அமாவாசையன்று கட்டாயமாக இந்த செயல்களை நாம் செய்யவே கூடாது. பல வருடங்களாக நம்மை தொடர்ந்து வரும் பித்ரு சாபம் நீங்க, இந்த ‘ஆடி அமாவாசை’ அன்று கட்டாயம் நாம் செய்ய வேண்டியது என்ன?

vaikasi-amavasai
- Advertisement -

நம்முடைய இந்து சாஸ்திரப்படி சில விசேஷ தினங்களில் சில காரியங்களை செய்யக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வரிசையில் மாதம்தோறும் வரக்கூடிய அமாவாசை திதியில் குறிப்பாக நம்முடைய வீட்டில் எந்தெந்த விஷயங்களை செய்யக்கூடாது, எந்தெந்த விஷயங்களை கட்டாயம் செய்ய வேண்டும், அதிலும் குறிப்பாக இந்த ஆடி அமாவாசையில் என்ன சிறப்பு, என்ன செய்தால் பித்ரு சாபத்திலிருந்து விமோசனம் கிடைக்கும் என்பதைப் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளவே இந்த பதிவு.

amavasai1

நாளை வரக்கூடிய அமாவாசை, ஆடி அமாவாசை என்பது ஒரு சிறப்பு என்றால், அதிலும் மற்றொரு சிறப்பு நாளை வரக்கூடிய ஆடி அமாவாசை குறிப்பாக திருவாதிரை, புனர்பூசம், பூசம் ஆகிய மூன்று நட்சத்திரங்களில் சேர்ந்து வருகின்றது. நாளை கொடுக்கப்படும் தர்ப்பணம், 12 ஆண்டுகள் தர்ப்பணம் செய்த பலனை கொடுக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இந்த அமாவாசைக்கு முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய தர்ப்பணத்தை யாரும் தவற விடவே கூடாது.

- Advertisement -

பொதுவாகவே அமாவாசை தினத்தில் வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது என்று சொல்லுவார்கள். அதிலும் இந்த ஆடி அமாவாசை தினத்தில் வீட்டு வாசலில் கோலம் போடகூடாது. வாசலை கூட்டி சுத்தம் செய்து தண்ணீரை மட்டும் தெளித்து விட்டால் போதும்.

amavasai

அடுத்தபடியாக அம்மாவாசை தினத்தன்று எந்த ஒரு விஷயத்திற்காகவும் கடன் வாங்கவே கூடாது. அவசர தேவையாக இருந்தாலும் அடுத்தவர்களிடம் கடன் வாங்கிய பணத்தை செலவு செய்யாதீர்கள்.

- Advertisement -

வீட்டில் அமாவாசை சமையலை சமைக்கும் போது, வீட்டில் இந்த பொருட்கள் இல்லை, அந்த பொருட்கள் இல்லை என்று சொல்லி பக்கத்து வீட்டுக்காரர்களிடம் கடன் வாங்கி அமாவாசை சமையலை செய்யக்கூடாது. யாரும் தங்கள் வீட்டில் இருக்கும் சமையல் பொருட்களை கடனாகவும் கொடுக்கக்கூடாது.

kolam2

வீட்டில் அம்மாவாசை அன்று பூஜை செய்பவர்களாக இருந்தாலும் சரி, பூஜை செய்யும் பழக்கம் அதாவது, இலை போடும் வழக்கம் இல்லை என்றாலும் சரி, கட்டாயமாக காகத்திற்கு எச்சில் படாத சாதத்தை வைத்து விட்டு தான் வீட்டில் இருப்பவர்கள் உணவு சாப்பிட வேண்டும்.

- Advertisement -

crow-food

அமாவாசை தினத்தன்று வீட்டில் இருக்கும் குழந்தைகள் பெரியவர்கள் யாருமே முடிதிருத்தம் செய்து கொள்ளக்கூடாது. ஷேவிங் செய்யக் கூடாது. நகம் வெட்டக் கூடாது என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

kadan

அமாவாசை தினத்தில் யாரும் அசைவம் சாப்பிட மாட்டார்கள். இருப்பினும் சில பேர் வீட்டில் அசைவம் சமைக்கவில்லை என்றாலும் வெளியில் சென்று அசைவம் சாப்பிடும் பழக்கத்தை வைத்திருப்பார்கள். குறிப்பாக ஆண்கள் தான் இந்த தவறை செய்வார்கள். முடிந்தவரை வெளி இடங்களுக்கு சென்றும் கூட அமாவாசை தினத்தில் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்வது ரொம்பவும் நல்லது.

samayal

அமாவாசை தினத்தன்று கட்டாயமாக முன்னோர்களுக்கு கொடுக்க வேண்டிய திதி தர்ப்பணத்தை தவறாமல் கொடுத்து விடவேண்டும். நாளை வரக்கூடிய அமாவாசை தினத்தன்று உங்களுடைய முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்வது கோடான கோடி புண்ணியத்தை நம்முடைய குடும்பத்திற்கு சேர்க்கும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது. நாளை அமாவாசை வழிபாட்டை யாரும் தவறவிடாதீர்கள். அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு செய்யும் கடமைகளை நாம் மறந்தால், முன்னோர்கள் நம்மை மறந்துவிடுவார்கள்.

poojai

அமாவாசை தினத்தன்று வீட்டில் வழிபாடு செய்வதற்கு முன்பாகவும் வீட்டில் வழிபாடு செய்ததற்கு பின்பாகவும், தீட்டு வீடுகளுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். குழந்தை பிறந்த தீட்டு, பெண் குழந்தைகள் வயதுக்கு வந்த தீட்டு, மாதவிடாய் தீட்டு, இருப்பவர்கள் வீட்டுக்கு பூஜை செய்வதற்கு முன்பும் செல்லக்கூடாது. பூஜையை முடித்த பின்பும் செல்லக் கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

dhanam

அடுத்தபடியாக அமாவாசை தினத்தன்று நாம் செய்ய வேண்டிய ஒரு விஷயம் அன்னதானம். உங்களால் முடிந்த அளவு வயதானவர்களுக்கு அன்னதானம் வஸ்திர தானம் செய்யலாம். மாதந்தோறும் அமாவாசை தினத்தில் இந்த அன்னதானம் செய்வது சிறப்பாக இருந்தாலும், இந்த ஆடி அமாவாசை அன்று ஒரு ஏழை முதியவருக்கு புதியதாக வஸ்திரத்தையும், சாப்பாட்டையும் வாங்கி தானம் கொடுத்தால், பல தலைமுறைகளாக நம்மை தொடர்ந்து வரும் பித்ரு சாபம், பித்ரு கோபம், பித்ரு தோஷம் எல்லாவற்றிற்கும் ஒரு விமோசனம் கிடைக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -