நாளை ஆடி மாத பௌர்ணமி! பணக்கஷ்டம் தீர்ந்து செல்வ செழிப்பில் அசுர வேகத்தில் வளர்ச்சியை பெற அம்மன் கோவிலுக்கு இதை மட்டும் வாங்கி கொடுங்க போதும்.

aadi-pournami
- Advertisement -

ஆடி மாதம் முழுவதுமே அம்மனுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாக சொல்லப்பட்டுள்ளது. அதிலும் நாளை ஆடிச் செவ்வாய். கூடவே சேர்ந்து பௌர்ணமியும் வந்திருக்கின்றது. அது மட்டும் மட்டுமல்லாமல் ஆங்கில மாதத்தில் நாளை முதல் நாள் துவங்க இருக்கின்றது. சொல்லவா வேண்டும். நேர்மறை ஆற்றல் நிறைந்த இந்த நன்னாளில் அம்மனை வழிபாடு செய்தால், அளவில்லா ஆசீர்வாதங்கள் கிடைக்கும். வாழ்க்கையில் அசுர வளர்ச்சியோடு முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்கள் நாளை அம்பாள் வழிபாட்டை தவற விடாதீங்க. நாளைய தினம் பௌர்ணமி அன்று உங்கள் வீட்டு வழக்கப்படி நீங்கள் எந்த பூஜையை செய்தாலும் சரி, கூடவே சேர்த்து இந்த பரிகாரத்தையும் செய்து பாருங்கள். வாழ்க்கையில் அளவில்லா மகிழ்ச்சியை பெறுவீர்கள். பணகஷ்டம் மன கஷ்டம் சுப காரியத்தடை போன்ற எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு முடிவு கட்ட இந்த பரிகாரம் ஒரு வரப் பிரசாதம் என்றே சொல்லலாம்.

ஆடி மாத பௌர்ணமி, அம்பாள் வழிபாடு:
இந்த ஆடி மாதம் செவ்வாய்க் கிழமையில் பௌர்ணமி தினம் வந்திருப்பதால், அம்பாளுக்கு நீங்கள் செவ்வாழை அல்லது மாதுளம் பழத்தை வாங்கி நிவேதனமாக கொடுக்க வேண்டும். வீட்டில் இருக்கும் அம்மனின் திருவுருவப்படத்திற்கு முன்பாக வெற்றிலை பாக்கு பூ இந்த செவ்வாழை மாதுளம் பழத்தை வைத்து விளக்கு ஏற்றி தூபம் போட்டு, கற்பூரம் காமித்து வழிபாடு செய்வது ரொம்ப ரொம்ப சிறப்பு தாங்க.

- Advertisement -

ஆனால், அதைவிட வீட்டு பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு போங்க. ஒரு தாம்பூல தட்டில் வெற்றிலை பாக்கு, உங்களால் முடிந்த செவ்வாழை, உங்களால் முடிந்த அளவு மாதுளம் பழத்தை, வாங்கி வையுங்கள். மற்றபடி அர்ச்சனைக்கு தேங்காய் ஊதுவத்தி கற்பூரம் வாங்கி கொடுப்பது உங்களுடைய இஷ்டம். இந்த பொருட்களை எல்லாம் கொண்டு போய் அம்பாளுக்கு கொடுத்துவிட்டு, உங்களது பெயரைச் சொல்லி ஒரு அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். குடும்பத்தோடு சென்று இந்த வழிபாட்டை மேற்கொள்வது ரொம்ப ரொம்ப சிறப்பு. முடிந்தால் உங்கள் கையால் அம்மனுக்கு செவ்வரளி பூக்களை வாங்கி மாலையாக போடுவது சிறப்பான பலனைத் தரும்.

செவ்வாய் என்றாலே சிவப்பு தானே. அந்த நாளில் வந்திருக்கக் கூடிய பௌர்ணமி தினத்தில் இப்படி சிவப்பு நிறத்தில் எல்லா பொருட்களையும் வாங்கிக் கொண்டு போய் அம்பாளுக்கு வழிபாடு செய்தால் உங்களுக்கு வறுமையை தரும் அத்தனை கஷ்டமும் தீரும் என்பது நம்பிக்கை. இந்த வழிபாட்டை முடித்துவிட்டு நீங்கள் கொடுத்த தாம்பூல தட்டை அப்படியே அர்ச்சகர் திரும்பவும் உங்களிடம் கொடுப்பார் அல்லவா. அதில் இருக்கும் அந்த வாழைப்பழம் மாதுளை பழத்தை பிரசாதமாக கொஞ்சம் கொஞ்சமாக வீட்டில் இருப்பவர்கள் சாப்பிட வேண்டும்.

- Advertisement -

மீதம் இருக்கும் பிரசாதத்தை உங்கள் கையால் இல்லாதவர்களுக்கு தானமாக கொடுக்கலாம். கோவிலுக்கு வெளி பக்கத்திலேயே வயதானவர்கள் அமர்ந்திருப்பார்கள் அல்லவா உங்கள் கையால் அவர்களுக்கு தானம் கொடுத்து விடுங்கள். (தானம் கொடுத்து விட்டு மீதம் இருப்பதை வீட்டில் இருப்பவர்கள் பகிர்ந்து சாப்பிட்டாலும் சரிதான்).

இது ஒரு பக்கம் இருக்கட்டும். இது அம்பாள் வழிபாடு. இது தவிர நாளைய தினம் நல்ல வேலை கிடைக்க, நல்ல வருமானம் வர தீராத நோய் தீர நீங்கள் அனுமனை கூட வழிபாடு செய்யலாம். அனுமனின் நினைத்து அனுமனுக்கு வெற்றிலை மாலை சாத்தி வெண்ணெயை நிவேதனமாக வைத்து வழிபாடு செய்தால் உங்களுக்கு கிடைக்காத வேலை கூட கிடைக்கும். வருமானமே இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். வெளிநாட்டு வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் வரும்.

இதையும் படிக்கலாமே: வாழ்க்கையில் நீ எதற்குமே உருப்படாதவன் என்று சமுதாயத்தால் முத்திரை குத்தி ஒதுக்கப்பட்டவனாக இருந்தாலும், ஜாதக ரீதியாகவே வாழ்க்கையில் உனக்கு முன்னேற்றம் இல்லை என்றாலும், இந்த பரிகாரம் உனக்கு கை கொடுக்கும்.

அம்பாள் வழிபாடு, ஹனுமன் வழிபாடு நாளைய தினம் உங்களால் என்ன வழிபாட்டை செய்து மன நிறைவு பெற முடியுமோ அதை செய்யுங்கள். என்னதான் அடுத்தவர்கள் பரிகாரத்தை சொன்னாலும், மனநிறைவோடு நாம் செய்யும் வழிபாட்டிற்கு தான் நிறைய பலன் கிடைக்கும் அல்லவா. ஆகவே, நம்பிக்கை இருந்தால் மட்டும் இதை எல்லாம் பின்பற்றி பலன் பெறுங்கள். அந்த அம்மனின் அருள் ஆசி உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் என்ற தகவலோடு இன்றைய ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -