நாளை ஆடி முதல் நாள்! குலதெய்வத்தையும் அம்மனையும் நம் வீட்டு பூஜை அறையில், முறைப்படி எப்படி வழிபாடு செய்வது?

amman
- Advertisement -

நாளை ஆடி மாதத்தினுடைய முதல் நாள் பிறக்க இருக்கின்றது. ஆடி மாதம் முழுவதும் வீட்டில் பக்தி மயம் தான். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள் ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய்களில் அம்மன் வழிபாட்டிற்கு மிக மிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அந்த வரிசையில் நாளை வரக்கூடிய ஆடி முதல் நாளில் நம்முடைய வீட்டிற்குள் குல தெய்வத்தையும் அம்மனையும் எந்த முறைப்படி அழைப்பது, எந்த முறைப்படி பூஜை செய்வது என்ற சுலபமான வழிபாட்டு முறையை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

kamatchi-amman7

நாளை அதிகாலை வேளையிலேயே வீட்டில் இருக்கும் பெண்கள் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு, வீட்டை துடைத்து, பூஜை அறையை சுத்தம் செய்து, பூஜை அறையில் இருக்கும்எல்லா சுவாமி படங்களையும் துடைத்து பூக்களால் அலங்காரம் செய்து வைத்துவிட வேண்டும். நாளை ஆடி முதல் நாள் என்பதால் வேப்ப இலையை கொண்டு வந்து உங்களுடைய நிலை வாசலில் கட்டி வைத்துவிடுங்கள்.

- Advertisement -

ஒரு சிறிய பித்தளை சொம்பு நிறைய தண்ணீரை ஊற்றி விடுங்கள். குடிக்கின்ற நல்ல தண்ணீராக இருக்கட்டும். எச்சில் படாத தண்ணீராக இருக்கட்டும். அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், ஒரு சிட்டிகை குங்குமம், இரண்டு வேப்ப இலை போட்டு, இந்த தீர்த்தத்தில் உங்களுடைய குலதெய்வமும் அம்மனும் வந்து அமர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

sembu-sombu

பூஜை அறையில் சிறிது நேரம் அமர்ந்து உங்களுடைய குல தெய்வத்தின் நாமத்தை 108 முறை மனதுக்குள் உச்சரிக்கவேண்டும். ‘ஓம் சக்தி’ என்ற நாமத்தினை 108 முறை உச்சரித்து விட்டு, அம்மனையும் குலதெய்வத்தையும் கலச சொம்பில் ஆவாகனம் செய்து, இந்த தீர்த்தத்தை பூஜை அறையில் வைத்து, சர்க்கரைப் பொங்கல் நிவேதனமாக வைத்து, தீப ஆராதனை காட்டி மனதார ஆடி மாத முதல் நாள் பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்தபடியாக உங்களுக்கு நிறைவேறாத வேண்டுதல் ஏதாவது இருந்தால் நாளை 1 ரூபாய் நாணயத்தை மஞ்சள் நிற துணியில் முடிந்து வைத்து, அம்மனின் பாதங்களில் வைத்து விடுங்கள். நீங்கள் வேண்டிய அந்த நல்ல விஷயம் ஆடி மாதத்திற்குள் நிறைவடைந்து விட்டால், ஏதாவது ஒரு அம்மன் கோவில் உண்டியலில் இந்த காணிக்கையை செலுத்தி விடுவதாக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். நிச்சயமாக உங்களுடைய வேண்டுதல் ஆடி மாதம் முடிவதற்குள் நிறைவேறும் என்பதும் நம்பிக்கை.

veppilai-vilakku

சரி, சொம்பில் வைத்திருக்கும் அந்த தீர்த்தத்தை என்ன செய்வது. நாளை ஒரு நாள் முழுவதும் அந்த தீர்த்தம் அம்பாளின் பாதங்களையே இருக்கட்டும். நாளை மறுநாள் அந்த தீர்த்தத்தை எடுத்து உங்கள் வீடு முழுவதும் மூலை முடுக்குகளில் தெளித்துவிட்டு, தீர்த்த தண்ணீரை கால் படாத இடத்தில் ஊற்றி விடலாம். அல்லது வீட்டில் செடி இருந்தால் அந்த செடியில் ஊற்றி விடலாம்.

praying-god

நாளை காலை உங்களது பூஜையில் மனதார அம்மனையும் குலதெய்வத்தையும் இப்படி தீர்த்தத்தை வைத்து, வீட்டிற்குள் அழைத்தால், மனம் விரும்பி குலதெய்வமும் அம்மனும் வீட்டிற்குள் வந்து வாசம் செய்யும். மனநிறைவோடு இந்த பூஜையை செய்து முடித்துவிட்டு வீட்டின் அருகில் இருக்கக்கூடிய கோவிலுக்கு, முடிந்தால் நாளை மாலை சென்று அம்பாள் தரிசனம் செய்யலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -