செடிகள் என்றாலே அது அழகு தான் அதிலும் அந்த செடி நிறைய பூக்கள் பூத்து இருந்தால் சொல்லவே தேவையில்லை, அத்தனை அழகுடன் அந்த செடிகளில் பூவின் வாசமும் சேர்ந்து வீசினால் அதை அனுபவிக்கும் இன்பத்திற்கு அளவே இல்லை அத்தனை ரம்யமாக இருக்கும். அந்த வகையில் நல்ல வாசனை மிக்க பூக்களை தரக்கூடிய மல்லி, முல்லை, ஜாதிமல்லி, நித்திய மல்லி இப்படி எண்ணற்ற வகைகள் இருக்கிறது. மாலை வேளையில் இந்த மலர்கள் தன்னை சுற்றி இருக்கும் இடத்திற்கு வாசனையை பரப்பி மனதை கவர்ந்து இழுக்கும். இப்படி நல்ல வாசனை உள்ள செடிகளில் ஒன்றான மல்லி செடியினை இன்னும் அதிகமாக பூக்க வைக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி குறிப்புகள் இது.
நர்சரியில் இருந்து செடி வாங்கி வந்து வளர்த்தாலும் சரி, இல்லை வீட்டில் பதியம் போட்டு கொண்டு வந்து வைத்தாலும் சரி, எந்த ஒரு செடியுமே அதற்கான முறையான பராமரிப்பு இருந்தால் மட்டுமே அந்த செடியின் பலனை நாம் அனுபவிக்க முடியும். ஏதோ வாங்கினோம் வைத்தோம் என்று இருந்தால் கட்டாயமாக அந்த செடி பட்டு போய் விடும். இது தான் பல இடங்களில் நடக்கிறது ஆசைப்பட்டு வாங்கி வைக்கும் அளவிற்கு அதை பராமரிப்பது கிடையாது. இன்னும் சொல்லப் போனால் பலருக்கு செடிகளுக்கு என்ன உரம் கொடுத்து எப்படி வளர்க்க வேண்டும் என்பது கூட தெரிவதில்லை. செடி வளர்க்க ஆசைப்படும் அனைவருமே அதை பராமரிப்பது எப்படி என்பதை பற்றிய ஒரு சில விஷயங்களையாவது தெரிந்து கொண்டால் நல்லது.
அந்த வகையில் இப்போது இந்த மல்லி செடியை நன்றாக பூக்க வைக்க நாம் வீட்டில் பயன்படுத்தும் ஒரே ஒரு பொருளை மட்டும் வைத்து எப்படி ஒரு நல்ல உரத்தை தயார் செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இந்த மல்லி செடியை பூக்க வைக்க நமக்கு தேவையான உரங்கள் பெரிதாக ஒன்றும் கிடையாது வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் பட்டை தான். அதை நன்றாக தூள் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அத்துடன் கொஞ்சம் வேப்ப இலை ஒரு ஒரு ஸ்பூன் மஞ்சள் இது மட்டும் தான் இதற்குத் தேவை.
ஒரு அகலமான பாத்திரம் எடுத்துக் கொள்ளுங்கள்.அதில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க வையுங்கள். கொதிக்கும் போது இந்த பட்டை பொடியையும், வேப்பிலையும் சேர்த்து நன்றாக கொதிக்க வையுங்கள் இதிலுள்ள சாறு அனைத்தும் அந்த தண்ணீரில் இறங்க வேண்டும். தண்ணீரை கொஞ்சம் தாராளமாகவே வைத்துக் கொள்ளுங்கள். நன்றாக கொதித்து முடித்த பிறகு மஞ்சள் தூளை போட்டு பிறகு அடுப்பை உடனே அணைத்து விடுங்கள். மஞ்சள் தூள் போட்ட பிறகு தண்ணீர் கொதிக்கக் கூடாது. இதை அப்படியே ஆற விடுங்கள் ஆறவிட்ட பிறகு இந்த தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளுங்கள். தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்த வேப்பிலையும் நன்றாக மிக்ஸியில் சேர்த்து அரைத்து இந்த தண்ணீரிலே கலந்து வைத்துக் கொள்ளலாம்.
இந்த கரைசலை ஒரு நாள் முழுவதும் அப்படியே வைத்து விடுங்கள். அடுத்த நாள் ஒரு பங்கு கரைசலுக்கு, பத்து பங்கு அளவு தண்ணீர் சேர்த்து நீங்கள் செடிகளுக்கு ஊற்றி விடுங்கள் போதும். இந்த வேப்பிலை மஞ்சள் இவை எல்லாம் கலந்திருப்பதால் செடிகளில் எறும்பு இந்த பூச்சிகள் போன்றவை எதுவும் வராது. பட்டைச் செடிகள் வளர நல்ல ஊட்டச்சத்து மிக்க ஒரு உரம்.
இதையும் படிக்கலாமே: புதுசா ரோஜா செடி வாங்க போறீங்களா? டக்குனு வேர் பிடிச்சு நிறைய பூக்கள் பூக்க இதை ஒரு பீஸ் இப்படி போடுங்க போதும்!
இந்த எளிய சாதாரண முறையை பயன்படுத்தினாலே போதும் உங்கள் மல்லி செடிகள் நீங்கள் கட்வே முடியாத அளவிற்கு பூக்கள் வைக்கும். நீங்களும் உங்கள் வீட்டில் உள்ள மல்லி செடிக்கு இந்த உரத்தை கொடுத்துப் பாருங்கள்.