ஆடி செவ்வாய், துர்க்கை அம்மன் வழிபாடு! இன்று, உங்கள் வீட்டில் இந்த தீபத்தை ஏற்றினால் சகல தோஷமும் நீங்கி, சகல சௌபாக்கியமும் பெறலாம்!

durgai

ஆடி மாதம் என்றாலே, அம்மன் வழிபாட்டிற்கு, அமோகமான மாதம் தான். அதிலும் ஆடிச்செவ்வாய் என்றால், துர்க்கை அம்மனுடைய விசேஷங்களை, சொல்லி தான் நமக்கு தெரிய வேண்டும் என்பது அவசியமில்லை. துர்க்கை அம்மனுக்கு அவ்வளவு விசேஷமானது இந்த ஆடிச்செவ்வாய்! இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே. நம்முடைய கஷ்டங்கள் எல்லாம் விலக வேண்டும் என்றால், செவ்வாய் கிழமை ராகுகால சமயத்தில், துர்க்கை அம்மன் சன்னிதானத்திற்கு சென்று ஒரு தீபம் ஏற்றி வைத்தால் போதும். ஆனால், கோவிலுக்கு போக முடியாத சூழ்நிலை! என்ன செய்வது? கோவிலில் விளக்கேற்றிய அதே பலனை, நாம் அடைய வேண்டும் என்றால், நம்முடைய வீட்டில் ராகுகால தீபத்தை எப்படி ஏற்றலாம், என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

durga

உங்களுடைய வீட்டில் துர்கை அம்மன் படம் இருந்தாலும் சரி, அல்லது வேறு எந்த ஒரு அம்மன் படமாக இருந்தாலும் சரி. அம்மனின் திருவுருவ படத்திற்கு, முடிந்தவரை அரளி பூ வாங்கி சூட்ட வேண்டும். அரளிப்பூ கிடைக்காத பட்சத்தில், வாசனை மிகுந்த பூக்களைச் சூட்டுங்கள். இரண்டு இனுக்கு வேப்பிலை, ஒரு எலுமிச்சை பழத்தை அம்மனின் திருவுருவ படத்திற்கு முன்பாக வைத்து விடுங்கள். அதன்பின் ஒரு மண் அகல் விளக்கு, ஒரு சிறிய தாம்பூலத் தட்டு, கொஞ்சம் போல் அருகம்புல், விளக்குத் திரி, நெய் அல்லது நல்லெண்ணெய் இவை மட்டும் போதும்.

தயாராக வைத்திருக்கும் தாம்பல தட்டின் மேல், அறுகம்புல்லை பரவலாக வைத்து, அதன் நடுவே மண் அகல் தீபத்தை வைத்து, நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி, திரி போட்டு, தீபத்தை ஏற்ற வேண்டும். செவ்வாய்க்கிழமை ராகு கால நேரம், 3 மணியிலிருந்து 4.30 க்குள் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். இந்த ஆடி மாத செவ்வாய்க் கிழமையில், இந்த தீபத்தை உங்கள் வீட்டில் ஏற்ற தவறவிடாதீர்கள்!

arugampul juice

உங்கள் வீட்டு பூஜை அறையில் தென்கிழக்கு மூலையில் இந்த தீபத்தை வைத்து விடுங்கள். இது மேலும் அதிகப்படியான சிறப்பை உங்களுக்கு சேர்க்கும். தட்டின் மேல் அருகம்புல்லை வைத்து விட்டு, அருகம்புல்லின் மேல் தீபத்தை வைத்து ஏற்ற வேண்டம். அகல் தீபத்திற்கு பக்கத்தில், கொஞ்சம் அருகம்புல்லை வைத்தால் மட்டும் போதும். விநாயகரையும் மனதார வேண்டிக்கொள்ளுங்கள்.

- Advertisement -

ராகு பகவானின் ஆசிர்வாதம் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால், ராகுவின் தோஷம் நம்மை தாக்கக் கூடாது என்றாலும், துர்க்கை அம்மன் வழிபாடு மிகவும் சிறந்தது. ராகு கிரகத்திற்கு உரியதான ஒரு பொருள் தான் அருகம்புல். ஆகவே, ராகுகாலத்தில் அருகம்புல்லையும் துர்க்கை அம்மனையும் ஒன்றாக சேர்த்து வைத்து, வழிபாடு செய்யும் போது நமக்கு வாழ்க்கையில் இருக்கக்கூடிய, சகல தோஷங்களும் நிவர்த்தி அடைந்து, சகல சௌபாக்கியமும் பெற்று செல்வ செழிப்போடு வாழ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

deepam

மனதார அம்பாளை மனதில் வேண்டிக்கொண்டு, இந்த வழிபாட்டை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். கோவிலுக்கு செல்ல முடியவில்லையே, என்ற வருத்தம் உங்கள் மனதில் ஒரு துளி கூட இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. கோவிலுக்கு சென்று வழிபாடு செய்த அந்த மன அமைதியை, வீட்டிலிருந்தே நீங்கள் செய்யும் இந்த வழிபாட்டின் மூலம் பெற முடியும் என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
விநாயகரைப் போன்ற தும்பிக்கை உள்ள அதிசய மூஞ்சூறு? ‘யானை ஷ்ரூவ்’ பற்றிய ஆச்சரிய தகவல்கள் இதோ!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.