இன்று ஆடி அமாவாசை விரதம் இருந்தால் இத்தனை பலன்கள் உண்டு தெரியுமா?

Aadi Amavasai

சந்திரனுக்குரிய கடக ராசியில் சூரியன் பெயர்ச்சியாகும் ஆடி மாதத்தில் வரும் ஆடி அமாவாசை தினம் ஒரு சிறந்த தினமாகும். ஜோதிட ரீதியாக பார்க்கையில் சூரியன் ஒரு மனிதனின் தந்தைக்கு காரகனாகிறார். சந்திரன் தாய்க்கு காரகனாகிறார். இந்த இருகிரகங்களும் கூடி வருகிற இம்மாதத்தில் மறைந்த நம் பித்ருக்கள் அல்லது முன்னோர்களை வழிபடுவதற்கான தினம் ஆடி அமாவாசை ஆகும். ஆடி அமாவாசையன்று விரதம் மேற்கொள்ளும் முறைகளை இங்கு தெரிந்து கொள்வோம்.

Amavasya-Poornima

இந்த ஆடி அமாவாசை தினத்தன்று அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரமான 4 மணியளவில் துயிலெழுந்து குடும்பத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தலைக்கு ஊற்றி குளித்து விடவேண்டும். பின்பு உணவு மற்றும் வேறு பானங்கள் ஏதும் அருந்தாமல் வீட்டின் பெண்கள் மறைந்த முன்னோர்களுக்கு விருப்பமான உணவு பண்டங்களை தயாரிக்க வேண்டும். வீட்டின் பூஜையறையை சுத்தம் செய்து அரிசி மாவு கோலமிடவேண்டும். பின்பு ஒரு மர பீடத்தை வைத்து அதன் மீது ஒரு வெள்ளை துணியை விரித்து, நமது முன்னோர்களில் ஆண் மற்றும் பெண்ணை குறிக்கும் வகையில் ஒரு வேட்டியையும் ஒரு புடவையையும் வைக்க வேண்டும்.

அந்த பீடத்திற்கு இரு புறமும் குத்துவிளக்கில் தீபமேற்றி, தூபங்கள் கொளுத்தி, பழங்கள் மற்றும் தயாரிக்க பட்ட உணவுகளை படையலாக வைத்து, முதலில் உங்கள் குலதெய்வத்தை வணங்கி பீடத்தில் வைக்கப்பட்ட துணிகளை நம் முன்னோர்களாக பாவித்து, கற்பூர ஆரத்தி காட்டி வணங்க வேண்டும். குடும்பத்தில் உள்ள அனைவரும் தங்களின் முன்னோர்களை இம்முறையில் பூஜிக்க வேண்டும். இந்த பூஜையின் போது ஆடி அமாவாசை விரதம் இருப்பவர்கள் காலை உணவை உட்கொள்ளாமல் விரதம் இருக்க வேண்டும்.

Amavasai Tharpanam

பூஜையை முடித்த பின்பு படையலில் சிறிதை எடுத்து நமது முன்னோர்களின் அம்சமாக கருதப்படும் காகங்களுக்கு உண்ண வைக்க வேண்டும். பின்பு நீங்கள் வணங்கும் இறைவனை குறித்த மந்திரங்கள், பாடல்களை பாடி. தியான நிலையில் இருக்க வேண்டும். மதியம் ஆன உடன் முன்னோர்களின் விருப்பமாக சமைக்கப்பட்ட உணவுகளை உண்டு உங்களின் விரதத்தை முடிக்க வேண்டும். இன்றைய தினத்தில் உணவு, ஆடை மற்றும் பிற எந்த வகையான தான தர்ம காரியங்களை செய்வது இறந்த முன்னோர்களது ஆசிகள் என்றென்றும் அக்குடும்பத்தின் சந்ததியினருக்கு பெற்று தரும். பரம்பரையில் ஏற்பட்டிருக்கும் தேவ மற்றும் பித்ரு சாபங்களை போக்கும். துர்மரணம் அடைந்து நற்கதி அடையாமல் இருக்கும் முன்னோர்களின் ஆன்மா சாந்தமடையும்.குடும்பம் மற்றும் தொழிலில் உள்ள அனைத்து விதமான தடைகளும் நீங்கும். துயரங்கள் அனைத்தும் விலகும்.

இதையும் படிக்கலாமே:
நெற்றியில் இடும் குங்குமம், திருநீறு போன்றவற்றின் நன்மைகள்

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள் மற்றும் மந்திரங்களை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Aadi Amavasai Viratham procedure in Tamil and Aadi Amavasai Viratham benefits in Tamil. Aadi Amavasai is one of the auspicious days as per Hindu culture.