ஆடி மாதம் முடிவதற்குள் உங்கள் குலதெய்வ கோவிலுக்கு இந்த 1 பொருளை தானமாக வாங்கி கொடுத்து விட்டால் போதும். வீட்டில் எல்லாம் இன்பமாக இனிமையாக நடக்கும்.

amman5
- Advertisement -

ஆடி மாதம் பிறந்திருக்கின்றது. இந்த ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் எல்லாம் விசேஷம் ஆரவாரத்துடன் நடைபெறும். அதிலும் ஆடி வெள்ளி, ஆடி செவ்வாயில் அம்மன் கோவில்களுக்கு சென்றால் அந்த அம்மன் அலங்காரத்தை பார்க்க நம்முடைய இரண்டு கண்கள் போதாது. அம்மன் மனம் குளிர்ந்து மக்களுக்கு ஆசிகளை வழங்கக்கூடிய காலம் இந்த ஆடி மாதம் என்று கூட சொல்லலாம். இந்த ஆடி மாதத்தில் குலதெய்வ கோவிலுக்கு நாம் செய்ய வேண்டிய ஒரு தானத்தை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த சிறப்புமிக்க தானத்தை குலதெய்வ கோவிலுக்கு செய்வதன் மூலம் உங்களுடைய குடும்பத்தில் சந்தோஷம் பல மடங்காக பெருகும் என்பது நம்பிக்கை. ஆடி மாதம் முடிவதற்குள் குலதெய்வ கோவிலுக்கு செய்ய வேண்டிய அந்த ஒரு தானம் என்னவாக இருக்கும் தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆடி மாதம் முடிவதற்குள் குலதெய்வ கோவிலுக்கு செய்ய வேண்டிய தானம்:
குடும்பத்தில் எல்லாம் இனிமையாக நடக்க வேண்டும். எல்லாம் சந்தோஷமாக நடக்க வேண்டும். வீட்டில் சுபகாரிய தடை விலக வேண்டும் வீட்டில் இருப்பவர்களுக்கு ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருகிறது. மருத்துவ செலவு. மருந்து மாத்திரை சாப்பிடாத நாளே இல்லை. தீராத நோயால் அவதிப்பட்டு வருபவர்கள் கூட இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயம் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். இப்படி பல வகைப்பட்ட பிரச்சனைகளுக்கும் தீர்வு தரக்கூடிய ஒரு தானம் தான் இது.

- Advertisement -

குலதெய்வ கோவிலுக்கு இந்த ஆடி மாதம் முடிவதற்குள் உங்கள் கைகளால் வெல்லம் வாங்கி தானமாக கொடுக்க வேண்டும். அளவு என்பது உங்களுடைய வருமானத்தை பொறுத்தது. உங்களுடைய வசதியை பொறுத்தது. ஒரு கிலோ வெல்லம் வாங்கி கொடுத்தாலும் சரிதான். 5 கிலோ வெல்லம் வாங்கி கொடுத்தாலும் சரிதான். அந்த கோவில் குருக்களிடம் இந்த வெல்லத்தை நீங்கள் தானமாக கொடுக்கலாம். பனவெல்லம், நாட்டு சர்க்கரை, அல்லது கட்டிவெல்லம் இப்படி எந்த வகையில் வேண்டும் என்றாலும் நீங்கள் வெல்லத்தை தானம் செய்யலாம். இந்த ஆடி மாத விசேஷத்திற்கு சர்க்கரைப் பொங்கல் செய்வதற்கு பயன்படுத்திக் கொள்வார்கள் அல்லது வேறு ஏதாவது உபயோகத்திற்காகவும் பயன்படுத்திக்கொள்ளலாம் அது கோவில் விசேஷங்களுக்கு. அவங்களுடைய விருப்பம்.

குலதெய்வம் அம்மனாக இருந்தால் அந்த குல தெய்வத்திற்கு இந்த வெல்லத்தை வாங்கி தானம் கொடுக்கலாம். எங்கள் வீட்டு குலதெய்வம் முருகர் பெருமாள் அல்லது முனீஸ்வரர் இந்த மாதிரி இருந்தால் என்ன செய்வது. இந்த ஆடி மாதத்தில் உங்கள் குலதெய்வத்தின் பெயரைச் சொல்லி, அம்மன் கோவில்களுக்கு இந்த வெல்வத்தை நீங்கள் தானமாக கொடுக்கலாம் தவறு எதுவும் கிடையாது.

- Advertisement -

உங்கள் குடும்ப உறுப்பினர்களின் கையால் இந்த பொருளை கோவிலுக்கு தானம் செய்யும் போது உங்கள் குடும்ப கஷ்டம் தீரும் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த ஆடி மாதத்தில் குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்தோடு சென்று வழிபாடு செய்யுங்கள். அதேபோல உங்கள் வீட்டில் இருக்கும் கஷ்டம் கரைந்து போக வேண்டும் என்று ஒரு கட்டி வெல்லத்தை எடுத்து குலதெய்வ கோவில் இருக்கும் குளத்தில் கரைக்க வேண்டும். கஷ்டங்கள் எல்லாம் அப்படியே கரைந்து போகும் என்று சொல்லுவார்கள்.

மண்டை வெல்லம், கட்டி வெல்லம் இருக்கிறதல்லவா அதை வாங்கிக் கொண்டு போய் குளத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையாக கரைத்து விடுங்கள். குழந்தைகள் கையில் கொடுக்காதீங்க. தண்ணீர் பக்கத்தில் செல்லும்போது பெரியவர்கள் ஜாக்கிரதையாக சென்று இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: பணக்கஷ்டம் நீங்கி பணவரவு ஏராளமாக வர இருக்க அரச மரத்தடியில் நின்று இந்த ஒரு வார்த்தையை சொன்னால் போதும். ஆண்டியையும் அரசனாக்கும் அற்புத அரச மர பரிகாரம்.

அந்த வெல்லம் தண்ணீரில் எப்படி கரைந்து போகிறதோ அதேபோல உங்கள் வீட்டில் இருக்கும் கஷ்டமும் கரைந்து போகும் என்பது தான் இந்த பரிகாரத்தில் இருக்கும் நம்பிக்கை. அதேபோல வெல்லத்தை கோவிலுக்கு தானம் கொடுக்கும் போது அந்த இனிப்பான வெல்லம் உங்களுடைய கசப்பான கஷ்டத்தை சரி செய்து விடும் என்பதும் இதனுடைய தாத்பரியமாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. எளிமையான பரிகாரம்தான். 1 கிலோ வெல்லம் ஒன்றும் அவ்வளவு பெரிய தொகை அல்ல. எல்லோராலும் காசு கொடுத்து வாங்கி தரக்கூடிய பொருள்தான். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்து அம்மனின் அருள் ஆசையை முழுமையாக பெற வேண்டும் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -