கிடுகிடுன்னு முடி வளர்ந்து கெண்டைக்காலை தொடும். தொடர்ந்து 5 முறை இந்த ஹேர் பேக்கை போட்டு பாருங்க.

hair10
- Advertisement -

முடியை கெண்டைக்கால் தொடும் அளவு வளர்ப்பதற்கு எல்லோருக்கும் தான் ஆசை இருக்கிறது. எல்லோருடைய முடி வளர்ச்சியும் கெண்டைக்காலை தொடுமா என்று கேட்டால், அது நிச்சயம் சந்தேகத்திற்குரிய கேள்விதான். இருப்பினும் நமக்கு இருக்கக்கூடிய மெல்லிசான முடியை சீக்கிரம் அடர்த்தியாக்கி முதுகுக்கு கீழே பின்னல் போட்டு தொங்க விட்டுக் கொள்ளும் அளவிற்கு, முடி வளர்ச்சியை பெற நிச்சயமாக இந்த ஹேர் பேக் உங்களுக்கு பயன்படும். வாரத்தில் ஒரு நாள் இந்த ஹேர் பேக்கை போடுங்க. 3 மாதம் தொடர்ந்து போட்டு பாருங்க. நிச்சயமாக நல்ல ரிசல்ட்டை உங்கள் முடி சொல்லும்.

இந்த ஹேர் பேக்குக்கு தேங்காய், கற்றாழை, முட்டை, கொஞ்சமாக பால் தேவை. காய்ச்சிய பாலை பயன்படுத்திக் கொள்ளலாம். முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அரை மூடி தேங்காயை போட்டு கொஞ்சமாக காய்ச்சிய பால் ஊற்றி அரைத்து தேங்காய் பால் எடுக்க வேண்டும். ரொம்பவும் கட்டியாக 1/4 கப் அளவு தேங்காய் பால் எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த தேங்காய் பால் தனியாக ஒரு கிண்ணத்தில் வடிகட்டி இருக்கட்டும். இப்போது அதே மிக்ஸி ஜாரில் கற்றாழை – 1/4 கப் (இயற்கையான கற்றாழை ஜெல் கிடைத்தால் ரொம்பவும் நல்லது), ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக ஒரு ஓட்டு ஓட்டிக் கொள்ளுங்கள். இதோடு எடுத்து வைத்திருக்கும் தேங்காய் பாலையும் ஊற்றி ஒரு ஓட்டு ஓட்டிக்கோங்க. இப்போது நமக்கு தேவையான சூப்பரான மொழு மொழுன்னு ஒரு ஹேர் பேக் தயார். முட்டையை மஞ்சள் கருவோடு சேர்த்தால் சூப்பரான ரிசல்ட் கிடைக்கும். உங்களுக்கு மஞ்சள் கருவின் வாசம் பிடிக்கவில்லை என்றால் மஞ்சள் கருவை தனியாக நீக்கி விடலாம். அது மட்டும் உங்களுடைய விருப்பம்.

தலைக்கு குளிப்பதற்கு முன்பு, இந்த ஹேர் பேக்கை உங்களுடைய தலையின் மயிர் கால்களில் படும்படி நன்றாக போட வேண்டும். அதாவது ரொம்பவும் அழுத்தம் கொடுத்து போட்டு முடியை கொட்ட வைக்காதீங்க. முடியை பாகம் பாகங்களாக பிரித்து அதன் உள்ளே இந்த ஹேர் பேக்கை தடவி விடுங்கள். ஹர்பாக் ஸ்மூத்தாக இருப்பதால் இதை தடவுவது ரொம்ப ரொம்ப ஈஸி.

- Advertisement -

பிறகு மீதம் இருக்கக்கூடிய ஹேர்பேக்கை, தலை மேல் பகுதி முழுவதும் போட்டுக் கொள்ளுங்கள். பிறகு முடியின் நுனிவரை இந்த ஹேர் பேக்கை போட்டு கொண்டை கட்டிக் கொள்ள வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து மைல்டான ஷாம்பு போட்டு நன்றாக அலசிவிடுங்கள். உங்களுடைய முடி ஊட்டச்சத்து நிறைந்த முடியாக மாறும். ஒவ்வொரு முடியும் வலுவாக இருக்கும்.

டிரையாக இருக்கக்கூடிய முடி கூட சில்க்கியாக மாறிவிடும். இந்த ஹேர் பேக்கை போட்டால் அதிகமாக சிக்கு விழாது. முடி அடர்த்தியாகவும் தெரியும். குறைந்த செலவில் முடியை சீக்கிரமாக வலிமையாக வளர்க்க வேண்டும் என்றால் இந்த ஹேர் பேக் உங்களுடையது. குறிப்பு உங்களுக்கு பிடிச்சிருந்தா மட்டும் முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -