உங்கள் பெயரின் முதல் எழுத்து A என்றால் உங்களை பற்றி இதோ

Letter A name
- Advertisement -

பெயரின் முதல் எழுத்தை வைத்து நம்முடைய தனி திறமைகள், குணங்கள், நம் எண்ண அலைகள், இயல்புகள் போன்றவற்றை கணித்து எண்களின் அடிப்படையில் பகுத்து கூறுவதை பற்றிய ஆய்வு நியூமராலஜி எனப்படுகிறது. இதன் அடிப்படையில் உங்களுடைய வாழ்வில் நீங்கள் எப்படிப்பட்டவராக இருப்பீர்கள்? என்பதை உங்களுடைய பெயரின் முதல் எழுத்தை கொண்டு தொடர்ந்து இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

உங்கள் பெயரின் முதல் எழுத்து A வாக இருந்தால்? உங்கள் குணநலன் பற்றி என்ன வெளிப்படுத்துகிறது என்பதை அறிய கீழே பாருங்கள்!

- Advertisement -

இவர்கள் நேர்மையானவர்களாக இருப்பார்கள். வாழ்வில் ஏதேனும் ஒரு லட்சியம் கொண்டிருப்பார்கள். எங்கும் எப்பொழுதும் தங்களை முன்னிலைப்படுத்தி கொள்ள முயல்வார்கள். இவர்கள் தங்கள் குறிக்கோளில் கவனம் செலுத்துவார்கள். இந்த நபர்கள் இலக்கை நோக்கி இயக்கப்படுகிறார்கள், மேலும் அவர்களின் இலக்குகளை அடைய எதுவும் செய்ய தயங்க மாட்டார்கள்.

ஒரு குழுவுடன் இருக்கும்போது இவர்கள் தங்களின் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவார்கள் அதனால் இவர்கள் இயற்கையிலேயே தலைவராக பொறுப்பேற்கும் தகுதி பெற்றவர்களாக இருப்பார்கள். எனவே பலர் உங்களை பின் தொடர விரும்புவார்கள்.

- Advertisement -

கல்வியில் தலைசிறந்தவராக இருப்பார்கள். பல திறமைகள் இவர்களிடம் நிச்சயம் ஒளிந்து கொண்டிருக்கும். சமூக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். மக்களிடம் ஏதேனும் ஒரு வகையில் நெருங்கிய தொடர்பு இவர்களிடம் இருக்கும்.

வாழ்க்கையில் ஒரு நோக்கம் கொண்ட இவர்கள் நடைமுறைக்கு தகுந்தார்போல் தங்களை மாற்றிக் கொள்வார்கள். உணர்ச்சிவசப்பட கூடியவர்களாக இவர்கள் இருக்கமாட்டார்கள். தங்களின் வார்த்தைகளில் ஒரு தெளிவு இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் மற்றவர்களிடம் தங்கள் வார்த்தைகளின் உணர்ச்சி ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள்.

- Advertisement -

இந்த எழுத்தை கொண்டவர்கள் ரொமான்ஸில் பின்தங்கியவர்களாகவே இருப்பார்கள். அதிகமாக ஊர் சுற்றுபவர்களாக இருப்பார்கள். இயற்கை மீது ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். அருவருக்கத்தக்க செய்கைகளால் விரைவில் எரிச்சல் அடைவார்கள். இந்த நபர்கள் அதிக புத்திசாலித்தனம் கொண்டவர்களிடம் வெகுவிரைவில் ஈர்க்கப்படுவார்கள். இவர்கள் யாருடைய தயவையும் எதிர்பார்க்க மாட்டார்கள். தன் சொந்தக் காலில் நிற்பதை குறிக்கோளாக கொண்டிருப்பார்கள்.

இதையும் படிக்கலாமே
இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Name astrology in Tamil. Jathagam in Tamil. Name namerology in Tamil. Name astrology palangal in Tamil.

- Advertisement -