ஆடி மாத பிறப்பன்று குலதெய்வத்தை இப்படி வணங்கினால் உங்கள் குடும்பத்திற்கு யோகம் வரும். அன்றைய நாளில் என்னவெல்லாம் செய்ய வேண்டும்?

amman-kuladheivam

ஆடி மாதம் என்றாலே நம் வீடும், ஊரும் கோலாகலமாக மாறிவிடும். ஆடி மாதம் அம்மனுக்கு உரியது மட்டுமல்ல. குல தெய்வத்திற்கும், நமது முன்னோர்களுக்கும் கூட வழிபாடுகள் செய்து வழிபடுவது சகல செல்வ வளத்தையும் பெற்றுத்தரும். குடும்ப முன்னேற்றத்திற்கு குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஆடி மாத பிறப்பன்று அம்மனுக்கும், குல தெய்வத்திற்கும், முன்னோர்களுக்கும் எப்படி வழிபாடு செய்வது? நம்மில் பலருக்கும் அம்மன் குலதெய்வமாக இருப்பாள். அவர்கள் கண்டிப்பாக மாத பிறப்பன்று குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வார்கள். இப்போது இருக்கும் சூழ்நிலையில் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வது எப்படி என தெரியாமல் கஷ்டப்பட தேவையில்லை. உங்கள் வீட்டிலேயே எளிதாக இந்த வழிபாடுகளை எப்படி மேற்கொள்ளலாம்? என்பதை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

kula dheivam

சார்வரி வருடம், ஆங்கில மாதத்தில் வரும் ஜூலை 15, புதன்கிழமை அன்று ஆடி முதல் தேதி பிறக்க இருப்பதால் அதற்கு முந்தைய நாளே வீடு முழுவதும் சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். மாதப்பிறப்பன்று ஒருவேளை உபவாசம் இருப்பது மிகவும் நல்லது. விரதம் இருக்க முடியாதவர்கள் காலையில் பால் அருந்திக் கொள்ளலாம். அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளையில் அல்லது சுப ஓரையில் மாவிளக்கு ஏற்றுவது நன்மைகளை அளிக்கும்.

அன்றைய நாள் கிருத்திகை மற்றும் ஏகாதசி வருவதால் முருக வழிபாடும், பெருமாள் வழிபாடும் மிகச்சிறந்த பலன்களை நமக்கு வாரி வழங்கும். எனவே காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு, தெய்வ விக்ரகங்களுக்கு, படங்களுக்கு சந்தன குங்குமம் இட்டு, பூ சாற்றி, பெரிய வாழை இலை ஒன்று விரித்து வைத்துக் கொள்ளுங்கள். காலையில் சக்கரை பொங்கல் செய்து நிவேதனம் செய்ய வேண்டும். இரண்டு மாவிளக்குகளை முதலில் ஏற்றிவிட வேண்டும். அதன் பின் ஒரு மஞ்சள் துணியில் குலதெய்வத்தை நினைத்து வேண்டிக் கொண்டு, 101 ரூபாய்க்கு ஒரு ரூபாய் நாணயங்களை முடிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

manjal-mudichu

உங்களால் குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியாவிட்டால் பரவாயில்லை. வீட்டிலேயே வழிபாடு செய்து நீங்கள் எப்போது குல தெய்வம் கோவிலுக்கு செல்கிறீர்களா, அப்போது இந்த காணிக்கை செலுத்தி விடுங்கள். தேங்காயை இரண்டாக உடைத்து வைத்து தூபதீபம், கற்பூர ஆரத்தி காட்டி வழிபாடு செய்யுங்கள். உங்களுக்கு இருக்கும் மனக்குறைகளை முழுமையாக குலதெய்வத்திடம் இறக்கி விடுங்கள் போதும், உங்கள் குடும்பத்திற்கு இருக்கும் கஷ்டங்கள் யாவும் நீங்கி லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும்.

- Advertisement -

அன்றைய நாள் யோகமான நாளாக இருப்பதால் கோவில்களில் நீர்மோர் தானம் அளிப்பது மிகச் சிறந்த பலன்களை தரும். கோவில்களுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிற்கு வெளியில் வைத்து நீர்மோர் தானம் செய்யலாம். முந்தைய நாளே இவற்றை தயார் செய்து கொள்வது நல்லது.

Buttermilk

அன்றைய நாள் நம் முன்னோர்களை நினைத்து மதிய உணவு தயாரித்து அவர்களுக்கு படைத்து, பின் பிரசாதத்தை காக்கைக்கு வைத்துவிட்டு நீங்கள் உணவருந்தலாம். பசுக்களுக்கு அகத்திக்கீரை மற்றும் வாழைப்பழம் உண்ணக் கொடுப்பது முன்னோர்களின் ஆசியை பரிபூரணமாக உங்களுக்கு பெற்றுத்தரும்.

neem-tree2

அம்மனுக்கு உகந்த மாதமாக ஆடி மாதம் திகழ்கிறது. அதனால் அன்றைய நாளில் வேப்பிலையை நிலை வாசல் படியில் நிறைய கட்டி தொங்க விடுங்கள். வீடு முழுவதும் மஞ்சள் நீர் தெளித்து விடுங்கள். நிலைவாசல் படிக்கு மஞ்சள் குங்குமம் வையுங்கள். மாக்கோலம் போடுங்கள். இவற்றையெல்லாம் செய்வதால் உங்கள் வீடு கோவிலாக மாறிவிடும். உங்களுக்கு தெய்வங்களின் அருளும், குலதெய்வ அருளும், முன்னோர்களின் ஆசியும் ஒருசேர நிச்சயம் கிட்டும். அது உங்கள் குடும்பத்திற்கு மென்மேலும் வளங்கள் சேர்ந்து யோக வாழ்க்கை அமைத்து கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே
சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகரை இப்படி வழிபட்டால், எப்படிப்பட்ட பண பிரச்சனையும் தீரும்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Aadi matha sirappugal in Tamil. Aadi matha valipadu. Aadi matha amman valipadu. Aadi matham poojai. Aadi matha sirappu in Tamil.