ஆடி கூழ் செய்வது எப்படி என்று பார்ப்போம்

koozh
- Advertisement -

ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் படைத்து அம்மனின் மனதை குளிர்விப்பது தமிழர்களின் பண்பாடு. அந்த வகையில் ஆடி கூழ் செய்வது எப்படி என்பது பற்றி இங்கு பார்ப்போம்.

Aadi Koozh
Aadi Koozh

ஆடி கூழ் தேவையான பொருட்கள்:

கேழ்வரகு மாவு-1 கோப்பை
பச்சரிசி-கால் கோப்பை
தண்ணீர்- 2 கோப்பை
தயிர்-1 கோப்பை
சின்ன வெங்காயம்-2 தேக்கரண்டி அளவு பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய்-1
உப்பு தேவையான அளவு

- Advertisement -

இந்த அளவை கொண்டு நான்கு நபர்கள் அருந்தும் அளவிற்கு கூழ் செய்யலாம்.

ஒரு பெரிய பாத்திரத்தில் அரைத்த கேழ்வரகு மாவை போட்டுக்கொள்ள வேண்டும். பிறகு 4 கோப்பை நீரை அந்த பாத்திரத்தில் ஊற்றி கேழ்வரகு மாவு கட்டி போகாதவாறு நன்கு கலக்கி கொள்ள வேண்டும்.

- Advertisement -

கால் கோப்பை பச்சரிசியை எடுத்துக்கொண்டு மிக்ஸியில் போட்டு மாவாக அரைத்து கொள்ள வேண்டும். இந்த அரிசி மாவை மற்றொரு பெரிய பாத்திரத்தில் போட்டுகொண்டு அதில் 2 கோப்பை நீரை ஊற்றி, அடுப்பில் தீமூட்டி கொதிக்க வைக்க வேண்டும்.

Aadi Koozh
Aadi Koozh

இந்த பச்சரிசி மாவு நன்கு கஞ்சி போன்ற பதத்தில் வரும் அளவிற்கு காய்ச்ச வேண்டும்.

- Advertisement -

கஞ்சி பதத்தில் பச்சரிசி மாவு வந்தவுடன் அதில் கேழ்வரகு மாவு கலவையை ஊற்றி, அதனுடன் தேவையான அளவு உப்பை சேர்த்து, இளம் சூட்டில் இந்த கேழ்வரகு மற்றும் பச்சரிசி மாவு கலவை கட்டிபோகாத வாறு கரண்டியை கொண்டு கலக்கி கொண்டிருக்க வேண்டும்.

அதிக சூட்டில் வைத்து இந்த கலவையை கலக்கினால் இந்த கூழ் மிகவும் இறுகி களி ஆகிவிடும்.

கூழ் சரியான பதத்தில் வந்து விட்டது என்பதை அறிய அந்த கூழை சிறிது கரண்டியில் எடுத்து பார்த்தோமேயானால் அரிசிமாவு மற்றும் கேழ்வரகு மாவு தூள்கள் தனித்தனியாக இருப்பதை காண முடியும்.

Aadi Koozh
Aadi Koozh

இந்த பதத்தில் கூழ் வந்தவுடன் உடனடியாக பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைக்க வேண்டும். உடனடியாக தயிரை இக்கலவையில் சேர்த்து நன்கு கலக்கி கொள்ள வேண்டும்.

பிறகு வெங்காயம் பச்சை மிளகாய் போன்றவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி இக்கூழில் போட்டு கலக்கிய பின் கூழ் உண்பதற்கு தயாராகிறது.

Aadi Koozh
Aadi Koozh

இந்த கூழை பிறருக்கு வழங்கும் முன்பு வீட்டின் பூஜை அறையை சுத்தம் செய்து, ஒரு பீடத்தில் சிறிய அம்மன் படத்தை வைத்து, குத்துவிளக்குகள் விளக்கேற்றி, சிறிது வேப்பிலை இலைகள் வைத்து இந்த கூழை அம்மனுக்கு நிவேதனமாக வைத்து வணங்கி, பின்பு நாமும் மற்றவர்களும் இந்த கூழை தெய்வ பிரசாதமாக அருந்தலாம். இதனுடன் அவரவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு சைவ அசைவ உணவுகளையும் அம்மனுக்கு படைத்து உணவாக கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே:
ஆடி மாதத்தில் வாகனம் வாங்கலாமா ?

English Overview:
Here we have Aadi Koozh recipe in Tamil. Aadi koozh is a kind of health drink which will be offred to Amman in Aadi month.

- Advertisement -