ஆடி மாதம், தினம்தோறும் அம்மன் வழிபாட்டை இந்த முறையில் செய்து பாருங்கள்! எப்படிப்பட்ட கஷ்டத்திற்கும் கட்டாயம் ஒரு தீர்வு கிடைக்கும்.

amman
- Advertisement -

எப்படிப்பட்ட தீர்க்கமுடியாத கஷ்டத்தையும் தீர்த்துவைக்கும் சக்தி கொண்டவள் அம்பாள். அந்த அம்பாளுக்கு மிகவும் சிறப்புமிக்க மாதம் தான் இந்த ஆடி மாதம். அம்பாளின் மனம் குளிர, ஆடி மாதம் 32 நாட்களும், அம்மன் வழிபாட்டை, இப்படி செய்து வந்தோமேனால், நமக்கு இருக்கக்கூடிய எப்படிப்பட்ட பெரிய பிரச்சினைக்கும், ஆடி மாத முடிவிலேயே நல்ல பலன் கைமேல் கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அம்மன் மனதை குளிரவைக்கும் சுலபமான வழிபாட்டு முறையை நம் வீட்டில், அன்றாடம் எப்படி செய்ய வேண்டும்? என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

irukkankudi-amman

வெளியில் சொல்ல முடியாத கஷ்டங்களை கூட, நாம் அம்பாளின் காலடியில் கொண்டு போய் சேர்த்து விடுகின்றோம். அவள் செவிகளில் விழுந்துவிட்டால், கஷ்டங்கள் காணாமல் போய்விடும். ஆடி மாதம், முதல் தேதியிலிருந்து உங்களது வேண்டுதலை அம்பாளிடம் வைக்க தொடங்குங்கள். காலை பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு, முடிந்தால் வீட்டு பூஜை அறையில் இருக்கும் அம்மனின் திருவுருவ படத்திற்கு, அரளிப்பூவை சாத்தி, அம்மனுக்கு அலங்காரம் செய்யுங்கள். இல்லை என்றால் உங்களுக்கு எந்த பூ கிடைக்கிறதோ அதை வைத்து அலங்காரம் முடித்துவிடுங்கள்.

- Advertisement -

ஒரே ஒரு, நல்லெண்ணெய் தீபத்தை ஏற்றி, பூஜை அறையில் வைத்து விட்டு, உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டத்தை அம்பாளின் முன் வைத்து விடுங்கள். தீராத துன்பம் என்று உங்களுக்கு எது இருக்கின்றதோ அந்த பிரச்சனை தீர வேண்டும் என்று முதலில் மனதார வேண்டிக்கொண்டு, பின்வரும் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.

pachai-amman

‘ஓம் சர்வ சக்தி தாயே போற்றி!’

- Advertisement -

ஒருவரி மந்திரம் தான்! ஆனால் சக்தி வாய்ந்த மந்திரம் இது. ஆடி மாதம் முழுவதும் காலையில் அம்மனை மனதார நினைத்து 108 முறை இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு, உங்களது விரதத்தை தொடங்குங்கள். விரதம் என்றால் கடுமையான விரதம் இல்லை. ஒரு வேளை மட்டும், காலை ஒரு வேளை மட்டும், உணவு அருந்தாமல், பழம் பால் சாப்பிட்டுவிட்டு, இந்த விரதம் இருப்பது மிகவும் நல்ல பலனைத் தரும்.

arali

வீட்டில் மன கஷ்டம் இருந்தாலும், பண கஷ்டம் இருந்தாலும், ஆரோக்கியத்தில் பிரச்சனை இருந்தாலும், திருமண தடை இருந்தாலும், சண்டை சச்சரவுகள் இருந்தாலும், அதை அம்பாளிடம் மனதார சொல்லி, அந்த பிரச்சினை தீர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். கட்டாயம் ஆடி மாதம் முடிவதற்குள் உங்களுடைய பிரச்சினைக்கு நல்ல ஒரு தீர்வு, ஏதாவது ஒரு ரூபத்தில் கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

- Advertisement -

Neem

இதேபோல், ஆடி மாதம் தொடங்கிய அந்த நாளிலிருந்தே உங்கள் வீட்டு வாசலில் கொஞ்சம் வேப்பிலையை சொருகி வையுங்கள். ஆடிமாதம் அதிகப்படியான காற்று வீசும் என்பதால், அந்த காற்றின் மூலம் கண்ணுக்கு தெரியாத கிருமிகள் எதுவும் நம் வீட்டிற்குள் நுழைய கூடாது என்பதற்காகத்தான் ஆடி மாத அம்மன் வழிபாட்டில், நம் முன்னோர்கள் வேப்பிலைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். ஆகவே, உங்கள் வீட்டிலும் ஆடி முதல் நாள் அன்று, நிலவாசலில் வேப்பிலை வைக்க மறக்காதீர்கள்!

இதையும் படிக்கலாமே
ஆடி செவ்வாய்! ஆடி வெள்ளி! ஆடி ஞாயிறு! முறையான அம்மன் வழிபாட்டை இப்படி செய்தால் வாழ்வு வளம் பெறும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -