நம்முடைய வாழ்க்கையில், நம்மால் செய்யவே முடியாத சிக்கலான சில வேலைகள் நிச்சயம் இருக்கும். அந்த சிக்கலை சரி செய்தால், நம் வாழ்க்கையில் முன்னேற்றம் வரும் என்ற நம்பிக்கையும் இருக்கும். உதாரணத்திற்கு 5 லட்சம் ரூபாய் முதலீடு இருந்தால் நல்ல தொழில் செய்து வாழ்க்கையில் முன்னேறி விடுவேன் என்று சில பேர் யோசிக்கலாம்.
இவ்வளவு பணம் எனக்கு கிடைத்தால் என்னுடைய பிள்ளையை வெளிநாட்டுக்கு படிக்க அனுப்புவேன் என்று சில பேருக்கு ஆசை இருக்கலாம். ஆனால் பணம் கிடைப்பதில் சிக்கல் இருக்கும். கஷ்டப்பட்டு இந்த படிப்பை படித்து விட்டால், வெளிநாடு செல்லலாம் என்று கூட ஆசை சில பேருக்கு இருக்கும். ஆனால் அந்த படிப்பை படிப்பதில் சிக்கல் வரும்.
சில பேருக்கு வீடு வாங்க வேண்டும், நிலம் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கலாம், அதற்கு பணம் சம்பாதிக்க முடியாத சிக்கலில் சிக்கிருக்கலாம். இப்படி இன்னும் பல பிரச்சனைகள், பல மனிதர்களுக்கு இருக்கு. உங்களுடைய வாழ்க்கையிலும் இதுபோல சிக்கலான சிக்கல்கள் இருக்கிறதா. அதிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும் என்று நினைக்கிறீர்களா.
இன்றைய தினம் ஆடி மாதத்தில் வந்திருக்கும், கிருத்திகை. இன்றைய தினம் முருகர் வழிபாடு செய்பவர்களுக்கு சிக்கலான பிரச்சனைகள் கூட சுலபமாக தீர்ந்துவிடும். ஆடி மாதத்தில் இரண்டு கிருத்திகை வந்திருக்கிறது. ஆகவே இந்த இரண்டு நாளிலும் நீங்கள் முருகப்பெருமானை வழிபாடு செய்யுங்கள். தவறு ஒன்றும் கிடையாது. அம்மனுக்கு உரிய இந்த ஆடி மாதம் மாதம் முருகப்பெருமானின் அருளை பெற இரண்டு சக்தி வாய்ந்த நாட்கள் நமக்கு கிடைத்திருக்கிறது.
இன்றைய தினம் வீட்டிலேயே பூஜை அறையில் முருகப்பெருமானுக்கு ஒரே ஒரு நெய் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். உங்களுடைய ஒரே ஒரு கோரிக்கையை முருகப்பெருமானின் பாதத்தில் வையுங்கள். இப்போது உங்களுடைய வாழ்க்கையில் எந்த வேலையை நீங்கள் முதலில் செய்து முடிக்க வேண்டும். எந்த கடமை உங்கள் தலைமேல் நிற்கிறது. அந்த கோரிக்கையை முருகப்பெருமானிடம் வைத்து ஒரு வெள்ளை காகிதத்தை எடுத்து அதில் நடுவில் ஒரே ஒரு மஞ்சள் பொட்டு மட்டும் வைத்து விட்டு, சாதாரணமாக ஒரு பேனாவை எடுத்து அந்த கோரிக்கை நிறைவேற வேண்டும் என்பதற்காக இந்த முருகன் மந்திரத்தை 108 முறை எழுதுங்கள்.
முருகன் மந்திரம்
ஓம் குமாராய நம !
முருகன் நாமங்களின் அதிசக்தி வாய்ந்த நாமம் இது. அதிசக்தி வாய்ந்த மந்திரம் இது. இந்த மந்திரத்தை 108 முறை சொன்னாலே நிறைய நேர்மறை ஆற்றல் உங்களுக்குள் வந்துவிடும். இந்த மந்திரத்தை 108 முறை எழுதும்போது இந்த மந்திரத்திற்கான பலனை உங்களால் முழுமையாக அடைய முடியும். அதுவும் ஆடி கிருத்திகை னயான இன்று இந்த மந்திரத்தை சொல்லுபவர்கள் நிச்சயம் புண்ணியம் செய்தவர்களாகத்தான் இருக்க முடியும். இந்த ஆடித் கிருத்திகைக்கு எதற்காக அப்படி ஒரு சிறப்பு.
ஆடி கிருத்திகை அம்பாளுக்கு உரிய மாதம், முருகப்பெருமானின் தாய்க்கு உரிய இந்த மாதத்தில், கிருத்திகை திதி வருவது சிறப்பு. அதிலும் இந்த வருடம் ஆடி மாதத்தில் இரண்டு கிருத்திகை திதியை நமக்காக கொடுத்திருக்கும் கடவுளுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும் அல்லவா. இந்த சக்தி வாய்ந்த ஆடி கிருத்திகையை யாரும் தவற விடாதீங்க.
இதையும் படிக்கலாமே: ஆடி மாத சுமங்கலி பூஜை செய்யும் முறை
ஞாயிற்றுக்கிழமை அன்று வந்திருக்கும் இந்த கிருத்திகை நாளில் முருகர் வழிபாடு செய்வது வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் அதிவிரைவாக தீர்த்து வைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனை ஆன்மீகம் சார்ந்த தகவலை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சியுடன் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.