ஆடிச் செவ்வாயில் உங்கள் கையாலேயே இந்த மாலையை கட்டி அம்பாளுக்கு போட்டு, வேண்டுதல் வைத்தால் நினைத்தது உடனே நடக்கும்.

amman
- Advertisement -

செவ்வாய்க்கிழமை என்றாலே அம்பாளுக்கு உகந்த நாள் தான். அதிலும் ஆடி மாதம் வரக்கூடிய இந்த செவ்வாய் கிழமை அன்று அம்பாளை எப்படி வழிபாடு செய்வது என்பதை பற்றிய சில ஆன்மீக ரீதியான குறிப்புகளை தெரிந்து கொள்வதற்காகவே இந்த பதிவு. இந்த செவ்வாய் கிழமையில் இரண்டு வகையான வழிபாட்டினை நாம் மேற்கொள்ளலாம். ஒன்று அம்மனுக்கு நம் கையாலேயே இந்த மாலையை கட்டி போடுவது. இரண்டாவது அம்மனுக்கு அர்ச்சனை செய்வது. குறிப்பாக செவ்வாய்க்கிழமை என்றால் துர்க்கை அம்மன் வழிபாட்டிற்கு மிகவும் உகந்தது. உங்கள் வீட்டின் அருகில் துர்க்கை அம்மன் சன்னிதானம் இருக்கக்கூடிய கோவிலில் இந்த பரிகாரத்தை செய்யலாம். துர்கை அம்மன் சன்னிதானம் இல்லை என்றால், உங்கள் வீட்டின் அருகில் எந்த அம்பாள் கோவில் இருந்தாலும் இந்த இரண்டு பரிகாரங்களில் உங்களுக்கு எது சௌகரியமாக இருக்கிறதோ அதை செய்யுங்க. அல்லது ஒவ்வொரு வாரம் ஒவ்வொரு பரிகாரத்தை செய்தாலும் சரி.

முதலாவது பரிகாரம். அம்மனுக்கு உகந்தது சிவப்பு நிறம். இந்த சிவப்பு நிறத்தில் பூக்கக்கூடிய செம்பருத்தி பூவை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு விரலி மஞ்சள், வேப்ப இலை நமக்கு தேவை. இந்த மூன்றையும் வைத்து உங்களுடைய கையாலேயே மாலை தொடுக்க வேண்டும். வேப்ப இலை, செம்பருத்திப்பூ, கஸ்தூரி மஞ்சள், இது மூன்றையும் ஒன்றன்பின் ஒன்றாக வைத்து பூ தொடுப்பது போல தொடுத்து  மாலையாக கட்டி துர்க்கை அம்மனுக்கு போடலாம். அல்லது உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதாவது அம்மன் சன்னிதானத்தில் செலுத்தி விடலாம்.

- Advertisement -

இந்த மாலையை அம்பாளுக்கு சாத்திவிட்டு, அம்பாள் கழுத்தில் போடப்பட்ட மாலையிலிருந்து 3 அல்லது 5 விரலி மஞ்சளை மட்டும் குருக்களிடம் கேட்டு வாங்கி நீங்கள் வீட்டிற்கு கொண்டு வர வேண்டும். வீட்டிற்கு கொண்டு வந்த அந்த விரலி மஞ்சளை பொடி செய்து நைசாக அரைத்து, அந்த மஞ்சளை வீட்டில் இருக்கும் திருமணம் ஆகாத பெண்கள் முகத்திற்கு தேய்த்துக் குளித்து வர வேண்டும். தோஷங்களால் ஏதேனும் திருமண தடை இருந்தால் அந்த தடை விளங்க இந்த பரிகாரம் ஒன்று போதும். திருமணம் ஆகாத ஆண்கள் என்றால் இந்த மஞ்சள் தூள் லேசாக பன்னீரில் கரைத்து நெற்றியில் திலமாக இட்டுக் கொள்ளலாம். திருமணம் ஆன பெண்களும் இதை முகத்திற்கு பூசிக்கொள்ளலாம் குடும்பம் சுபிட்சம் பெறும். இது முதல் பரிகாரம். இந்த மஞ்சளை தண்ணீரில் கரைத்து வீட்டின் மூளை முடுக்குகளில் தெளித்தால் வீட்டில் உள்ள துர் சக்திகள் விலகும்.

இரண்டாவது பரிகாரம். செவ்வாய்க்கிழமை என்றாலே ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மன் வழிபாடு சிறப்பு. அதிலும் ஆடி மாதம் வந்திருக்கக் கூடிய இந்த செவ்வாய்க்கிழமை ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்று குங்கும அர்ச்சனை செய்து இரண்டு அகல் தீபங்களில் நெய் ஊற்றி அல்லது நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைத்துவிட்டு மனதார உங்களுடைய கஷ்டங்களை சொல்லி வேண்டிக் கொண்டால் அந்த கஷ்டம் சீக்கிரமே சரியாகிவிடும்.

- Advertisement -

குடும்பத்தில் இருக்கக்கூடிய எந்த பிரச்சனைக்காக வேண்டும் என்றாலும் நீங்கள் இந்த குங்கும அர்ச்சனையை செய்யலாம். அர்ச்சனை செய்த கொஞ்சம் குங்குமத்தை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொடுங்கள். கொஞ்சம் குங்குமத்தை வீட்டிற்கு கொண்டு வந்து நீங்கள் தினமும் விட்டுக் கொள்ளலாம்.  சிலருக்கு பணக்கஷ்டம், சிலருக்கு கடன் சுமை, சிலருக்கு சுப காரியத்தடை, சிலர் குழந்தை வரம் வேண்டி விரதம் இருப்பார்கள். இப்படி எதுவாக இருந்தாலும் சரி நம்பிக்கையோடு துர்க்கை அம்மன் வழிபாட்டை இந்த ஆடி மாத செவ்வாய்க்கிழமை ராகு கால நேரத்தில் வழிபாடு செய்யுங்கள்.

நிச்சயமாக அந்த கஷ்டங்கள் ஒரு சில வாரங்களிலேயே சரியாகும். உங்கள் குடும்பம் சந்தோஷமாக இருக்கும். இந்த மேல் சொன்ன இரண்டு பரிகாரத்தை ஆடி மாதம் முடிவதற்குள் வரக்கூடிய செவ்வாய் கிழமையில் உங்களால் எப்போது முடியுமோ அப்போது செய்யலாம். எல்லோருக்கும் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -