கை போட்டு பாருங்க.
இதை செய்த பிறகு உங்களுக்கு முன்பிறுந்தற்கும், இப்போது உள்ள உங்கள் முகத்திற்கும் நல்ல மாற்றம் தெரியும். இதை தினமும் செய்ய வேண்டாம். வாரத்திற்கு ஒரு முறை இப்படி செய்து கொள்ளுங்கள். எங்காவது வெளியில் கிளம்ப வேண்டும் என்றால் அந்த நேரங்களில் இது உடனடியாக உங்களுக்கு பலன் தரக் கூடிய நல்ல ரெமடி.