ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டு வேலைக்கு சென்று போராடிக் கொண்டு இருப்பது அவர்களுடைய பணவரவை அதிகரிப்பதற்காக தான். இதற்கு காரணம் பணம் பத்தும் செய்யும். பணம் இருக்கும் இடத்தில் அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும் என்று கூறப்படுவது தான். அப்படிப்பட்ட பணத்தை தாராளமாக பெறுவதற்கு பௌர்ணமி தினத்தன்று ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பொதுவாக பௌர்ணமி என்பது பெண் தெய்வங்களுக்குரிய வழிபாடு நாளாக கருதப்படுகிறது. அந்த வழிபாட்டை பௌர்ணமி என்று இருக்கிறதோ அன்றைக்கு தான் செய்ய வேண்டும். மாலை நேரத்தில் இந்த தீபத்தை ஏற்றலாம் அல்லது பிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்த தீபத்தை ஏற்றலாம். இந்த தீபத்தை ஏற்றுவதற்கு முன்பாக ஒரு சிறிய தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தாம்பர தட்டை சுற்றி மஞ்சள் சந்தனம் வைத்துக் கொள்ளுங்கள். அந்த தாம்பாளத்திற்கு நடுவிலும் ஒரு மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். ஆக மொத்தம் ஐந்து பொட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
நடுவில் வைத்திருக்கும் பொட்டிற்கு மேலாக ஒரு கண்ணாடி டம்ளரை வைக்க வேண்டும். இந்த பரிகாரத்திற்கு கண்ணாடி டம்ளர் தான் கண்டிப்பான முறையில் வேண்டும். வேறு எந்த டம்ளரையும் உபயோகப்படுத்த கூடாது. நடுவில் வைத்திருக்கும் குங்குமத்திற்கு மேலாக இந்த கண்ணாடி டம்ளரை வைத்து அது நிறைய கல் உப்பை கொட்டி கொள்ளுங்கள். பிறகு அதற்கு நடுவே மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த குங்குமத்திற்கு மேலாக ஐந்து ரூபாய் நாணயம் ஒன்றை வைத்து அந்த ஐந்து ரூபாய் நாணயத்திற்கும் மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். இந்த நாணயத்திற்கு மேலாக ஒரு கிழியாத நல்ல வெற்றிலையாக பார்த்து ஒரு வெற்றிலையை வைத்துக் கொள்ள வேண்டும். அந்த வெற்றிலைக்கு நடுவிலும் மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். வெற்றிலையின் நுனியானது வடக்கு அல்லது கிழக்கு பார்த்தவாறு தான் இருக்க வேண்டும். அடுத்ததாக அந்த வெற்றிலைக்கு மேலே ஒரு அகல் விளக்கை வைத்து அந்த அகல் விளக்கிற்கும் மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும்.
அந்த அகல் விளக்கில் சுத்தமான நெய்யை ஊற்றி மஞ்சள் நிற திரியை போட்டு “ஓம் ஸ்ரீ மகாலட்சுமி தாயே போற்றி” என்னும் மந்திரத்தை மனதார கூறி அந்த தீபத்தை ஏற்றி மகாலட்சுமி தாயாரை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும் .இந்த தீபத்தை பௌர்ணமி தினத்தில் மட்டும் ஏற்றினால் போதும். விருப்பம் இருப்பவர்கள் வெள்ளிக்கிழமை தோறும் கூட ஏற்றலாம். அடுத்த பௌர்ணமி வந்த பிறகுதான் இந்த கண்ணாடி கிண்ணத்தில் இருக்கக்கூடிய கல் உப்பை ஓடுகின்ற நீரில் போட்டுவிட்டு புதிதாக கல்லுப்பை எடுத்து வைத்து தீபம் ஏற்ற வேண்டும்.
இப்படி தொடர்ச்சியாக மூன்று, ஐந்து, ஏழு என்ற எண்ணிக்கையில் பௌர்ணமி தினங்களில் தீபம் ஏற்றி வழிபடுபவர்களுடைய வாழ்க்கையில் இருக்க கூடிய பிரச்சனைகள் நீங்குவதோடு மட்டுமல்லாமல் செல்வ செழிப்புடன் வாழ முடியும்.
இதையும் படிக்கலாமே: ஆடி பௌர்ணமி பரிகாரம்
மிகவும் எளிமையான இந்த தீப வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுக்கு மகாலட்சுமி மற்றும் அம்மனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.