புதுசா ரோஜா செடி வாங்க போறீங்களா? டக்குனு வேர் பிடிச்சு நிறைய பூக்கள் பூக்க இதை ஒரு பீஸ் இப்படி போடுங்க போதும்!

rose-plant-katrazhai
- Advertisement -

செடி, கொடி வளர்ப்பது என்பது எல்லோருக்குமே ரொம்பவே பிடித்தமான ஒரு ஹாபியாக இருக்கிறது. முதல் முதலில் செடி வளர்ப்பவர்கள் பெரும்பாலும் ரோஜா, செம்பருத்தி போன்ற செடிகளை வாங்கி வளர்ப்பது வழக்கம். அந்த வகையில் புதிதாக ஒரு ரோஜா செடியை வாங்கும் பொழுதும் அல்லது ஒரு தொட்டியில் இருந்து இன்னொரு தொட்டிக்கு நீங்கள் பூச்செடிகளை மாற்றும் பொழுதும் டக்குனு வேர் பிடிக்க என்ன செய்யணும் தெரியுமா? அதைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

தோட்ட கலையில் பெரும்பாலும் விரும்பப்படுவது அழகிய வர்ண பூச்செடிகளை வளர்ப்பது தான். அதிலும் ரோஜா, மல்லிகை, முல்லை போன்ற வாசனை மிக்க மலர்களை வளர்க்க எல்லோருக்கும் ஒரு விதமான ஆர்வம் இருக்கும். பூச்செடிகள் பொறுத்தவரை ஒரு தொட்டியில் இருந்து இன்னொரு தொட்டிக்கு மாற்றும் பொழுது கவனமுடன் இருக்க வேண்டும். வேர் பிடிப்பதற்கு நிறைய நேரம் எடுக்கும் என்பதால் இந்த ஒரு விஷயத்தை நாம் செய்து வைப்பது உடனடி பலன்களை கொடுக்கும்.

- Advertisement -

புதிதாக ரோஜா செடி வாங்குபவர்கள் தோட்ட மண்ணை பயன்படுத்த வேண்டும். ஒரு பிளாஸ்டிக் வாலி அல்லது நீங்கள் மண் தொட்டியில் வளர்த்தால் அடியில் முதலில் சிறு சிறு கற்களை போட்டுக் கொள்ளுங்கள். அதன் மீது தோட்ட மண்ணை பாதி அளவிற்கு போடுங்கள். பின்னர் நீங்கள் வாங்கி வந்த மண்ணுடன் கூடிய சிறிய அளவிலான ரோஜா செடியை வைத்து மண்ணை மூடப்பட்டிருக்கும் கவரை கிழித்து எடுத்து விடுங்கள்.

பின்னர் இப்பொழுது வேருக்கு பக்கத்தில் நீங்கள் வாங்கி வந்த மண்ணை ஒட்டி கற்றாழை ஜெல்லை வைக்க வேண்டும். முதலில் கற்றாழை மடலை எடுத்துக் கொள்ளுங்கள். அதை மேலே இருக்கும் தோலை நீக்கிவிட்டு நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். ஜெல்லை நன்கு நான்கைந்து முறை கழுவி சுத்தம் செய்த பின்பு முழுதாகவோ அல்லது சிறு சிறு பகுதிகளாகவோ வெட்டி ரோஜா செடியை வாங்கி வந்த மண்ணை சுற்றிலும் வைக்க வேண்டும். பின்னர் அதன் மீது மீண்டும் தோட்ட மண்ணை போட்டுக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

கற்றாழை ஜெல்லை நாம் இப்படி வைக்கும் பொழுது வேரானது நன்கு இறுக மண்ணை பிடித்துக் கொள்ளும். இதனால் மிக விரைவாக உங்களுடைய ரோஜா செடி வளர ஆரம்பிக்கும். பின்பு ரோஜா செடிக்கு தேவையான மற்ற உரங்களை கொடுக்கலாம். புளித்த மோர் அல்லது வாழைப்பழ தோல், பழ கழிவுகள், தேயிலை, முட்டை ஓடு போன்றவற்றையும் போடலாம் அல்லது தானியங்களை கூட நீங்கள் பவுடராக்கி சேர்க்கலாம்.

இதையும் படிக்கலாமே:
உங்கள் வீட்டு செடிகள் நன்றாக பூத்து குலுங்க. நீங்கள் வேண்டாம் என கீழே தூக்கி போடும் இந்த பொருளை புதைத்து வைத்தாலே போதும்.

நவதானியங்களில் எந்த தானியங்கள் உங்களிடம் இருந்தாலும் அதை பவுடராக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பவுடரை தோட்ட மண்ணை சுற்றிலும் தூவி மீண்டும் மேற்பகுதியில் மண்ணை கொட்டு மூடி விடுங்கள். இது போல நீங்கள் செய்து வைக்கும் பொழுது விரைவாகவே வேர் பிடித்து மேலும் சத்துள்ள மற்றும் ஆரோக்கியமான செடியாக உங்களுடைய புது ரோஜா செடி துளிர்க்க ஆரம்பிக்கும். ஒவ்வொரு துளிரிலும் நிறைய மொட்டுக்களும் பூக்கும். பூக்கும் பூக்கள் பெரிது பெரிதாக அடர்த்தியான நிறத்திலும் பூக்கும். ஏனென்றால் ஒவ்வொரு தானியத்திலும் ஒவ்வொரு விதமான சத்துக்கள் இருக்கும். அனைத்து சத்துக்களும் அதற்கு கிடைத்து நல்ல ஒரு ஊட்டச்சத்துள்ள செடியாக வளர்ந்து உங்களுக்கு விருப்பமான பூக்களை அள்ளிக் கொடுக்கும்.

- Advertisement -