நெற்றியில் இடும் குங்குமம், திருநீறு போன்றவற்றின் நன்மைகள்

Kungumam
- Advertisement -

நமது மதமான சனாதன தர்மமாகிய இந்து மதத்தை ஒரு மதம் என்று கூறுவதை விட ஒரு வாழ்வியல் நெறி என்றழைப்பது சால பொருத்தமாக இருக்கும். பிற மதங்கள் மற்றும் கலாச்சாரங்களில் விஞ்ஞானம் மற்றும் அறிவியல் நசுக்கப்பட்ட போது அவை இரண்டையும் ஆண்டவனை அறிந்து கொள்வதற்கு பயன்படுத்தியது இந்து மதமேயாகும். நம் மதம் மற்றும் கலாச்சாரத்தில் பல வகையான செயல்களும் ஒரு அறிவியல் அடிப்படையிலேயே பின்பற்றப்படுகின்றன. அந்த வகையில் கோவிலில் வழங்கப்படும் பிரசாதமான குங்குமத்தை பொட்டிட்டுக்கொள்ளும் முறைகளையும் அதற்கான காரணங்களையும் இங்கு தெரிந்து கொள்வோம்.

kungumam

நமது நாட்டின் மிகப்பழமையான பாரம்பரிய தெய்வீக கலை யோகக்கலையாகும். இக்கலையின் தத்துவப்படி நமது நெற்றியில் இரு புருவங்களுக்கு மத்தியில் இருக்கும் திலத பகுதி மனித உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களில் “ஆக்னேய சக்கரம்” இருக்கும் பகுதியாகும். இந்த ஆக்னேய சக்கரம் ஒரு மனிதனின் ஆன்மாவிற்கான நுழைவாயிலாகும். இப்பகுதி ஒரு மனிதனின் சிந்தனை திறன் மற்றும் ஞாபகத்திறனோடும் தொடர்புடையதாகும்.

- Advertisement -

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் நெற்றியில் திலகம் இட்டுக்கொள்வது நமது இந்து மதத்தில் பன்நெடுங்காலமாகவே இருந்து வரும் ஒரு பாரம்பரிய பழக்கமாகும்.இந்த நெற்றி பொட்டில் திலகமிடுவதற்கு ஒரு விஞ்ஞானரீதியான காரணமும் இருக்கிறது. அதாவது திலத பகுதியில் இருக்கும் “ஆக்னேயம்” எனும் சக்கரம் ஒரு மனிதனின் மனதை கட்டுப்படுத்தும் சக்கிரமாகும்.

பிறரை நாம் நினைக்கும் காரியங்களை செய்ய வைக்கும் மனோவசியம் எனப்படும் சித்து கலையில் தேர்ச்சி பெற்ற ஒருவரால், தன் யோக சக்தியை தன் பார்வையின் மூலம் பிற மனிதர்களின் ஆக்னேய சக்கிரத்தில் செலுத்தி, அவரை தனது விருப்பத்திற்கேற்றவாறு இயக்க முடியும். அதிலும் பெண்களுக்கு இயற்கையாகவே இந்த சக்கர பகுதி சற்று வலுவற்ற நிலையிலேயே இருக்கும் காரணத்தினால் தான் பெரும்பாலும் பெண்கள் இத்தகைய மனோவசியத்திற்கு சுலபமாக இறையாகின்றனர். இப்படிப்பட்ட தீய கலைகளின் பிரயோகங்களிலிருந்து அவர்களை காப்பதற்கே ஆண்களை விட பெண்களுக்கு நெற்றியில் குங்குமத்தால் திலகமிட்டுக்கொள்ளும் நடைமுறை வற்புறுத்தி கூறப்பட்டது.

- Advertisement -

thiruneeru

நமது கோவில்களில் இறைவனின் பிரசாதமாக குங்குமம், மஞ்சள், சாந்து, சந்தனம் போன்றவை தரப்படுகின்றன. இந்த பிரசாதங்களை எல்லோருமே வலது கலையில் வாங்கிக்கொண்டு பின்பு இடது கையில் கொட்டி, அதிலிருந்து தங்களின் கட்டை விரல் மற்றும் ஆட்காட்டி விரல்களால் இப்பிரசாதங்களை எடுத்து தங்கள் நெற்றியில் திலகம் இட்டுக்கொள்கின்றனர். இது சரியான முறையல்ல.

குங்குமம் மற்றும் இதர திலக பிரசாத பொருட்களை அர்ச்சகர்களிடமிருந்து பெறும்போது வலது கையில் வாங்கிக்கொள்ள வேண்டும். பின்னர் அந்த உள்ளங்கையில் இருக்கும் குங்குமத்தை ஆண்களாக இருந்தால் தங்களின் வலது கை நடுவிரலை உட்புறமாக மடக்கி, குங்குமத்தை தொட்டு தங்களின் நெற்றியில் இட்டுக்கொள்ள வேண்டும். பெண்கள் தங்களின் வலது கை மோதிர விரலை மடக்கி குங்குமத்தை தொட்டு, தங்கள் நெற்றியில் இட்டுக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

vibudhi

ஒருவரின் நடுவிரல் நவகிரகங்களில் “சனியையும்” பஞ்சபூதத்தில் “ஆகாயத்தையும்” குறிக்கும். ஆண்கள் ஆகாய தன்மை கொண்டவர்கள் என்பதால் நடுவிரலால் பொட்டிட்டு கொள்ளும் போது அவர்களின் ஆன்ம சக்தி தூண்டப்படுகிறது. அதுபோல ஒருவருடைய கைகளிலுள்ள மோதிர விரல் நவகிரகங்களில் “சூரியனையும்” பஞ்சபூதங்களில் “பூமியையும்” குறிக்கிறது. பெண்கள் பூமியின் தன்மை கொண்டவர்களாதலால் மோதிர விரலால் பொட்டு வைத்துக்கொள்ளும் போது அவர்களின் ஆன்ம சக்தி தூண்ட படுகிறது. எனவே நமது நெற்றியில் பொட்டிட்டு கொள்ளும் போது இத்தகைய யோக விஞ்ஞான செயல்முறையை கடைபிடிப்பதால் நமக்கு நன்மைகள் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:
தேய்பிறை அஷ்டமி விரத வழிபாடு பலன்கள்

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள், மந்திரங்கள், ஜோதிட குறிப்புகள், ஆன்மீக கதைகள் பற்றி அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -