சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகரை இப்படி வழிபட்டால், எப்படிப்பட்ட பண பிரச்சனையும் தீரும்!

vinayagar-arasa-ilai

பொதுவாகவே சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகர் வழிபாடு நல்ல பலனைத் தரும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று தான். நம்முடைய சங்கடங்கள் எல்லாம் தீரவேண்டும் என்றால், சதுர்த்தி தினத்தில் விநாயகப் பெருமானை நினைத்து, ஒரே ஒரு தேங்காயை சிதறு தேங்காய் விட்டால் போதும்.  நம்முடைய பிரச்சினைகள் சிதைந்து போய்விடும் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் நமக்கு இருக்கக்கூடிய, குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பணக்கஷ்டம் தீர வேண்டும் என்றால், சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விநாயகர் வழிபாட்டை எப்படி செய்ய வேண்டும்? என்பதைப் பற்றியும், விநாயகருக்கு எந்த பிரசாதத்தை செய்து வைத்து, அதை தானமாக எல்லோருக்கும் வழங்க வேண்டும் என்பதைப் பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

maragatha-vinayagar

சங்கடஹர சதுர்த்தி அன்று, மாலை 5.30 முப்பது மணியிலிருந்து 7.30  மணிக்குள் இந்த வழிபாட்டை செய்யவேண்டும். சதுர்த்தி தினத்தில் காலை எழுந்த உடனேயே குளித்து முடித்து விட்டு, உங்களால் எப்படி விரதம் இருக்க முடியுமோ அந்த முறையில் விரதம் இருக்கலாம். உங்கள் வீட்டு பூஜை அறையில், காலை வேளையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்து விட்டு, விநாயகர் படத்திற்கு அருகம்புல் சாத்தி, அலங்காரம் செய்துவிட்டு, உங்களது விரதத்தை தொடங்கினால் போதும்.

சாப்பாடு சாப்பிடாமல் விரதம் இருந்து தான், இந்த வழிபாட்டைச் செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. உடல்நிலை சரியில்லாதவர்கள் சாப்பாடு சாப்பிட்டும் கூட, இந்த வழிபாட்டை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மாலை பூஜையை தொடங்குவதற்கு முன்பாகவே அரச மரத்திலிருந்து, 11 இலைகளை எடுத்து வந்து, வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

arasa-ilai

மாலை 6 மணிக்கு விநாயகரின் திருவுருவப் படத்திற்கு முன், ஒரு நல்லெண்ணை தீபம் ஏற்றி வைத்து, விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டையை பிரசாதமாக படைத்து, எடுத்து வைத்திருக்கும் அரச மர இலைகளை ஒவ்வொன்றாக எடுத்து, விநாயகருக்கு போட்டு, அர்ச்சனை செய்ய வேண்டும். ஒவ்வொரு முறை அர்ச்சனை செய்யும் போதும் ‘விக்னங்களை தீர்க்கும் விநாயகா போற்றி’ என்ற மந்திரத்தை சொல்லி அரசமர இலைகளால், உங்கள் வீட்டு விநாயகருக்கு அர்ச்சனை செய்தால் போதும்.

- Advertisement -

நீங்கள் நைவேத்தியமாக படைத்திருக்கும் கொழுக்கட்டையை, உங்கள் வீட்டின் அக்கம் பக்கத்தில் இருக்கும் குழந்தைகள், முதியவர்கள், முடிந்தால் பசியோடு இருப்பவர்களுக்கு தானமாக கொடுப்பது மிகவும் நல்லது. நாளை சங்கடஹர சதுர்த்தி. ஒரே ஒரு சதுர்த்தி தினத்தில், இந்த வழிபாட்டை செய்துவிட்டு, எல்லா கஷ்டமும் ஒரு நொடியில் தீர வேண்டும் என்ற விநாயகரை வேண்டிக் கொண்டால் அது சாத்தியமாகுமா? ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தியும் இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்து வாருங்கள்!

kozhukattai 4

கடன் தொல்லை, வருமானம் இல்லாமல் வறுமையில் இருப்பவர்கள், அல்லது ஏதோ ஒரு குறிக்கோளுக்காக பணத்தை சேர்ப்பவர்கள், இப்படி எப்படிப்பட்ட பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்தாலும், ஒரு 11 சங்கடஹர சதுர்த்தி அன்று, இந்த வழிபாட்டை செய்து விட்டு, அதற்கான பலனை எதிர்பார்க்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
உங்கள் வீட்டிற்கு இந்த நிலையை வாசலாக அமைத்தால் என்ன நடக்கும்? உங்கள் ஜாதகத்தில் 4ஆம் இடத்தில் யார் அமர்ந்திருந்தால் உங்களுக்கு வீடு அமையும்?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Sankatahara chaturthi. Sankatahara Chaturthi Vratham. Vinayagar Valipadu Murai in Tamil. sathurthi viratham 2020